ராகு கேது உணர்த்துவது என்ன?

63

ராகு கேது உணர்த்துவது என்ன?

ராகு – உணர்ச்சிகளை வெளிப்படுத்தும்.
கேது – சுருக்கிக் கொள்ளும்.
ராகு – பாம்பின் தலை விஷம் அதிகம்.
கேது – பாம்பின் வால் பகுதி (வயிற்றில் தங்கிய அமிர்தமும் இருக்கும்)
ராகு – அத்தனைக்கும் ஆசைப்படு.
கேது – அதீத ஆசைகளை விட்டுவிடு.
ராகு – அனைத்தையும் உறிஞ்சிக் கொள்ளும்.
கேது – ஒவ்வொருவரின் உண்மை குணத்தை வெளியே துப்பும் ..
ராகு – புற வாழ்க்கை (லௌகீகம், ஆடம்பரம் வளர்ச்சி)
கேது – அகவாழ்க்கை (தன்னை உணர்தல்) ..
ராகு – விஷமுள்ள உயிரினங்கள் (பூரான் பாம்பு)
கேது – விஷமற்ற நான்குகால் ஜீவன்கள் நாய் பூனை.
ராகு – காமத்தின் உச்சம்.
கேது – உச்சநிலையில் தன்னிலை மறத்தல்.
ராகு – மாயாவி
கேது – மாயத் துறவி
ராகுதசை – வாழ்க்கையில் பற்றுதலை உருவாக்கும்.
கேது தசை – எதைப் பற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைக்கும்.
ராகுவும் கேதுவும், மனித வாழ்க்கையின் அனைத்து விஷயங்களிலும் இருக்கின்ற புரிதலை கற்றுக் கொடுப்பவை.

ராகு – கேது தோஷ நிவர்த்தி சில திருத்தலங்கள்:

 1. நாகப்பட்டினம் – ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் கோயில் – நாகப்பட்டினம் கடற்கரை அருகில் அமைந்துள்ளது.
 2. கும்பகோணம் – ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில் – கும்பகோணம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
 3. திருக்காளத்தி – ஸ்ரீ காளத்திநாதர் கோயில் – ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.
 4. திருநாகேஸ்வரம் – ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில் – கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது.
 5. பேரையூர் – ஸ்ரீ நாகநாதர் கோயில் – புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.
 6. ஊஞ்சலூர் – ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில் – ஈரோடு மாவட்டம், கொடுமுடியிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது.
 7. காஞ்சிபுரம் – ஸ்ரீ மகாகாளேஸ்வரர் கோயில் – காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் அருகில்.
 8. திருக்கண்ணங்குடி – ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோயில் – கீழ்வேளூரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
 9. கெருகம்பாக்கம் – ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில் – சென்னை குன்றத்தூர் அருகில் உள்ளது.
 10. ஸ்ரீ வாஞ்சியம் – ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயில் – கும்பகோணம் அருகில் உள்ளது.
 11. பாமணி – ஸ்ரீ நாகநாதர் கோயில் – மன்னார்குடிக்கு வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 12. நாகமுகுந்தன்குடி – ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில் – சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.
 13. கோடகநல்லூர் – ஸ்ரீ காளத்தீஸ்வரர் கோயில் – நெல்லை மாவட்டத்தில் நெல்லையிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 14. பெத்தநாகபுடி – ஸ்ரீ நாக நாதேஸ்வரர் கோயில் – சோளிங்கரில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
 15. கரிசூழ்ந்தமங்கலம் – ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயில் – திருநெல்வேலி – பாபநாசம் சாலையில், பத்தமடையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
 16. நயினார்கோயில் – ஸ்ரீ நாகநாதர் கோயில் – பரமக்குடியிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
 17. திருப்பாம்புரம் – ஸ்ரீ திருப்பாம்புரேஸ்வரர் கோயில் – கும்பகோணம் பேரளம் வழியாக சென்று திரும்பாம்புரம் திருத்தலத்தை அடையலாம்.
 18. ஆம்பூர் – ஸ்ரீ நாகரத்தினசாமி கோயில் – வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடிக்கு அருகில் உள்ளது.
 19. திருக்களாஞ்சேரி – ஸ்ரீ நாகநாதர் கோயில் – தரங்கம்பாடிக்கு அருகில் உள்ளது.
 20. நாகூர் – ஸ்ரீ நாகநாதர் கோயில் – நாகை மாவட்டத்தில், நாகப்பட்டினத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

  பூவரசன்குப்பம் – ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில் – விழுப்புரம் மாவட்டத்தில் சிறுவந்தாடு அருகில் உள்ளது.