விரதம் என்பதன் பொருள் என்ன?

63

விரதம் என்பதற்கு ஒன்றையே எண்ணி அதில் மனம் இலயித்திருத்தல் என்பது பொருள். வரித்தல் என்பதிலிருந்தே விரதம் என்ற சொல் பிறந்தது என்று கூறலாம். வரித்தல் என்பதற்கு கை கொள்ளுதல் அல்லது ஏற்றுக் கொள்ளுதல் என்பது பொருள்.
உணவு உண்ணாமலிருத்தலும் மிதமாக உணவை உண்பதும் தீயவற்றை நீக்கி நல்லவற்றை உண்பதுமாகிய உணவு நியமமே விரதம் என அழைக்கப்படுகிறது.
ஆனால் இது விரதத்தின் முதல் நிலை என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வாறு இருத்தலே முழுமையான விரதம் என்று கூற முடியாது. மனம் அடங்கக் கற்பதே விரதத்தின் முதற்படியாகும். உணவை ஒழித்து இருப்பது விரதம் அல்ல.
எண்ணங்களை ஒடுக்கி, சிந்தைகள் ஏதும் இல்லாமல் இருப்பதே #விரதம் என்கிறார் ரமணர். குரங்கு போல் அலைந்து திரியு் மனத்தை அடக்கி நிறுத்தி இறைவன் திருவடியில் நிலைத்திருத்தலே சிறப்பான விரதத்தின் முதற்படி என்று கூறலாம்.
வயிறு நிறைந்திருக்கும் போது விரதம் பற்றி யோசிப்பதும் பேசுவதும் சுலபம் என்பார்கள். அது எவ்வளவு உண்மை என்பது உணர்ந்தவர்களுக்குத் தெரியும். பெண்களையும் விரதத்தையும் பிரிக்க முடிவதில்லை.
எந்தக் கடவுளும் பட்டினி இருந்து, தன்னை வேண்டச் சொல்வதில்லை ஆனாலும், தம்மை வருத்தி, உணவைத் தவிர்த்து, பசியை சகித்துக் கொள்கிற விரதங்கள், அவர்களது பிரார்த்தனையின் முக்கிய அங்கம். கடவுளின் பெயரைச் சொல்லிக் கடைப்பிடித்தாலும், விரதம் என்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான்.
விரதம் என்பது மதத்துக்கு மதம், மக்களுக்கு மக்கள் வேறுபடுகிறது. சிலருக்கு ஒரு வேளை உணவு…. இன்னும் சிலருக்கு இருவேளை உணவு. வெறும் பழங்களை சாப்பிடுவது, உப்பு தவிர்த்து இனிப்பு மட்டும் எடுத்துக் கொள்வது, அசைவம் மட்டும் தவிர்ப்பது… இப்படி விரதங்கள் பல விதம்.
‘நாம் உண்கிற உணவானது செரித்து, அதன் பிறகு அதிலுள்ள கொழுப்பு ஆற்றலாக மாற்றப்பட குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தேவை. அந்த நேரத்தை அனுமதிக்காமல், அதற்குள் அடுத்த வேளை சாப்பாட்டை உள்ளே தள்ளுவதால், உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்பானது, உடலியக்கத்துக்குத் தேவையான ஆற்றலாக உபயோகப்படுத்தப்படுவது தடுக்கப்பட்டு, அப்படியே தேங்கிப் போகும்.
தினமுமே அடுத்த வேளை உணவுக்கு இடையில் போதிய இடைவெளியை அனுமதிப்பது கூட ஒரு வகையில் விரதம்தான்…
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. சிலர் வாரம் இரண்டு முறைகூட விரதமிருப்பதுண்டு.
வாரத்தில் எல்லா நாள்களும் மூன்று வேளைகளும் வயிறு முட்ட சாப்பிட்டுப் பழகி விட்டு, திடீரென ஒரு நாள் விரதத்தைக் கடைப்பிடிப்பார்கள் சிலர். அது தவறு. விரதத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே காரம் குறைவான, பருப்பு, சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் சாப்பிட வேண்டும்.
அடுத்த நாள், இளநீர், மோர், துளசி சேர்த்த தண்ணீர் மற்றும் பழச் சாறுகள் என திரவ உணவுகளாக சாப்பிடலாம். அதற்கடுத்த நாள், காலை மற்றும் இரவு உணவுக்கு வெறும் பழங்களையும், மதிய உணவுக்கு மிதமான காரமற்ற உணவுகளையும் எடுத்துக் கொள்ளலாம். மூன்றாவது நாளில் இருந்து வழக்கமான உணவுப்பழக்கத்துக்கு மாறலாம். இது ஒரு வகையான விரதம்.
இன்னொரு முறையில், மாலை வரை வெறும் பழங்களையும் திரவ உணவுகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு, இரவுக்கு மிதமான உணவு சாப்பிடுகிற முறை.
இது தவிர இன்று விதம் விதமான விரத முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் மக்கள். சிலர் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது, உடலுக்குள் போகும் உப்பின் அளவு குறைவாக இருக்கும். எனவே உடலில் தண்ணீர் சேராது. கண்களுக்கு அடியில் வீக்கமும் இருக்காது.
இங்கிலாந்தில் இப்போது 5:2 டயட் என்பது ரொம்பப் பிரபலம். இதில் வாரம் 2 நாள்கள் விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். விரத நாளன்று ஆண்களுக்கு 600 கிலோ கலோரிகளும், பெண்களுக்கு 500 கிலோ கலோரிகளும் மட்டுமே அனுமதி. எடை குறைக்க விரும்புகிற பலரும் இதையே பின்பற்றுகிறார்கள். வாரம் ஒரு முறை விரதமிருந்தாலே உடலிலுள்ள நச்செல்லாம் வெளியேற்றப்பட்டு, உடல் சுத்தமாகும்.
பழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது. நீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது. பழங்களில் வைட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட. விரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.
செரிமானத்துக்குக் கடினமான எந்த உணவும் விரத நாள்களில் தவிர்க்கப்பட வேண்டும்.
பால், மசாலா சேர்த்த உணவுகள், அசைவம், அரிசி மற்றும் கோதுமை உணவுகள், அதிக உப்பு, காரம் சேர்த்த உணவுகள், செயற்கை உணவுகள் கூடவே கூடாது. செரிமானத்துக்கு மெனக்கெடுவதைத் தவிர்த்து, உள் உறுப்புகளை சுத்தம் செய்வதற்கு உடல் அந்த நேரம் எடுத்துக் கொள்ளும். முதுமை தள்ளிப் போகும். இன்சுலின் எதிர்ப்பு சக்தி மேம்படும். விரத நாள்களில் மிதமான, பாதகமில்லாத உணவுகளை எடுத்துக் கொள்வதன் விளைவாக, ஆரோக்கியம் மேம்படுவதுடன், ஆயுளும் கூடும்.
விரதமிருக்கும் போது பெரும்பாலும் பழங்கள் அல்லது திரவ உணவுகளையே எடுத்துக் கொள்கிறோம். அரிசி சாதம், ரொட்டி, இட்லி, தோசை, சட்னி, ஊறுகாய், அப்பளம், காரசார புளியோதரை, காரக்குழம்பு போன்றவை தவிர்க்கப்படுவதால் உடலில் தண்ணீர் சேர்வதும் தவிர்க்கப்படுகிறது.
நமது உடலானது தசைப்பகுதிகளில் தண்ணீரைச் சேர்த்து வைத்திருக்கும். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உண்ணும்போது, அவற்றில் உள்ள உப்பும், தன் பங்குக்கு தண்ணீரை சேமிக்கும். எனவே விரதமிருக்கும் போது எடை பார்த்தால், அதில் சில கிலோ குறைவாகத்தான் காட்டும். ஆனால், அது கொழுப்பு கரைந்ததாக அர்த்தமாகாது.
அது அத்தனை மணி நேரம் விரதம் இருந்த பலனையே கெடுத்து விடும். விரதம் என்பது உணவு சார்ந்த ஒருவித ஒழுக்கக் கட்டுப்பாடு. குறைந்த கலோரி உணவுகளை உண்ணும்போது, ஆயுள் அதிகரிக்கிறது. அதன் விளைவாக முதுமைத் தோற்றமும் தள்ளிப்போடப்படுகிறது. எனவே, விரதத்தை முடித்த பிறகும், மிதமான உணவுகளை அளவோடு எடுத்துக் கொள்வதுதான் நல்லது.
குழந்தைகள், டைப் 1 நீரிழிவு பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள்… தசை நலிவு நோயால் பாதிக்கப்பட்டோர்.
வாரத்தில் ஏழு நாட்களில் என்ன பலன் இருக்கின்றன என்று பார்ப்போம்.
சூரியனுக்கு உகந்த நாள் சூரிய நமஸ்காரம் செய்யலாம். சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து சூரியனுக்கு படைக்கலாம். பகலில் ஒரு வேளை உணவருந்தலாம்.
சோம வார விரதம் ஆகும் சிவபெருமானுக்கு உகந்த இந்த விரதத்தை கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தில் அனுஷ்டிக்க வேண்டும். சிவாலயங்களுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.
செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் செவ்வாய்க் கிழமை முருகன் / அங்காரகனை வேண்டி விரதம் இருக்க நல்ல பலன் கிடைக்கும்.
புதனுக்குரிய தெய்வம் விஷ்ணு. அன்றைய நாளில் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து விரதம் இருந்தால் கல்வி, அறிவு பெருகும்.
குரு பகவானுக்குரிய நாள் வியாழன், இந்த நாளில் விரதம் இருந்தால் எல்லா காரியங்களும் கைகூடும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை, வஸ்திரம், மஞ்சள், புஷ்பம் ஆகியவற்றை சாற்றி வழிபட வேண்டும்.
இந்த நாளில் விரதம் இருப்பது சுக்ரனுக்கும், அம்பாளுக்கும் உரியது. வெள்ளிக்கிழமையன்று சுக்ரனுக்கு விரதம் இருந்தால் சுபிட்சமான வாழ்வு உண்டாகும். கடன் தொல்லை முற்றிலும் நீங்கும்.
அன்று வேங்கடவனை வழிபட்டால் எல்லா வித சிறப்பும் பூர்த்தி அடையும்.