Friday, October 27, 2023
HomeAanmeega Thagavalgalதிவ்ய சேதங்கள் என்றால் என்ன, அஷ்ட திவ்யதேசங்கள் எங்குள்ளது?

திவ்ய சேதங்கள் என்றால் என்ன, அஷ்ட திவ்யதேசங்கள் எங்குள்ளது?

திவ்ய சேதங்கள் என்றால் என்ன, அஷ்ட திவ்யதேசங்கள் எங்குள்ளது?

திவ்ய தேசம் என்றால் என்ன?

ஆழ்வார்களால் தத்தம் திவ்ய பிரபந்தத்தில் போற்றி பாடிய (மங்களாசாசனம் செய்த) திருத்தலங்களை திவ்யதேசம் என்று அழைப்பார்கள். நம்மாழ்வாருக்கு – இருந்த இடத்தில் தானே வந்து காட்டி அருளினான் என்பார்கள். அவர் எங்கும் போய் அனுபவிக்கும் நிலைமை இல்லாமல் பெருமாளே அவர் பாடலை பெற தான் வந்து ஏங்கி நின்றது அதிகம்.

திருவாய்மொழி சுவாமி நம்மாழ்வாரின் பிரதான பாடல்கள்கள் அமைந்தது. வைணவத்தின் ஆணிவேராக விளங்குவது. 1000 பாசுரங்கள். மாறன், சடகோபன் என்று அழைக்கப்படுபவரும் சுவாமி நம்மாழ்வார் கடை ஆழ்வார் என்றும் மன்னன் கலியன் என்று அழைக்கப்படும் திருமங்கை ஆழ்வார் தானே சென்று பாடிய திவ்ய தேசங்கள் அதிகம். பெரிய திருமொழி என்பது இவருடைய 1000 பாசுரங்கள்.

இவர்களை தவிர அரங்கனை மட்டுமே பாடியவர் தொண்டர் அடிப்பொடி ஆழ்வார். மற்ற ஆழ்வார்கள் பாடிய அத்தனையும் முறையே முதலாயிரம் மற்றும் இயற்பாவில் உள்ளது. நான் வைணவத்தில் பிரதானமாக அழைக்கப்படும். பன்னிரு ஆழ்வார்களில் பதினோரு ஆழ்வார்கள் எந்தெந்த கோவில் இறைவனை எல்லாம் பாடி இருக்கிறார்களோ அந்தந்த கோவில்கள் திவ்யதேசம் எனப்படும். மதுரகவி ஆழ்வார் மட்டும் எந்த பாடலிலும் திருமாலைப் பாடவில்லை. மாறாக அவர் தனது ஆச்சாரியாராகிய நம்மாழ்வாரை மட்டுமே பாடி இருக்கிறார்.

மொத்தம் 108 திவ்யதேசங்கள் உள்ளன, திருப்பாற்கடல் மற்றும் பரமபதம் என்னும் திருவைகுண்டம் உட்பட. இந்த பூவுலகில் 106 உள்ளன — பாரத தேசத்தில் 105, நேபாளத்தில் சாளகிராமம் எனப்படும் திருப்பிரிதி என்ற திவ்யதேசம் உள்ளது.

அஷ்ட திவ்ய தேசம் என்றால் என்ன?

இந்த 108 ஆலயங்களில், எட்டு ஆலயங்களில் பெருமாள், சுயம்புவாக கோவில் கொண்டிருக்கிறார். அந்தக் கோவில்கள், அஷ்ட சுயம்பு திவ்ய தேசங்கள்’ எனப்படுகின்றன. அவற்றைக் காணலாம்…
* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் உள்ள வானமாமலைப் பெருமாள் கோவில்.
* ஸ்ரீமுஷ்ணத்தில் அருள்பாளிக்கும் பூவராகப் பெருமாள் கோவில்.
* திருவரங்கத்தில் உள்ள அரங்கநாதர் கோவில்.
* புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாஜலபதி கோவில்.
* பத்ரிநாத்தில் அமைந்துள்ள பத்ரிநாராயணர் கோவில்.
* நேபாளத்தில் சாளக்கிராமம் என்ற இடத்தில் உள்ள முக்தி நாராயணர் கோவில்.
* புஷ்கரம் என்ற இடத்தில் உள்ள ஸ்ரீபெருமாள் ஆலயம்.
* நைமிசாரண்யத்தில் உள்ள தேவராஜன் திருக்கோவில்.
இது தவிர.
வராஹ ஸ்தலங்கள்:

திருக்கடல்மல்லை
திருஇடவெந்தை
நரசிம்ம ஸ்தலங்கள்:
சோழ சிம்மபுறம் – சோளிங்கர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + twenty =

Most Popular