Wednesday, November 1, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

எடுத்த செயல்களில் வெற்றி கிட்டும். இல்லத்தினர்களின் ஒத்துழைப்பு உண்டு. எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தேக ஆரோக்கியத்தில் அக்கரை காட்டுவது நல்லது. விவாகப் பேச்சுக்கள் முடிவாகும்.

ரிஷபம்

கவனமுடன் செயல்படுவதன் மூலம் காரிய வெற்றி ஏற்படும் நாள். காரிய வெற்றி பெறுவீர்கள். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். பயணத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

மிதுனம்

தொட்டகாரியம் வெற்றி பெறும் நாள். தொழில் சம்பந்தப்பட்ட வகையில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிரிக்கும். வருமானம் திருப்தி தரும்.

கடகம்

முயற்சிகளில் வெற்றி கிடைக்க முன்னோர்களை வழிபட வேண்டிய நாள். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் உருவாகும். வீண் விரயங்கள் ஏற்படும்.

சிம்மம்

பொறுப்புகள் கூடும் நாள். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சி வெற்றிதரும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். இடம், பூமி வாங்குவதில் மற்றும் விற்பதில் இருந்த தடுமாற்றம் அகலும். வேலைப்பளு குறையும்.

கன்னி

விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினை தீரும். தகுந்த நபர்களின் ஆலோசனைகளை எடுத்துக் கொள்வதில் தவறில்லை என்று நினைப்பீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

துலாம்

சவால்களை சமாளிக்கும் நாள். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். பெண் வழி பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். வியாபார விருத்தி உண்டு. மருத்துவச் செலவுகள் குறைந்து மன நிம்மதியைத்தரும்.

விருச்சிகம்

நன்மைகள் நடைபெறும் நாள். நாடாளும் நபர்களின் நட்பு கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரலாம. நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பர். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்காகலாம்.

தனுசு

முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுக்கும் நாள். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும். பெற்றோர் வழியில் பெருமைக்குரிய தகவல் வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனு கூலம் ஏற்படும். வருமானம் திருப்தி தரும்.

மகரம்

தடைகள் அகலும் நாள். தைரியமும், தன் னம்பிக்கையும் அதிகரிக்கும். தக்கசமயத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும். தலை மைப் பொறுப்புகள் தானே தேடி வரும். பூர்வீக சொத்துப்பிரச்சினை சுமூகமாக முடியும்.

கும்பம்

சொல்லை செயலாக்கி காட்டும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழிச் சச்சரவுகள் அகலும். விவாக பேச்சுக்கள் முடிவாகலாம். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு.

மீனம்

மக்கள் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும் நாள். ஆரோக்யம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு தேவை. முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லா திருப்பது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 12 =

Most Popular