லட்சுமி வாசம் செய்யும் பொருட்கள் என்னென்ன தெரியுமா?
லட்சுமி வாசம் செய்கின்ற பொருட்கள் தெரிந்து கொண்டு அவற்றிற்கு மதிப்பளித்து வாழ்க்கையில் மென்மேலும் உயர்வோம். ஆனாலும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடி பணிந் தவர்களுக்கே அவள் அருள் புரிகின்றாள்.
வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரண கும்பம், தாமரை,
தாமரை மணி, தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பவளமல்லி, மாதுளை, திரு நீற்றுபச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர்,
அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு,
ஜெபமாலை, வலம்புரிச்சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், பச்சைக்கற்பூரம், கலசம், சிருக்சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு,
பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம்,
பூலாங்கிழங்கு, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானைகொம்பு மண், ஆல அடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), ஆலவிழுது, தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய்,
கொம்பரக்கு,
நெற் கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, பட்டு, தையல் இல்லாததுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர்,
கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, கெண்ட, வாசல் நிலை நெற்றி போன்ற இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். நமக்குத் காரியங்கள் நிறைவேறவும், மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கவும், ஒவ்வொரு உருவத்தில் தேவிஸ்ரீ மகாலட்சுமி வடிவெடுத்து வருகிறாள். மகாலட்சுமி தேவியை இல்லத்தில் படையல் இட்டு மகிழ வைத்துத் தாயை அம்மா என்றழைப்பது போல அழைப்போம்.
1. தனலட்சுமி:
பொங்கு தனகரத்தாள் பொற்புடைய சக்கரத்தாள்
எங்கு நலம் தருகின்ற எழிற்கரத்துத் தாமரையாள்
தங்குகின்ற கமலத்தில் தளிரடிகள் தாம் வைத்தாள்
தங்கரத்தால் தண்மைதரு தனமகளே போற்றியம்மா!
2. ஆதிலட்சுமி:
சோதிமிக வுடையாள் சோம்பலற்ற மனமுடையாள்
தாதியரின் புடைசூழத் தாவிவரும் தார்மிகத்தாள்
பூதிமிகு மலரபய பூரண நல் வரதத்தாள்
ஆதியிலும் ஆதியனே ஆதித்திரு போற்றியம்மா!
3. தான்யலட்சுமி:
எண்கரத்தின ஏற்புடைய எழிற்படைகள் ஏற்றவளே
பண்புடைய பகவதியே பலக்கதைகள் பெற்றவளே
கண்படைத்த பயனாகக் களிப்படைய வந்தவளே
மண் செழிக்கத் தானிய நல் மணிதந்தாய போற்றியம்மா!
4. வீரலட்சுமி:
சூலமொரு அபயத்தாள் சூழ்ச்சியற்ற வரதத்தாள்
காலனவன் கால்நடுங்கு கதிர் ஒளியின் சக்கரத்தாள்
நீலத்திரை அமுதத்தாள் நீங்கா நற்புகழுடையாள்
மாலவனார் மனமகிழும் வீரத்திரு போற்றியம்மா!
5. கஜலட்சுமி:
தடாகத் தாமரையாள் தண்மைமிகு தவவடிவாள்
அடா அத் துயரமதை அழிக்கின்ற அருளடியாள்
விடாநற் றனமழையாள் விளங் கானைத் துடியடியாள்
படாகக் கரியிவர்வாள் பண்ணடிகள் போற்றியம்மா
6. சந்தான லட்சுமி:
அன்புடையாள் அறுகரத்தாள் அன்னையிலும் அன்னையவள்
இன்புடையான் கேடகத்தான் இடர்நீக்கு வாளுடையாள்
மன்புகழின்மலர்க்கதர்தே மகவுடனே அமுதுடையாள்
சந்தனத்தாய் சந்தானப் பெருக்குடையாய் போற்றியம்மா
7. விஜய லட்சுமி:
வாளுடன் சாரங்கம் வார்புகழின் சுதர்சனமும்
ஆளுடைய கேடயமும் ஆண்டாருளும் எண்கரத்தி
நாளுடனே நாற்புகழும் நாரணர்க்குத் தாமணித்த
தான் மலரும் தனிவெற்றித் தாயே நீபோற்றியம்மா
8. ஐஸ்வர்ய லட்சுமி:
நாற்கரத்து நாயகியாள் நாற்றிசையின் நல்வினையாள்
கார்மேகம் போல் தனத்தைக் காத்திடவே பெய்திடுவாள்
நூற்புலவர் தம்முகத்தான் நூதனத்தின் ஒருவடிவாள்
பாற்பணியும் அயிசுவரியப் பாவையளே போற்றியம்மா
