Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். பக்கு வமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மாற்றினத்தவர்களால் மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும்.

ரிஷபம்

மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். அலைபேசி வழியில் ஆச்சரியப்படத்தக்க செய்தி வந்து சேரும். உறவினர்களால் லாபம் கிட்டும்.

மிதுனம்

எதிர்பார்த்த சலுகைகள் எளிதில் கிடைக்கும் நாள். புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை நிறைவேற்றுவீர்கள். வீடு மாற்றம் அல்லது உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

கடகம்

மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் நாள். குடும்ப கவுரவத்தைக் காப்பாற்றுவீர்கள். கூட்டுத்தொழில் வெற்றி தரும். சேமிப்பு உயரும். அன்னிய இனத்தவர்களின் ஆதரவோடு புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம்

சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக் கும் நாள். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தொழில் ரீதியாக வெளியூர் பயணமொன்றை மேற்கொள் வீர்கள். வரவு திருப்தி தரும்.

கன்னி

அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாள். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள். குடும்ப பொறுப்புகள் கூடும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்தி வந்து சேரும்.

துலாம்

சங்கடங்கள் அகன்று சந்தோஷம் கூடும் நாள். புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். பல வழிகளிலும் பணம் வந்து பையை நிரப்பும். ஆற்றல் மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.

விருச்சிகம்

வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். வருமானத்தை விடச் செலவு கூடும். வாங்கல்– கொடுக்கல்களில் கவனம் தேவை. மற்றவர் களுக்கு பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தால் அலைச்சல் கூடும்.

தனுசு

வெளிவட்டாரப் பழக்கவழக்கம் விரிவடை யும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் ஒரு சில உபத்திரவங்கள் ஏற்படலாம்

மகரம்

வருங்கால நலன் கருதி திட்டம் தீட்டும் நாள். எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு.x`

கும்பம்

சுகங்கள் கூடும் நாள். கூட்டுதொழிலை தனித் தொழிலாக்கும் முயற்சி பலன்தரும். அடுத்தவர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.

மீனம்

வளர்ச்சி கூடும் நாள். தொலை தூரத்தி லிருந்து நல்ல தகவல் வந்து சேரும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். வருங்கால நலன்கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 6 =

Most Popular