மேஷம்
நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் நாள். பண நெருக்கடிகள் தீரும். உடன் பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செயவர். ஊக்கத்தோடு செயல்படுவீர்கள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்ளும் நாள். காசு, பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவமொன்று நடைபெறும். நீண்ட நாளைய ஆசையொன்று நிறைவேறும்.
மிதுனம்
வசந்த காலத்திற்கு வழிகாட்டும் நாள். செலவுகள் கூடும். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத் தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
கடகம்
இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்துசேரும் நாள். விருந்தினர் வருகை உண்டு. உறவினர்கள் வழியில் சிறுவிரய முண்டு. தொலைபேசி வழித் தகவல் தொழில் வளர்ச்சிக்கு வழிகாட்டும்.
சிம்மம்
தெய்வநம்பிக்கை கூடும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதியபொருள் சேர்க்கை உண்டு. உத்யோகத்தில் எதிர் பார்த்த உயர்வுகள் வந்துசேரலாம்.
கன்னி
மகிழ்ச்சி கூடும் நாள். பிற இனத்தாரின் ஒத்துழைப்பு உண்டு. தொழிலில் அனுபவ மிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
துலாம்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்களோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துக்களை விற்றுப் புதிய சொத்துக் களை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். அலைச்சலுக் கேற்ற ஆதாயம் கிடைக்காது. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.
தனுசு
மகிழ்ச்சி கூட மற்றவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். தடைகள் தானாக விலகும். சந்தித்தவர்க ளால் சந்தோஷம் உண்டு. விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். திரு மணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும்.
கும்பம்
கனவுகள் நனவாகும் நாள். தொட்ட காரியம் வெற்றி பெறும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் அகலும். கல்யாணப் பேச்சுக் கள் முடிவாகும். ஆரோக்கியம் சீராகும்.
மீனம்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு குறையும். தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவீர்கள்.
