Sunday, October 15, 2023
HomeAanmeega Thagavalgalஎதை திருட வேண்டும்?

எதை திருட வேண்டும்?

எதை திருட வேண்டும்?

நாம் இக்கலி காலத்தில்லல்வா பிறவி எடுத்து வந்திருக்கிறோம். அதுவும் கிடைத்ததற்கரிய மானிடப் பிறவியாக அல்லவா! இக்கலி கால வாழ்க்கைக்கு நமக்கு எவ்வளவோ தேவைப்படுவதாக இருக்கு! என்ன செய்ய?, ஆசாபாசங்களை ப் பற்றிக் கொள்கிறோம் அல்லவா? ஆகவே, அவரை நாடித், தேடிப்பிடித்து அவரைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியதுதான்! அவரிடம் இருப்பவை யாவற்றையும் எப்படியாவாவது திருடிவிடுங்கள்! அவரிடமிருந்து மொத்தத்தையும் கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை! நேரம் பார்த்தறிந்து அபகரியுங்கள்!

நேரம் வாய்க்கா விட்டால், எப்பாடு பட்டாவாவது அவரை அரட்டி வாங்கி விடுங்கள்!,
தேவையான அனைத்தையும் அவர் தலையிலே வைத்து விடுங்கள்!,
மொத்தத்திலே, மொத்தத்தையும் அவர் தலையிலே சுமத்தி விடுங்கள்!,
கடைசியில் அவர் நம்மளுடனேயே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்!,
அப்படியானால்தான் நாம பிறந்த பிறப்பறிப்பின் தேவையை முற்றுப் பெற வைக்க முடியும்!

என்ன?,…. திருடனும்ங்கிறீங்க! மோசங்கள் பல செய்யனும்ங்கிறீங்க!, இவ்வளவையும் செய்துவிட்டு பிறுப்பறுக்க வேண்டியதுதான் அப்படினு வேற சொல்றீங்க?……..
நாம திருடச் சொன்னது……
சிவபெருமானின் மனத்தை திருடச் சொன்னோம்! அவரிடம் இருக்கும் அருளை அபகரிக்க வழி சொன்னோம்! பக்தியின் முழுமைப் படுத்தி காதல் செய்து ஈசன் மனதை கொள்ளையிடச் சொன்னோம்!

விசேஷ நாளான பிரதோஷ நாளன்று நந்திக்குப் பின் நின்று அவரை வசீகரியுங்கள்!.
அப்போது கூட்டத்துள் இடமில்லாமல் போயினும், அங்கே ஓர் ஓரமாய் நின்றாவாவது வணங்கிக் கண்ணீருடன் அழுங்கள்!

அப்போது நமக்குத் தேவையானதை கோரிக்கையாக வாசிக்காதீர்கள், மாறாக இனியும் உன்னைக் காணும் நாட்களே வேண்டுமென கேளுங்கள்! சுவாமிக்குத் தொண்டு செய்யுங்கள், அதனால் அவர் பார்வை உங்கள் பக்கம் திரும்பட்டும்! நடக்கும் வேதனையை விட்டுவிட்டு, ஆலயத்துக்கு சிறு சிறு உபயங்கள் செய்யுங்கள்! உபயம் செய்ய வருமானம் போதவில்லையா? – இருக்கவே இருக்கிறது உழவாரப் படைக்குள் புகுந்து விடுங்கள்!

அவ்வளவுதான் நீங்கள் ஈசனுக்கு வேண்டியவனாகி விடுவீர்கள்! அதோடு ஆலயப் பரிபாலணம் மற்றும் ஆலயக் கும்பாபிஷேகம் ஒன்றிற்கு உபயம் செய்யுங்கள். இதனால் ஏற்கனவே பற்றியிருக்கும் கர்மவினையின் தாக்கம் கொஞ்சம் குறைந்து போகட்டும். சிவாலயத்திற்குத் தொண்டு செய்தால், அந்தப் புண்ணியம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் எவ்வளவோ வந்து சேரும்.

அதனால் நாம் சிவாலயத் திருப்பணி, கும்பாபிஷேகங்களுக்கு உபயம் அளிப்பது, நம் பங்கு மிக முக்கியம், அது நம் பிள்ளைகளுக்கு புண்ணிய தனமாக அமையும்.
*கும்பாபிஷேகத்திற்கு நாம் உபயம் செய்வது, கோடியிலும் கோடி புண்ணியம்.*
எப்படியோ இந்த கலிவாழ்வில் இருக்கும், மீத காலத்தையாவது, சிவ நெறியை உணர்ந்து, ஈசன் மந்திரங்களை மொழிந்து, கும்பாபிஷேக உபயத்தில் பங்கெடுத்து மனச்சுமைகளை குறைப்போம் வாருங்கள்.

ஈசன் சிந்தனையை மனதில் தாங்கி, உழைப்பில் வரும் ஊதியத்தைக் கொண்டு சிறு சிறு உபயங்களை, இயலாதோர்க்கும் ஆலயத்துக்கும் அளித்தால், வாழ்வில் நமக்கு எதிர்வினைகள் தோன்றாது தடைபடும்.

உண்மையான அன்பு ஒருவருக்கு இருப்பதும், அது குறையாது ஒழுகி வாழ்வதும்,
ஒரு சிவனடியார்கள் மத்தியில் மட்டுமே அதிகம் காண முடியும்.
சிவனடியார்கள், ஈசன் மீது எவ்வளவு அன்பு செய்கிறார்களோ?, அதே அளவு அன்பை எல்லோர்களிடத்திலும் காட்டுவர்.

ஏன்?, எல்லா உயிர்களிடத்திலும் காட்டுவர் என்றாலும் அது மெய்.
நம்மை, நம் வாழ்வியல் மேன்மையை, நம் குடும்பப் பாங்கை, நம் குழந்தைகள் நலனை என்று எல்லா வகையிலும் அன்பு செலுத்துபவர் சிவனடியார் ஒருவரே.
சிவனடியார்க்கு அன்பு செலுத்தத்தான் தெரியும்!, அவர்களிடத்திலிருந்து வாஞ்சை முளைவிட வராது.

அதனால்தான் அனைவரும் சிவனடியைப் பற்றி வாழ வேண்டும் என்று மொழிவர்.
சிவ நெறி வாழ்க்கை, சிவாணுஷ்டாண நிலை, தர்மம் பல, தொண்டுகள் சில, கோபத்தாரிடத்திலும் அன்பு மட்டுமே வெளிப்பாடு என்பது போன்றவற்றால் ஆன வாழ்க்கையில் வாழும் ஒரு அடியவர்க்கு, – ஈசனின் வீடு பேறு அடைதல் தெளிவுறுதி காண்பர்.

எனவே யார் ஒருவரும் எந்த வினைப்பயனைப் பற்றியிருக்கிறோம் என்று தெரியாது.
நமக்குத் தெரியாமல் பற்றியிருக்கும் வினையை நாம் சிவபெருமானிடம் அன்பு செலுத்தினாலே வினைத் தாக்கம் குறையும் ஒழியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =

Most Popular