Thursday, October 19, 2023
HomeAanmeega Thagavalgalஏன் அரச மரத்தை சுற்ற வேண்டும்? அதற்கான காரணங்கள் என்ன?

ஏன் அரச மரத்தை சுற்ற வேண்டும்? அதற்கான காரணங்கள் என்ன?

ஏன் அரச மரத்தை சுற்ற வேண்டும்? அதற்கான காரணங்கள் என்ன?

நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்த காலங்களில் எல்லாம் மரங்களை தெய்வமாக வழிபட்டுள்ளனர். இன்றும் ஒரு சில பகுதிகளில் மரங்களுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து சிவப்பு நிற துணியோ, மஞ்சள் நிற துணியோ கட்டப்பட்டிருப்பதை காண முடியும். நம் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என்ர பல மரங்களுக்கு முக்கிய இடம் உண்டு. இதை விட அரச மரத்திற்கு கூடுதல் சிறப்பு உண்டு. அது ஏன், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

பொதுவாக அரச மரத்திற்கு அறிவு என்று சொல்லப்படும் ஞானத்தை வளர்க்கும் சக்தி உண்டு. பழங்காலங்களில் எல்லாம் முன்னோர்கள் காலையோ, மாலையோ மரத்தடியில் தான் அமர்ந்திருப்பார்கள். அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். இதன் அடியில் அமர்ந்தாலே மனம் தெளிவடையும். அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

அதிகாலையில் சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.40 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரச மரத்திலிருந்து வெளிவரும் காற்று நமக்கும், நமது உடலுக்கும் நன்மையைத் தரும். அரசும், வேம்பும் ஒன்றாக வளரும் இடத்தில் ஓர் உயிரியல் மின்சக்தி நிலவுகிறது. இவற்றை வலம் வரும்போது உடலில் உள்ள சுரப்பிகள் தூண்டப்பட்டு சுரப்பு நீர் சமப்படுத்தப்படுகிறது. அரச இலை அசையும்போது அதன் சத்து காற்றில் பரவுகிறது. ஓர் அரச மரம் நாள் ஒன்றுக்கு 1,800 கிலோ கரியமில வாயுவை உட்கொண்டு, 2,400 கிலோ பிராண வாயுவை வெளியிடுகிறது.

அரச மரத்தை அதிகாலையில் வலம் வந்தால் அது வெளிவிடும் பிராண வாயுவில் ஓசோனின் தாக்கம் அதிகம் உள்ளதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. பெண்களின் கர்ப்பபை கோளாறுகள் நீங்கும். ஆண்களுக்கு சுக்கில விருத்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைப்பேறு உண்டாகும். அரச மரத்தின் இலை, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

எண்ணமே வாழ்க்கையின் பாதை!
வாழ்க்கையின் எதிரி கோபம்!
வழி தெரியாதவனின் குணம் பொறாமை!
வஞ்சனையும் ஒரு பாவம்!
பழிவாங்குதல் வாழ்க்கையை பாழாக்கும்!
மனிதனின் பலகீனம் சாபமிடுதல்!
தர்மம் உயிரையும் காக்கும்!
அழகை வெல்ல மனிதனால் முடியாது!
அறிவில்லா அன்பு பொய் காதல்!
வெற்றியின் ரகசியம் ஊக்கம்!

என்பதை அறிந்து கொண்டு வாழ்க்கையில் உயர்வோம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five + 6 =

Most Popular