Saturday, October 14, 2023
HomeAanmeega Thagavalgalதுஷ்ட சக்திகளை விரட்டும் வெள்ளை எருக்கன் செடி!

துஷ்ட சக்திகளை விரட்டும் வெள்ளை எருக்கன் செடி!

துஷ்ட சக்திகளை விரட்டும் வெள்ளை எருக்கன் செடி!

பெரும்பாலானவர்கள் வெள்ளை எருக்கன் செடியை வீட்டுக்கு முன்பு வளர்க்கும் போக்கு தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது.

எருக்கன் செடியின் சிறப்பு:

எருக்கன் செடியில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று நாம் சாலையோரங்களில் காண்கின்ற சாதாரண எருக்கஞ்செடி. மற்றொன்று தெய்வீக விருட்சமாகக் கருதப்படும் வெள்ளை எருக்கன் செடி. வெள்ளெருக்கன் செடி பல அற்புத ஆற்றல்களைக் கொண்ட தெய்வீக மூலிகையாகும். வெள்ளெருக்கு செடி சித்த வைத்தியத்தில் மனிதர்களின் பல நோய்களைத் தீர்க்கும் அற்புதமான விருட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனாலும், இறையாற்றல் மிகுந்த வெள்ளை எருக்கன் செடியை வீட்டில் வளர்க்கலாமா? வேண்டாமா? என்கிற சந்தேகம் பலருக்கும் இருந்து வருகிறது.

நவக்கிரகங்களில் எருக்கன் செடி சூரிய பகவானின் தன்மையைக் கொண்டதாகத் திகழ்கிறது. பொதுவாக செடிகள், மரங்கள் வளர்வதற்கு தண்ணீர் மிக அவசியம். ஆனால், வெள்ளை எருக்கன் செடி பன்னிரண்டு ஆண்டுகள் நீரின்றி இருந்தாலும் சிறப்பாக வளரும் தன்மை கொண்டதாகும். வெள்ளை எருக்கன் செடி சிவபெருமானின் அம்சம் கொண்டதாகக் கருதப்படுகிறது. பொதுவாக, பால் வடியும் வகை செடிகளை வீட்டில் வளர்க்க கூடாது என்பது வாஸ்து சாஸ்திர ரீதியாக சொல்லப்படும் விஷயம். எனினும் ஒரு சில அறிஞர்கள் வெள்ளை எருக்கன் செடியை வீட்டிற்கு முன்பு வளர்க்கலாம் எனக் கூறுகின்றனர்.

எருக்கன் செடியின் பலன்கள்:

வெள்ளை எருக்கன் செடி வீட்டுக்குள் துஷ்ட சக்திகள் மற்றும் தீய மாந்த்ரீக சக்திகள் நுழையாதவாறு தடுக்கும் ஆற்றல் கொண்டவையாகச் செயல்படுகிறது. எனினும், சிவ அம்சம் கொண்டதாகக் கருதப்படும் வெள்ளெருக்கன் செடியை முறையாக பராமரிப்பவர்கள், அந்தச் செடி வளரும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள், தங்களையும் தங்கள் வீட்டையும் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்பவர்கள் மட்டுமே வீட்டுக்கு முன்பு இந்தச் செடியை வளர்க்கலாம் என்றும், அப்படி இயலாதவர்கள் இந்தச் செடியை சிவன் கோயில் மற்றும் நந்தவனங்களில் நட்டு வளர்ப்பதே சிறந்தது என அறிவுறுத்துகின்றனர்.

சக்தி வாய்ந்த வெள்ளை எருக்கன் செடியை வீட்டுக்கு முன்பு வளர்க்க இயலாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் அல்லது உங்களுக்குத் தெரிந்த சித்த வைத்தியரிடம் கூறி வெள்ளெருக்கன் வேர் கட்டை ஒன்றை வாங்கி, உங்கள் வீட்டுக்கு முன்பாக கட்டி தொங்கவிடுவதாலும், உங்கள் வீட்டின் வாயில் அருகில் வைத்து விடுவதாலும் எதிர்மறை ஆற்றல்களை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்து சுபிட்சங்களைக் காணலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + five =

Most Popular