Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 04.08.2020

இன்றைய ராசிப்பலன் – 04.08.2020

மேஷம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் கிட்டும். வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.

மிதுனம்

இன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடாமல் இருப்பது உத்தமம்.

கடகம்

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கன்னி

இன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

துலாம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணவரவு சற்று சுமாராகத் தான் இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. வேலையில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

தனுசு

இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்களும் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம்.

மகரம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவு சிறப்பாக இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் வெற்றி வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கும்பம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மீனம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுப செய்தி வந்து சேரும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் வியாபாரத்தில் வெளியூர் தொடர்புகள் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + 3 =

Most Popular