மேஷம்
தொழில் வளம் பெருகும் நாள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப்பிடிப்போடு செயல்படுவீர்கள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். மாற்று இனத்தவர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர்.
ரிஷபம்
எடுத்த காரியங்களை எளிதில் முடித்து வெற்றி காணும் நாள். அஞ்சல் வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும். கடன்சுமை குறையும். எதிரிகள் விலகுவர். இடம், பூமி வாங்கிச் சேர்க்கும் எண்ணம் மேலோங்கும்.
மிதுனம்
இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். வங்கிச் சேமிப்பு உயரும். கனவு பலிதம் உண்டு. ஆரோக்கியத்திற்காக மாற்று மருத்துவத்தை மேற்கொள்வீர்கள். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும்.
கடகம்
நினைத்தது நிறைவேறும் நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுக் கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். மாற்று இனத்தவர்களால் மனதிற்கினிய செய்தி வந்து சேரும். கட்டிடப்பணியில் இருந்த தடை அகலும்.
சிம்மம்
பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பழைய பிரச்சினை ஒன்றைப் பக்குவமாகப் பேசித் தீர்வு காண்பீர்கள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். ஆதரவுக்கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை உயரும்.
.கன்னி
சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய நாள். எண்ணங்களைச் செயலாக்குவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பது அரிது. கடன்சுமை கூடும். விரயங்கள் தவிர்க்க முடியாததாக அமையும்.
துலாம்
வரவு திருப்தி தரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க இல்லத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும். கனவு பலிதம் உண்டு. தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.
விருச்சிகம்
மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பாராட் டும், புகழும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு வி.ஐ.பி.க்கள் ஒத்துழைப்புச் செய்வர்.
தனுசு
விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவதால் விரயங்கள் குறையும் நாள். விருந்தினர்களின் வருகை உண்டு. வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். யாரிடமும் வாக்குக் கொடுக்கும் முன் யோசித்துக் கொடுப்பது நல்லது.
மகரம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பர். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். தைரியத்தோடு எந்தக் காரியத்திலும் செயல்படுவது நல்லது.
கும்பம்
விரும்பிய காரியம் விரும்பியபடியே நடைபெறும் நாள். தொலைதூரத்திலிருந்து வரும் தொலைபேசி வழித்தகவல் தொழி லுக்கு உறுதுணை புரியும். மாறுபட்ட கருத்துடையோர் மனம் மாறுவர்.
மீனம்
லாபம் அதிகரிக்கும் நாள். புதிய நண்பர் களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணங்களை மேற் கொள்வீர்கள். வேலைப்பளு கூடும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும்.
