Monday, October 23, 2023
HomeAanmeega Thagavalgalவள்ளலார் பிறந்த தினம் ஸ்பெஷல் ! அக்டோபர் 5 !

வள்ளலார் பிறந்த தினம் ஸ்பெஷல் ! அக்டோபர் 5 !

வள்ளலார் கூறும் பாவங்கள்*
வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார், பாவங்கள் என்று 42 வகையான விஷயங்களை பட்டியலிட்டிருக்கிறார். அதனைப் பார்க்கலாம்.
🕉 நல்லவர் மனதை நடுங்க வைப்பது.
🕉 வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
🕉 தானம் கொடுப்போரைத் தடுப்பது.
🕉 சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
🕉 மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
🕉 குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
🕉 ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
🕉 தருமம் பாராது தண்டிப்பது.
🕉 ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
🕉 உயிர்க் கொலை செய்பவருக்கு உபகாரம் செய்வது.
🕉 களவு செய்பவருக்கு உளவுகள் சொல்வது.
🕉 பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
🕉 ஆசை காட்டி மோசம் செய்வது.
🕉 போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
🕉 வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.
🕉 பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
🕉 இரப்பவருக்குப் பிச்சை இல்லை என்பது.
🕉 கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
🕉 நம்பியவரை நட்டாற்றில் கை நழுவுவது.
🕉 பயந்து ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
🕉 கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
🕉 காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
🕉 கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
🕉 கருவைக் கலைப்பது.
🕉 குருவை வணங்கக் கூசி நிற்பது.
🕉 குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
🕉 கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
🕉 பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
🕉 கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
🕉 மாமிசம் உண்டு உடல் வளர்ப்பது.
🕉 கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
🕉 அன்புடையவருக்குத் துன்பம் செய்வது.
🕉 குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
🕉 வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
🕉 பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
🕉 பொது மண்டபத்தை இடிப்பது.
🕉 ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
🕉 சிவனடியாரிடம் சீற்றம் கொள்வது.
🕉 தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
🕉 சுத்த ஞானிகள் மீது அவதூறு சொல்வது.
🕉 தந்தை-தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
🕉 தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 4 =

Most Popular