Wednesday, October 18, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 23.03.2021

இன்றைய ராசிப்பலன் – 23.03.2021

மேஷம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

மிதுனம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகளில் சாதகப் பலன் கிட்டும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

கடகம்

இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் ஓரளவு குறையும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.

கன்னி

இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சினைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உங்கள் ராசிக்கு மாலை 04.30 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கல் போன்ற விஷயங்களில் கவனம் தேவை.

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு மாலை 04.30 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

கும்பம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத பண நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கான நற்பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

மீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + twelve =

Most Popular