Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரும் நாள். நாணயப் பாதிப்பு அகலும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்களும் உறு துணை புரிவர். மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

ரிஷபம்

நிதி நிலை உயரும் நாள். பக்கபலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக் கும். பொதுவாழ்வில் ஈடுபட்டு புகழ் சேர்ப்பீர் கள். இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.
மிதுனம்

பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்கத்திலுள்ளவர்களை அனுசரித்து செல் வது நல்லது. உடல் நலம் சீராக மாற்று மருத்து வத்தை மேற்கொள்வீர்கள். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.
கடகம்

இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். விரயங்கள் அதிகரிக்கும். விரும்பிய படியே வெளியூர் பயணமொன்றை மேற் கொள்வீர்கள். தொழில் பங்குதாரர்களிடம் கவனமுடனிருப்பது உத்தமம்.
சிம்மம்

லாபம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்காலம் இனிமையாக அமைய புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள்.

கன்னி

எடுத்த காரியத்தை எளிதில் முடிக்கும் நாள். வருமான அதிகரிப்பிற்கு வழியமைத் துக் கொள்வீர்கள். செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்லும். நல்லவர்களின் நட்பு கிட்டும்.

துலாம்

வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். வாழ்க்கைத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை குழப்பத்தை அகற்றும்
விருச்சிகம்

தடைகள் அகலும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். பெண்வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நண்பர்களால் விரயம் உண்டு.

தனுசு

உத்தியோக முயற்சி கைகூடும் நாள். உடன் இருப்பவர்களின் உதவி கிட்டும். வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை தீரும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர். வருமானம் திருப்தி தரும்.

மகரம்

ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். உற்றார், உறவினர்கள் கைகொடுத்து உதவ முன்வருவர். அக்கம், பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட பகை மாறும். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள்.

கும்பம்

யோகமான நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். பூர்வீக சொத்துகளால் முறையான லாபம் கிட்டும்.

மீனம்

நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாள். வரவு திருப்தி தரும். தொலை தூரத்திலி ருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உதவும். நாட்டுப்பற்று மிக்கவர்களின் நட்பால் சில காரியங்கள் முடிவடையும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 1 =

Most Popular