இன்றைய ராசி பலன்கள்

372

மேஷம்

பணிகளில் முன்யோசனையுடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி அபரிமிதமான அளவில் இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். இனிமையான துாக்கத்தினால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்

கேலி செய்பவர்களிடம் விலகி சுயகவுரவத்தை பாதுகாப்பீர்கள். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய கூடுதல் அவகாசம் தேவைப்படும். குடும்பத் தேவை அதிகரிக்கும். வாகனத்தில் மிதவேகத்ததை பின்பற்றுவது நல்லது. மாணவர்கள் படிப்பி்ல நல்ல முன்னேற்றம் காண்பர்.

மிதுனம்

மாறுபட்ட சூழ்நிலை மனதில் குழப்பத்தை உருவாக்கலாம். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கூடுதல் உழைப்பு தொழிலில் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்கும். ஆடம்பர செலவை தவிர்க்க வேண்டும். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மனஅமைதியை பெறுவீர்கள்.

கடகம்

பணித் திறமையை வளர்த்து கொள்வீர்கள். முக்கியமான செயலில் அதிக நன்மை கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை திருப்திகரமாகும். தாராள பணவரவில் சேமிப்பு கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடைபெற்று மனதில் மகழ்ச்சி உண்டாகும்

சிம்மம்

குடும்ப பெரியவர்களின் வழிகாட்டுதல் படி செயல்பட்டு நன்மையை பெறுவீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவில் சேமிப்பை அதிகரிப்பீர்கள். பணியாளர்கள் கடுமையான உழைப்பினால் பாராட்டு, வெகுமதி பெறுவர்.

கன்னி

மனதில் இனம்புரியாத குழப்பம் ஏற்படலாம். நண்பரின் ஆலோனை மிகுந்த பயன் தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக நேரம் பணிபுரிவீர்கள். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். கண்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்.

துலாம்

உறவினரின் செயலால் பணிகள் தாமதமாகலாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். செலவில் சிக்கனத்தை கடைபிடிப்பது மிகுந்த நன்மை தரும். ஒவ்வாத உணவினை உண்ண வேண்டாம். பெண்கள் பிள்ளைகள் நலனில் அக்கறை கொள்வர்.

விருச்சிகம்

முக்கியப்பணி நிறைவேற அனுகூலம் உருவாகும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகழ்வீர்கள்.

தனுசு

சுற்றுப்புற சூழ்நிலை தொந்தரவு தரலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலத்தை பாதுகாப்பீர்கள். பணவரவு குறைந்த அளவில் கிடைக்கும். பெண்கள் நகையை கடனாக கொடுக்க வேண்டாம். வெளியூர் பயணத்திட்டத்தில் சிறு மாற்றம் ஏற்படலாம்.

மகரம்

பிறர் நலனில் மிகுந்த அக்கறை கொள்வீர்கள். உறவினரால் புதிய சொந்தங்களை காணும் வாய்ப்பு ஏற்படும். தொழிலில் வளர்ச்சி பணி திருப்திகரமாக நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு குறைந்து பதவி பெற வாய்ப்பு வரும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவர்.

கும்பம்

சிரமங்களை பற்றி பிறரிடம் சொல்ல வேண்டாம். தொழிலில் நிலுவைப்பணியை நிறைவேற்றுவது மிகுந்த நன்மை அளிக்கும். அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்திட்டத்தில் மாற்றம் செய்ய நேரிடலாம். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர்.

மீனம்

நண்பரிடம் எதிர்பார்த்த உதவி தருந்த தருணத்தில் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமான அளவில் இருக்கும். வீட்டை அழகுபடுத்த கலையம்சம் நிறைந்த பொருளை வாங்குவீர்கள். இஷ்ட தெய்வ அருள் கிடைக்கும்.