Friday, October 27, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 13.12.2020

இன்றைய ராசிப்பலன் – 13.12.2020

மேஷம்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. அலுவலகத்தில் பணிபுரிவோர் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடை பிடிக்க வேண்டும். எதிலும் கவனம் தேவை.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் பணிச்சுமை குறையும். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

மிதுனம்

இன்று மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.

கடகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். வங்கி சேமிப்பு குறையும். நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன் வசூலாகும்.

சிம்மம்

இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

கன்னி

இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

துலாம்

இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். தெய்வ வழிபாடு நல்லது.

விருச்சிகம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.

தனுசு

இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிக்கல்கள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது. அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைக்கூடும்.

கும்பம்

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மீனம்

இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேற இடையூறு உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − six =

Most Popular