மேஷம்
அலைபேசி வழித்தகவல் ஆச்சர்யம் தரும் நாள். பிள்ளைகள் வழியில் சுபவிரயம் உண்டு. விலகிச் சென்றவர்கள் வீடு தேடி வருவர். வருங்கால நலன் கருதிப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வரவு திருப்தி தரும்.
ரிஷபம்
தெய்வத் திருப்பணிகளில் சிந்தையைச் செலுத்தும் நாள். திடீர் மாற்றங்கள் அச்ச மளிக்கும். தொழில் பங்குதாரர்களின் ஒத்து ழைப்பு கிட்டும். வருமானம் திருப்திதரும் என்றாலும் மனஅமைதி குறையும்.
மிதுனம்
அனுபவ அறிவால் அற்புதமான பலன் காணும் நாள். வாங்கல்–கொடுக்கல்களில் வளர்ச்சி கூடும். நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டு. புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். பயணங்களால் பலன் கிட்டும்.
கடகம்
சேமிப்பு உயரும் நாள். சகோதர வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தொலைந்த பொருள் கைக்கு வந்து சேரும். வருமானம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். நாட்டுப்பற்று மிக்கவர்களின் சந்திப்பு நல்ல செய்தியைத் தரும்.
சிம்மம்
தனவரவு அதிகரிக்கும் நாள். சம்பள உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். பழகிய நண்பர்களால் பகல் நேரத்தில் சிறு ஏமாற்றத்தைச் சந்திப்பீர்கள்.
கன்னி
விரயங்கள் கூடும் நாள். பூர்வீக சொத்துக்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். தொட்டகாரியங்கள் தாமதப்படும். மறதி அதிகரிக்கும். உத்தியோகத்தில் இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்.
துலாம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.
விருச்சிகம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொருளாதார நிலை உயரும். நண்பர்களின் நல்லாதரவோடு தொழில் முன்னேற்றம் காண்பீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
தனுசு
சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். வரவும், செலவும் சமமாகும். பிரபல மான வர்களின் சந்திப்பு கிட்டும். தொழில் பங்குதாரர்களிடம் விழிப்புணர்ச்சி தேவை. பிள்ளைகளின் நலன்கருதிச் செலவிடுவீர்கள்.
மகரம்
செல்வாக்கு உயரும் நாள். திடீர்பயணம் தித்திக்க வைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியங்களைச் செய்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆரோக்கியம் சீராகும்.
கும்பம்
செல்வாக்கு உயரும் நாள். திட்டமிட்ட காரியம் சிறப்பாக நடைபெறும். உறவினர்கள் போற்றும் விதத்தில் நடந்து கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பொது வாழ்வில் ஏற்பட்ட வீண்பழிகள் அகலும்.
மீனம்
முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து முடிவெடுக்கும் நாள். நீண்டதூரப் பயணங் களை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு வாய்ப்பு தானே தேடிவரும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.