Tuesday, October 24, 2023
HomeAanmeega Thagavalgalவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ! கணபதியின் உருவத்தின் அர்த்தங்கள் !

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ! கணபதியின் உருவத்தின் அர்த்தங்கள் !

பெரிய தலை – பெரியதாக சிந்தித்தல்.1ம் படி வெற்றிக்கான முதல்படி பெரிய அளவில் யோசிப்பது

பெரிய காதுகள் – நிறைய கேள்- மற்றவர் பேசுவதை எந்தவித குறுக்கீடும் செய்யாமல் கேட்டல். 2ம் படி

சிறிய கண்கள் – கூர்மையான கவனம். 3 ம் படி- மனதை திசை திருப்பாமல், எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை நிறுத்துதல்.

சிறிய வாய் – குறைவாக பேசுதல் – 4 ம் படி – நிறைய கேட்க வேண்டும், படிக்க வேண்டும் ஆனால் குறைவாக பேச வேண்டும். குறைவாகவும், அளந்தும் பேசுபவருக்கு வார்த்தைகள் சொந்தம் / கட்டுப்படும் அல்லாவிடில் வார்த்தைகளுக்கு அவர் கட்டுப்படவேண்டி இருக்கும். இதைத் தான் திருவள்ளுவர் “நா காக்க, காவாக்கால் சோ காப்பர் சொல்லிழுக்குப் பட்டு” என்ற சிக்கனமாக சொன்னார்.

ஏகதந்தம் – ஒரு தந்தம் – 5ம் படி – கெட்டதை விலக்கி நல்லதை எடுத்துக் கொள்ளல். நான்காம் படி, குறிக்கோளை அடையும் வழியில் நல்லது, கெட்டது இரண்டும் வரும். அப்போது கெட்டதை விலக்கி நல்ல வழியில் செல்ல வேண்டும்.

தும்பிக்கை – தும்பிக்கை விநாயகரின் ஐந்தாவது கரமாக கருதப்படுகிறது. ஐந்து கரத்தனை, ஆனை முகத்தானை என்று அவரை வழிபடுவதுண்டு. திறமை மற்றும் சூழ்நிலைக்கேற்ப மாறும் தன்மை – 6ம் படி – திறமையும் மற்றும் சூழ்நிலைகளுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் தன்மையும் மிகவும் இன்றியமையாதது.

கோடரி – அறுத்தல் – பாசம், பந்தம் போன்ற கட்டுப்பாடுகளை அறுத்தல் – 7ம் படி – இதன் அர்த்தம் ஒரு கர்மயோகியைப் போல் லட்சியத்தை (அ) குறிக்கோளை அடைய செயல்படுவது. அதில் இந்த கட்டுப்பாடுகளினால் வரும் தடைகளை ஒரு பற்றற்ற துறவியைப் போல் விலக்குதல்.

கயிறு – வாழ்வின் உண்மையான குறிக்கோளுக்கு இழுத்துச் செல்ல.- 8ம் படி – பெரிதாக யோசித்து சாதிக்க வேண்டிய காரியத்தில் கண்ணும் கருத்துமாக கவனத்தை நிலைநிறுத்தினால், குறிக்கோளை அடைய வழிகள் தன்னால் பிறக்கும்.

அபயம் / வாழ்த்தும் கை – வாழ்த்துதல் – 9ம் படி – விநாயகரின் அபய ஹஸ்தம் தன் பக்தர்களை காக்கும் கவசம். அவர்களின் பக்தி வழியில் வரும் எல்லா தடங்கலையும் விலக்கி அவர்களை உய்விக்கும் ஒரு வரப்பிரசாதம். – வந்தவர்களை எப்போதும் நன்றாக கவனித்து, வேண்டியவற்றை தன்னால் இயன்ற அளவில் செய்தல்.

பெரிய வயிறு – ஜீரணிப்பதற்கு – 10ம் படி – தன் குறிக்கோளை அடையும் வழியில், எத்தகைய துன்பம் வந்தாலும், எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனையையும் பொறுமையாக சகித்து ஜீரணித்தல்.

மோதகம் (கொழுக்கட்டை) – பலன்கள் – 11ம் படி – மேல் சொன்ன படிகளின் படி சென்றால் கிடைக்கும் பலன்கள் கொழுக்கட்டை எப்படி இனிக்கின்றதோ அது போன்ற தன்மை உடையது.

மூஞ்சுறு – வாகனம் – ஆசைகள் – 12 ம் படி – ஆசைகள் எல்லாருக்கும் உண்டு. ஆனால் ஆசையை கட்டுப்படுத்தாமல் அதன்படி நடந்தால் நம்மை கீழ் நோக்கி இழுத்துச் செல்லும். ஆகையால் ஆசையை கட்டுப்படுத்தி அதை நம் வழிக்கு திருப்பி நடந்தால் அது நாம் அடைய வேண்டிய குறிக்கோள் என்ற இல்லத்திற்கு அழைத்துச் செல்லும்.

பிரசாதம் – பழங்கள் – மேல் சொன்ன வழிகளின் படி நடந்தால், இந்த உலகமே வசப்படும் மற்றும் நமக்காக காத்திருக்கும்.

கஜமுக பாத நமஸ்தே !

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + 2 =

Most Popular