குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்!

94
குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்!

குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்!

ஜனவரி 12 ஆம் தேதியான இன்றைய ராசி பலன் (12-01-2023) – நங்கநல்லூர் டாக்டர் பஞ்சநாதனின் ராசி பலன் கணிப்பு…

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்…

மேஷம்: பூர்வ புண்ணிய அனுக்கிரகம் உண்டு. திடீர் உதவிகள் கிடைக்கும். தான, தர்மம் நிறைய செய்ய வேண்டும். உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு. தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வரும். வெளிநாட்டு வாய்ப்பு கூடி வரும்.

ரிஷபம்: வாகன வசதி உண்டு. நலமான நாள். உத்தியோக உயர்வு உண்டு. பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. ஹார்மோன் பிரச்சனை வரலாம். மகப்பேறு மருத்துவர்களுக்கு புகழ் கிடைக்கும். வியாபாரிகள் அளவாக முதலீடு செய்ய வேண்டும்.

மிதுனம்: துணிச்சலுக்கு வெற்றி கிடைக்கும். உடன் பணியாற்றுபவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். எதிலும் தீர்க்கமான முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. நன்மையான நாள். அனுகூலமான நாள்.

கடகம்: மகிழ்ச்சியான நாள். நல்ல தனவரவு வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. எதிர்ப்பவர்கள் அனுசரித்து செல்வார்கள். தொழில் முயற்சி வெற்றி பெறும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும்.

சிம்மம்: பரபரப்பு, நெருக்கடி இருக்கும். நல்ல வேலை வாய்ப்பு அமையும் ஒரு நாள். நல்ல ஆலோசனை கிடைக்கும். பிள்ளைகளால் சிக்கல் வரும். மகன், மகளின் செயல்பாடுகளால் பிரச்சனை வரும். தொழில் முயற்சிகள் வெற்றி பெறும் நாள்.

கன்னி: பல மாற்றங்களை சந்திக்க கூடிய ஒரு நாள். வேலையில் இடமாற்றம் உண்டு. வெளிநாட்டு பயணங்கள் கூடி வரும். நல்லவர்களின் ஆலோசனை வாழ்க்கையை உயர்த்தும். பெண்களுக்கு முன்னேற்றமான நாள்.

துலாம்: எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும் நாள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. பிஸினஸில் கொடுக்கல் வாங்கல் நன்றாக இருக்கும். அனுகூலமான நாள்.

விருச்சிகம்: அனுகூலமான நாள். புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். பதவி உயர்வுக்கு முயற்சிக்கலாம். அனைவரும் மதிக்க கூடிய ஒரு நாள். உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு கூடி வரும்.

தனுசு: பூர்வ புண்ணிய அனுக்கிரகம் கிடைக்கும். குல தெய்வத்தின் அனுக்கிரகம் கிடைக்கும். உயர் கல்வி படிக்கும் வாய்ப்பு உண்டு. நல்ல முன்னேற்றம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

மகரம்: பொறுமையாக செயல்பட வேண்டும். நிதானம் தேவை. எதையும் தைரியமாக சமாளிக்க வேண்டும். வண்டி, வாகனங்களில் கவனம் தேவை. வேலை பார்க்கும் இடத்தில் அனுசரித்து செல்ல வேண்டும்.

கும்பம்: அனுகூலமான நாள். ரொம்ப சந்தோஷமான் நாள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சொத்து, சுகம் வாங்கும் யோகம் உண்டு. கல்வியில் முன்னேற்றம் உண்டு.

மீனம்: புதிய வேலை வாய்ப்பு கிடைக்க கூடிய நாள். பெண்களுக்கு மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் சந்தோஷம் உண்டு.