வள்ளலாரின் வாழ்க்கை போதனைகள் என்னென்ன?
வாழ்க்கைக்கு தேவையான ரிஷிகள், முனிவர்கள், மஹான்கள், முன்னோர்கள் நமக்கு போதனைகளாக வகுத்து சென்றுள்ளனர். அவர்களில் வள்ளலாரும் வாழ்க்கைக்கு தேவையான போதனைகளை வகுத்துள்ளார். அது என்னென்ன என்று பார்க்கலாம் வாங்க….
தேவைக்கு செலவிட்டு. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய். ஜீவகாருண்யத்தை கடைபிடிக்க வேண்டும். இனி அநேக ஆண்டுகள் வாழப் போவதில்லை. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு. அவ்வப்போது பரிசுகள் அளி. அவர்களிடம் அதிகம் எதிர்பாராத. அடிமையாகவும் ஆகாதே.
பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவே, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிர்க்கலாம். புரிந்து கொள்ள வேண்டும்.
அதைப் போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம். உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென வேண்டிக் கொள்ளலாம். பொறுத்துக் கொள். அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார். “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள். இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
“எல்லாமே நான் இறந்த பிறகு தான்”என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர். எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ். இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்! வாழ்வை கண்டு களி! ரசனையோடு வாழ்! வாழ்க்கை வாழ்வதற்கே!
நான்கு நபர்களை புறக்கணி: மடையன், சுயநலக்காரன், முட்டாள், ஓய்வாக இருப்பவன்.
நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே: அனாதை, ஏழை, முதியவர், நோயாளி.
நான்கு நபர்களை வெறுக்காதே: தந்தை, தாய், சகோதரன், சகோதரி.
நான்கு விசயங்களை குறை: உணவு, தூக்கம், சோம்பல், பேச்சு.
நான்கு விசயங்களை தூக்கிப் போடு: துக்கம், கவலை, இயலாமை, கஞ்சத்தனம்.
நான்கு விசயங்களை பழகு: தியானம், நூல் வாசிப்பு, உடற்பயிற்சி, சேவை செய்தல்.
