வராத கடன் தீர செவ்வாய் அன்று முருகப் பெருமானுக்கு உகந்த இந்த ஐந்து பொருளைகளை மறக்காமல் வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள். கடன் தீர்ந்து பண வரவை அதிகரிக்கும் வழிபாடு. கடன் தீர செவ்வாய் விரத வழிபாடு…
இந்த வழிபாடு விரதம் இருந்து செய்பவர்கள் செய்யலாம். அப்படி இருக்க முடியாதவர்கள் அசைவத்தை தவிர்த்து விட்டு எளிமையான உணவுகளை எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
இவருக்கு செவ்வரளி மலர் மாலை போட்டு அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைத்து உங்களால் இயன்ற ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை படைத்து முருகருடைய நாமத்தை ஜெபித்து நாள் முழுவதும் அவரை நினைத்து வழிபாடு செய்தாலே போதும். இத்துடன் இந்த பொருட்களையும் வாங்கி பூஜையறையில் வைக்க வேண்டும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த வழிபாட்டு நாளில் சில பொருட்களை வாங்கும் பொழுது நம்முடைய கஷ்ட நிலை மாறி விடும் என்று சொல்லப்படுகிறது அது மட்டும் இன்றி கடன் தீர்ந்து விடும் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக வீண் விரயங்களை தடுப்பதற்கு துவரையை வாங்க வேண்டும் என்று சொல்வார்கள்.
முருகனுக்கு உகந்த பொருளும் துவரையே எனவே சிறிதளவது செவ்வாய் தினத்தில் துவரை வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் செம்பு, செண்பக மலர், இதையும் இன்றைய தினத்தில் வாங்குவது சிறப்பு. முருகருக்கு உகந்த நிறம் சிவப்பு. இந்த நாளில் ஒரு சிறிய சிகப்பு நிறத்திலான துணி வாங்கி முருகர் படத்திற்கு முன் வைத்து வழிபடலாம். அதே போல் இவற்றுடன் சந்தனம் இதிலும் சிறிதளவது இன்றைய நாளில் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை எல்லாம் இந்த நாளில் நீங்கள் வாங்கும் போது உங்களுடைய பணவரவு அதிகரித்து கடன் அடைவதற்கான வாய்ப்பு பெருகும் என்றும் சொல்லப்படுகிறது. கடன் தீர்ந்து நோய் நொடியின்றி நிம்மதியான வாழ்க்கை வாழ முருகர் வழிபாடு மிகவும் சிறந்தது.
ஏழு விதமான ஆச்சரியங்கள்:
1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் கட்டாயம் வந்தே தீரும் என்பதை
அறிந்த மனிதர்கள், எதைப்பற்றியும் கவலைப்படாமல், தன் கடமைகளைச்
செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பதும் ஆச்சரியம்.
2. ஒரு நாளில் உலகில் காணும் பொருள்கள் அனைத்தும் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், அந்த பொருள்களின் மீது மோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்.
3. எந்த ஒரு செயலும் இறைவன் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன்,
கைநழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்.
4. மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன்,
அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்.
5. நரகம் போன்ற வேதனைகளை பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் மேலும் மேலும் பாவம், தவறுகளை செய்வது ஆச்சரியம்.
6. இறைவன் ஒருவனே என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை நிறை வேற்றுவது ஆச்சரியம்.
7. சொர்க்கம் போன்ற மன நிறைவான வாழ்க்கையை பற்றி அறிந்த மனிதன்,
புண்ணியங்களை சேர்க்க மறந்து உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் மட்டுமே தனது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம்.