Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 16.10.2020

இன்றைய ராசிப்பலன் – 16.10.2020

மேஷம்

இன்று ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் நிறைவேறும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் மாற்று கருத்துக்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படும். அரசுத்துறை ஊழியர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

கடகம்

இன்று குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.

சிம்மம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கன்னி

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பிரச்சினைகள் சற்று குறையும்.

விருச்சிகம்

இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.

தனுசு

இன்று பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

மகரம்

இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கும்பம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். புதிய முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

மீனம்

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கடன்கள் குறையும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + 14 =

Most Popular