Saturday, October 21, 2023
HomeAanmeega Thagavalgalசெல்வம் பெருக சுப்பிரமணியசுவாமி வழிபாடு!

செல்வம் பெருக சுப்பிரமணியசுவாமி வழிபாடு!

செல்வம் பெருக சுப்பிரமணியசுவாமி வழிபாடு!

திருவாரூர் – கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ அபினாம்பிகை உடனுறை ஸ்ரீஅபிமுக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் தனிச்சிறப்பு என்னவென்று இத்தொகுப்பில் காணலாம்…

ஆலயத்தின் சிறப்பு:

இக்கோவிலின் விசேஷமாக திருமண வரம் தரும் கடவுளாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி அருள்பாளிக்கிறார். மேலும் இக்கோவிலில் 18 படிகள் ஏறிச் சென்று மூலவரை தரிசிக்கும் அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.

மூலவருக்கு ஸ்ரீஅபிமுக்தீஸ்வரரை ஆயிரம் முல்லைப் பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத நோயும் தீரும். சுக்கிரன், இந்தத் தலத்தின் சரவணப் பொய்கையில் நீராடி, தவம் இருந்து, இழந்த சக்தியைச் திரும்பப் பெற்றார். எனவே, சுக்கிர தோஷ நிவர்த்திக்காக இங்கு சென்று வழிபடலாம்.

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி:

ஸ்ரீசுப்பிரமணியர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப்பொன்னும் பொருளும் அருள்வதுடன், திருமண வரமும் வழங்குகிறார். வள்ளியைக் கரம்பிடிக்க விரும்பிய முருகன், இந்தத் தலத்துக்கு வந்து பரமசிவனையும் பார்வதியையும் வேண்டி தவம் செய்து வழிபட்டதாகச் சொல்கிறது தல புராணம். பிறகு, சிவ-பார்வதியின் ஆசியோடும், அண்ணன் விநாயகரின் துணையோடும் வள்ளிமலையில் ஸ்ரீவள்ளியை மணம் செய்து கொண்டார்.

திருமண வரமருளும் முருகன்:

தனது திருமணம் நிறைவேற பெற்றோரின் ஆசி கிடைத்த இந்தத் தலத்தில், பக்தர்களின் திருமண பிரார்த்தனைகளையும் நிறைவேற்ற முருகன் சித்தம் கொண்டு கல்யாண வரம் தரும் கந்தனாக இந்தக் கோவிலில் குடிகொண்டுள்ளார்.

பலன்கள்:

இந்த தலத்தில் உள்ள சரவண பொய்கையில் நீராடி, முருகனை வழிபட்டால், திருமண தோஷங்கள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கல்யாண முருகன் ஸ்லோகம்:

திருமணம் ஆனவர்கள் முருகனின் இந்தத்திருப்புகழை படித்தால் குடும்பத்தில் விட்டு சென்ற உறவுகள் சேரும் என்பதும் நிதர்சனமான உண்மையாக விளங்குகிறது.

விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
மிகவானி லிந்து வெயில்காய

மிதவாடை வந்து தழல்போல வொன்ற
வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
கொடிதான துன்ப மயில் தீர

குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்த
வழிபாடு தந்த மதியாளா

மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்த னிருதா ளிறைஞ்சு
மடியா ரிடைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து
அலைவா யுகந்த பெருமாளே.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × two =

Most Popular