Tuesday, November 7, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 20.09.2020

இன்றைய ராசிப்பலன் – 20.09.2020

மேஷம்

இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டு தேவைகள் அனைத்தும் பூர்த்தியா-கும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் சேரும்-.

ரிஷபம்

இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உடல்நிலை சீராகும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

மிதுனம்

இன்று உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருமண முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் அனுகூலமான பலன்கள் கிட்டும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.

கடகம்

இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

சிம்மம்

இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.

கன்னி

இன்று குடும்பத்தினரிடம் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் ஏற்படலாம். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகளை சந்திக்க நேரிடும். பொறுமையாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.

துலாம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். நினைத்த காரியம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.

தனுசு

இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளுடன் இருந்த மன சங்கடங்கள் விலகி ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் குறையும்.

மகரம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறப்புகளுடன் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு கிட்டும்.

கும்பம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சுப காரியங்கள் எளிதில் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும்.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Posted by Dr.Murugubalamurugan Ph.D Astrology at 4:00 PM No comments:
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
FRIDAY, SEPTEMBER 18, 2020
Today rasi palan – 19.09.2020

Today rasi palan – 19.09.2020

இன்றைய ராசிப்பலன் – 19.09.2020

கணித்தவர்

ஜோதிட மாமணி,

முனைவர் முருகு பால முருகன்

Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.

No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,

தபால் பெட்டி எண் – 2255. வடபழனி,

சென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.

cell: 0091 7200163001. 9383763001,

இன்றைய பஞ்சாங்கம்

19-09-2020, புரட்டாசி 03, சனிக்கிழமை, துதியை திதி காலை 09.10 வரை பின்பு திரிதியை திதி பின்இரவு 05.39 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 01.20 வரை பின்பு சுவாதி. மரணயோகம் பின்இரவு 01.20 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

செவ்(வ)

ராகு

திருக்கணித கிரக நிலை

19.09.2020

சுக்கி

சனி(வ)

குரு கேது

சூரிய புதன் சந்தி

இன்றைய ராசிப்பலன் – 19.09.2020

மேஷம்

இன்று உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். தடைப்பட்ட காரியங்கள் நிறைவேறும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

ரிஷபம்

இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படும். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு உங்கள் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

மிதுனம்

இன்று உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு நல்லது.

கடகம்

இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்தால் மட்டுமே வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். கொடுத்த கடன் வசூலாகும்.

கன்னி

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணச்சுமை அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர்.

துலாம்

இன்று உறவினர்கள் மூலம் சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளுடன் சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

தனுசு

இன்று உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.

மகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் பணப்பிரச்சினைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மன அமைதி குறையும். பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 02.42 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும்.

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 02.42 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 8 =

Most Popular