Monday, October 16, 2023
HomeAanmeega Thagavalgalவண்டியிலிருந்து விழுவது போன்று கனவு வந்தால் என்ன பலன்?

வண்டியிலிருந்து விழுவது போன்று கனவு வந்தால் என்ன பலன்?

வண்டியிலிருந்து விழுவது போன்று கனவு வந்தால் பலன்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கனவுகள் வரும். அப்படி வரும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. ஒரு சிலருக்கு குழந்தை பிறப்பது போன்று கனவு வரும். ஒரு சிலருக்கு இறந்தவர்கள் கனவில் வருவார்கள். இன்னும் சிலருக்கு காதலியுடன் சந்தோஷமாக இருப்பது போன்று கனவு வரும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நாம் இந்தப் பதிவில் இது போன்ற சில கனவு பலன்கள் குறித்து காண்போம்.

  1. வண்டியிலிருந்து விழுவது போன்று கனவு வந்தால் உறவுகளிடம் கொடுக்கல் – வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும் என்பது அர்த்தம்.
  2. சண்டை போடுவது போன்று கனவு வந்தால் குடும்ப உறுப்பினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும் என்பது அர்த்தம்.
  3. கர்ப்பமாக இருக்கும் போது குழந்தை பிறந்து கையில் இருப்பது போன்று கனவில் வந்தால் சுப செய்திகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  4. குழந்தை படியிலிருந்து விழுந்து இறப்பது போன்று கனவு வந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் தீரும் என்பதைக் குறிக்கிறது.
  5. மற்றொருவர் வீட்டில் அவர்களுக்கு தெரியாமல் வெள்ளரிக்காய் பறிப்பது போன்று கனவு வந்தால் தொலைந்து போன பொருட்கள் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  6. கார் வாங்கி ஊர் சுற்றுவது போன்று கனவு வந்தால் தேவையற்ற செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும் என்பது அர்த்தம்.
    யானையை கனவில் கண்டால் நன்மைகள் நடக்கும்.
  7. இறந்தவர்களை கனவில் கண்டால் உடல் ஆரோக்கியம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.
  8. எனது மூத்த சகோதரி என்னை அரிவாளால் வெட்டுவது போன்று கனவு வந்தால் உடன் பிறப்புகளிடம் ஏற்பட்ட மன வருத்தங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  9. பிறருக்கு பணம் கொடுப்பது போன்று கனவு வந்தால், புதிய முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
  10. இறந்தவர்களை வாங்க என்று அழைப்பது போன்று கனவு வந்தால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
  11. நீங்கள் இறப்பது போன்று கனவு வந்தால் மனதில் இருந்து வந்த கவலைகள் அனைத்தும் நீங்கும் என்று அர்த்தம்.
    முருங்கை இலையை கனவில் கண்டால் சுபிட்சமான பலன்கள் உண்டாகும்.
  12. அலுவலகத்தை ஒருவர் தீ வைத்து எரிப்பது போன்று கனவு வந்தால் உத்தியோகத்தில் மாற்றமான சூழல் உண்டாகும்.
    வயலுக்கு நடுவில் ரயில் தண்டவாளம் இருப்பது போன்று கனவு வந்தால் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்று அர்த்தம்.
  13. குலசாமிக்கு மாலை போடுவது போன்று கனவு வந்தால் மனதில் நினைத்த காரியம் ஈடேறும்.
  14. பாதையை மறந்துவிட்டு வழி தெரியாமல் பயப்படுவது போன்று கனவு வந்தால் நெருக்கமானவர்களிடம் மனதில் உள்ள கருத்துக்களை பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
  15. சமாதியை சுற்றி செம்பருத்தி பூ வைப்பது போன்று கனவு வந்தால் செய்யும் முயற்சிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும் என்பது அர்த்தம்.
  16. பரீட்சையில் தோல்வி அடைந்தது போன்று கனவு கண்டால் செய்யும் முயற்சிகளால் மாற்றமான சூழல் உண்டாகும்.
    மல்லிகைப் பூவை கனவில் கண்டால் சுபகாரியம் தொடர்பான முயற்சி கைகூடும்.
  17. பால் கனவில் வந்தால் மகிழ்ச்சியான செய்திகள் வரப்போகிறது என்பதை குறிக்கும்.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − ten =

Most Popular