ஒவ்வொரு ராசிக்காரரும் சிவனை எப்படி வழிபட வேண்டும்?
மேஷம்:
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை வழிபட சிறப்பான பலனைத் தரும். அப்படி திருவண்ணாமலைக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிற்கு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வில்வம் கொண்டு அர்ச்சனை செய்து, வெல்லம் கலந்த நீர் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி வழிபட வேண்டும்.
ரிஷபம்:
திருக்கடையூர், திருவானைக்காவல், சிதம்பரம் ஆகிய தலங்களில் உள்ள சிவனை வழிபடலாம். அப்படி செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து தயிர் கொண்டு அபிஷேகம் செய்து சிவபெருமான் மந்திரத்தை சொல்ல வேண்டும்.
மிதுனம்:
காளஹஸ்தி, திருச்செங்கோடு, திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ள சிவனை வழிபட வேண்டும். அப்படியில்லை என்றால், அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று கரும்புச்சார் கொண்டு அபிஷேகம் செய்து ஓம் நமசிவாய மந்திரம் சொல்ல வேண்டும்.
கடகம்:
திருவண்ணாமலை, வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களில் உள்ள சிவனை வழிபட வேண்டும். அப்படி இந்த கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவனை வழிபட்டு சர்க்கரை கலந்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து ஓம் நமசிவாய மந்திரம் சொல்ல வேண்டும்.
சிம்மம்:
சிதம்பரம், திருவானைக்காவல் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். அங்கு செல்ல முடியாதவர்கள் சிவப்பு சந்தனம் கலந்த பால் கொண்டு அபிஷேகம் செய்து ஓம் நமசிவாய மந்திரம் சொல்ல வேண்டும்.
கன்னி:
வேதாரண்யம், திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் உள்ள சிவனை வழிபட வேண்டும். அப்படி செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று பால், தண்ணீர் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து ஓம் நமசிவாய மந்திரம் சொல்ல வேண்டும்.
துலாம்:
காளஹஸ்தி, சிதம்பரம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆகிய தலங்களில் உள்ள சிவனை வழிபட வேண்டும். அப்படி செல்ல முடியாதவர்கள் உங்களது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்து ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.
விருச்சிகம்:
திருவானைக்காவல், ஜலகண்டேஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களில் உள்ள சிவனை வழிபட வேண்டும். அப்படி இந்த கோயில்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சிவனை வழிபட்டு சர்க்கரை கலந்த பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து ஓம் நமசிவாய மந்திரம் சொல்ல வேண்டும்.
தனுசு:
திருவானைக்காவல், திருவண்ணாமலை ஆகிய ஊர்களில் உள்ள சிவனை வழிபட வேண்டும். அப்படி செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி சிவனை வழிபட வேண்டும்.
மகரம்:
காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபட வேண்டும். அப்படி செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து சிவனுக்குரிய மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.
கும்பம்:
திருப்பரங்குன்றம், காளஹஸ்தி ஆகிய தலங்களில் உள்ள சிவனை வழிபட வேண்டும். அப்படி செல்ல முடியாதவர்கள் பக்கத்திலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று இளநீர், கடுகு எண்ணெய் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்து ஓம் நமசிவாய மந்திரம் சொல்ல வேண்டும்.
மீனம்:
சிதம்பரம், ஜலகண்டேஸ்வரர், காளஹஸ்தி ஆகிய கோயில்களுக்கு சென்று சிவனை தரிசனம் செய்ய வேண்டும். அங்கெல்லாம் செல்ல முடியாதவர்கள் உங்களது வீட்டிற்கு அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று சிவப்பு குங்குமப் பூ கலந்த பால் கொண்டு அபிஷேகம் செய்து ஓம் நமசிவாய மந்திரம் சொல்லி சிவனை வழிபட வேண்டும்.
