நகை அடகு கடைக்கு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
வர வர ஸ்வாகா என்று சொல்லிக் கொண்டு வாரங்கள், நீங்கள் அடகு வைத்த தங்க நகைகளை விரைவில் மீட்டு விடலாம்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பண நெருக்கடி வரும். பணத் தேவைக்காக மனிதன் வங்கிக் கடன், கந்து வட்டி கடன், நகை, வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை அடகு வைத்து அவசர தேவைக்கு பணம் வாங்குகிறான்.
மேலும் படிக்க: 3 மாதத்தில் திருமணம் நடைபெற இதோ பரிகாரம்!
இப்படி அவசர தேவைக்காக அடகு வைத்த நகை, வீடு, நிலம் போன்றவற்றை மீட்க முடியாமலே தவிக்கும் நிலை ஏற்படுகிறது. ஒருமுறை நகையை மீட்டாலும், அந்த நகையானது திரும்ப திரும்ப அடகு கடைக்கு செல்வது ஒரு சிலருக்கு வாடிக்கையாக இருக்கிறது.
இதற்கு என்ன தான் தீர்வு என்று பார்க்கிறீர்களா?
எளிமையான பரிகாரம் தான், ஒரு முறை அடகு வைக்கப்பட்ட தங்க நகையாக இருந்தால், அதனை திருப்பிய பிறகு உப்பு வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் மூடி வைக்க வேண்டும். வீட்டில் பூஜை செய்த பிறகு அந்த நகையை எடுத்து பத்திரமாக பீரோவிலோ, லாக்கரிலோ வைத்து பூட்டி விடலாம். அதன் பிறகு அந்த நகையானது அடகு கடைக்கு செல்லவே செல்லாது.
இதையும் படிங்க: யாரை எத்தனை முறை வலம் வர வேண்டும் தெரியுமா?
அடகு வைக்கப்பட்ட வீடு, நிலம், நகைகள் போன்றவற்றை எப்படி மீட்பது என்று தவிப்பர்களுக்கு இந்த பரிகாரம்….
ஒரு வெள்ளை தாளில், அடகு கடையின் பெயர் அல்லது அடகு வைக்கப்பட்ட வங்கியின் பெயர், அடகு எண், தேதி, அடகு வைக்கப்பட்ட பொருள் ஆகியவை என்ன என்று தெளிவாக எழுதி வீட்டு பூஜையறையில் காமாட்சி விளக்கை ஏற்றி வைத்து அந்த விளக்கின் பாதத்தில் தகவல்கள் எழுதிய அந்த வெள்ளை பேப்பரை வைத்து வணங்க வேண்டும்.
அதன் பிறகு நகையாக இருந்தால் நகையின் பெயரை குறிப்பிட்டு அதோடு வர வர ஸ்வாக என்று 108 முறை உச்சரிக்க வேண்டும். உதாரணத்திற்கு 1 பவுன் சங்கிலியாக இருந்தால் 1 பவுன் சங்கிலி வர வர ஸ்வாக, 1 செண்ட் நிலமாக இருந்தால் 1 செண்ட் நிலம் வர வர ஸ்வாகா என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு வாரம் வெள்ளிழமையில் இந்த பரிகார பூஜையை செய்து வர வேண்டும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்: மன நோய்க்கு மருந்தாகும் சோட்டானிக்கரை பகவதி அம்மன்
தொடர்ந்து 3 பௌர்ணமி நாட்களில், அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று பைரவரை செவ்வரளி பூ கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டு வர வேண்டும். அப்படி செய்து வந்தால் செல்வம் கூடிக் கொண்டே வரும். அதோடு, பேரும் புகழும் கிடைக்கும். மேலும், அடகு வைத்தவற்றை விரைவில் மீட்டு விடலாம்.
