மேஷம்
அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். ஆரோக்கியம் சீராகும். செலவை விட வரவு இருமடங்காகும். இல்லத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
ரிஷபம்
விட்டுக் கொடுத்துச் செல்வதால் வெற்றி கிட்டும் நாள். வரவு தாராளமாக வந்தாலும் உடனடி விரயம் உண்டு. கொடுக்கல் – வாங்கல்களில் கவனம் தேவை. விலையுயர்ந்த பொருட்களை கையாள்வதில் கவனம் தேவை.
மிதுனம்
நல்லவர்கள் நாடி வந்து உதவும் நாள். சுபச் செய்திகள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பணத் தட்டுப்பாடு அகலும். மற்றவர்களின் மகிழ்ச்சிக்கு மூலகாரணமாக திகழ்வீர்கள்.
கடகம்
நாட்டுப்பற்று மிக்கவர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் உண்டு. உங்களின் எண்ணங்கள் ஈடேற இல்லத்தார்களின் உதவி கிட்டும். பிள்ளைகளால் விரயங்கள் ஏற்படும்.
சிம்மம்
நம்பிக்கையோடு செயல்படும் நாள். கூட்டு முயற்சியால் வெற்றி கிடைக்கும். பிள்ளை களின் வளர்ச்சி கண்டு பெருமைப்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணைபுரிவர்.
கன்னி
இடம் வாங்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும் நாள். வியாபார விருத்தியில் அக்கறை செலுத்துவீர்கள். தன்னம்பிக்கை யுடனும், தைரியத்துடனும் செயல்படுவீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி அமையும்.
துலாம்
அருகில் உள்ளவர்களின் ஆதரவு கிட்டும் நாள். தொழில், உத்தியோகத்தில் இருந்த இன்னல்கள் தீரும். சரளமாக பணப்புழக்கம் ஏற்படும். எந்தவொரு காரியத்தையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள்.
விருச்சிகம்
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தக்க சமயத்தில் பிறர் உதவி கிடைக்கும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் தொடரும் நாள். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
தனுசு
வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டும் நாள். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள்.
மகரம்
உறவினர் வருகையால் உள்ளம் மகிழும் நாள். உற்சாகத்தோடு பணியாற்றுவீர்கள். விலையுயர்நத பொருளை வாங்கி மகிழ் வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய செய்தி வந்து சேரும்.
கும்பம்
கொள்கைப்பிடிப்போடு செயல்படும் நாள். கொடுத்துதவும் எண்ணம் மேலோங்கும். பொது வாழ்வில் புகழ் கூடும். குடும்பத்தாரின் தேவை களைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். துரோகம் செய்ய நினைத்தவர்கள் தூர விலகுவர்.
மீனம்
புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும் நாள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. கல்வித் தடை அகலும். பொதுவாழ்வில் புகழ்கூடும். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள். வளர்ச்சிக்கு நண்பர்கள் துணைபுரிவர்.