Saturday, October 28, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 21.09.2020

இன்றைய ராசிப்பலன் – 21.09.2020

மேஷம்

இன்று உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளால் மன உளைச்சல் அதிகமாகும். உங்கள் ராசிக்கு பகல் 03.16 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது, வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

ரிஷபம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். கடன் பிரச்சினை குறையும்.

மிதுனம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். எந்த செயலையும் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.

கடகம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் ஆர்வமின்றி இருப்பீர்கள். உறவினர்களால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய பொருட்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அளிக்கும். திடீர் பணவரவு உண்டாகும்.

கன்னி

இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆதரவு மனதிற்கு நம்பிக்கையை தரும்.

துலாம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். உடல் நலம் சிறப்பாக இருக்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று உறவினர்களால் குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சினை தீரும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளி வட்டார நட்பு ஆறுதலை தரும்.

தனுசு

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். சேமிப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.

மகரம்

இன்று மன உறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் லாபம் பெருகும். வங்கி கடன் எளிதில் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிசுமை குறையும். நினைத்த காரியம் நிறைவேறும்.

கும்பம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். தொழில் சம்பந்தமான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.

மீனம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு பகல் 03.16 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் வியாபார ரீதியான புதிய முயற்சிகளை மதியத்திற்கு பிறகு மேற்கொண்டால் அனுகூலப் பலன் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 2 =

Most Popular