Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 11.01.2021

இன்றைய ராசிப்பலன் – 11.01.2021

மேஷம்

இன்று நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

ரிஷபம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் இனிய நிகழ்ச்சிகள் நிகழும். பிள்ளைகள் புது உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பார்கள். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும்.

கடகம்

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

கன்னி

இன்று உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் கூட்டாளிகளின் பங்களிப்பு சிறப்பாக இருக்கும்.

துலாம்

இன்று பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

தனுசு

இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளாலும் அனுகூலம் உண்டாகும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

மீனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பொருளாதார ரீதியாக இருந்த பிரச்சினைகள் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven + eleven =

Most Popular