*நாளென் செயும்*
*வினை தானென்செயு* *மெனை நாடிவந்த*
*கோளென்செயுங்* *கொடுங் கூற்றென்செயுங்*
*குமரேசரிரு தாளுஞ் சிலம்புஞ்* *சதங்கையும் தண்டையுஞ்* *சண்முகமுந்*
*தோளுங் கடம்பு மெனக்குமுன்னே*
*வந்து தோன்றிடினே*.
*வைகாசி மாதம் முருகனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்து முருகனையும் சுக்கிரனையும் வணங்க தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும்*.
*சூரியன் ரிஷப ராசியில் பிரவேசிக்கும் காலம் வைகாசி மாதம். ரிஷப ராசி என்பது நவக்கிரகங்களில் சுக்கிர பகவானுக்குரிய ராசியாக இருக்கிறது. வைகாசி தேய்பிறை சஷ்டி சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை தினத்தில் வந்தால் இந்த தினத்தில் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவர்களுக்கு சுக்கிர பகவானின் அருளும் சேர்ந்து கிடைக்கும். செல்வ சேர்க்கை அதிகரிக்கும்*.
*வைகாசி மாத தேய்பிறை சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு திருமண தடைகள் நீங்கி மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும். செய்யும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும். பொருளாதார கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். எதிரிகள் தொல்லை ஒழியும்*.
*ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தாலோ, களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகம் கடுமையாக பாதிக்கபட்டு இருந்தாலோ ஜாதகருக்கு திருமணம் வாழ்க்கை கிடைப்பதில் தடையோ தாமதமோ ஏற்படும். ஒருவேளை ஜாதகருக்கு திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு*.
*முருகனை வழிபடலாம்*.
*தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வருகின்ற வைகாசி மாதம் ரிஷப மாதமாகும். இது சுக்கிரனுக்கு உரிய மாதம்*. *விசாகன் எனும் அரக்கனை இம்மாதத்தில் முருகப்பெருமான் வதம் செய்ததால் இது வைகாசி மாதம் என அழைக்கப்படுகிறது. முருகப்பெருமானை வழிபடுவதற்கும், அவருக்கு விரதமிருப்பதற்கும் கார்த்திகை மாதம் போலவே வைகாசி மாதமும் ஒரு சிறந்த காலமாக இருக்கிறது*.
*வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை சஷ்டி அன்று முருகப் பெருமானுக்கு விரதமிருப்பது நன்மை உண்டாகும்*.
*முருகன் வழிபாடு*
*வைகாசி மாத தேய்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை பாடி முருகனை வழிபடலாம்*.
*சஷ்டி விரதம்*
*அன்றைய தினம் உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். மேலும் நவகிரக சந்நிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். இந்த விரதம் இருந்தால் திருமண தடை நீங்கி மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள். செய்யும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும்*.
வாழ்கவளமுடன்
