Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

இல்லத்தில் நல்லகாரியம் நடைபெறும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உதிரி வருமானங்கள் பெருகும். உயர் அதிகாரி களின் பாராட்டுகளைப் பெறும் வாய்ப்பு உண்டு. பயணங்களால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்

அலைச்சல் அதிகரித்து ஆதாயம் குறையும் நாள். வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படும். வரவை எதிர்பார்த்துச் செய்த காரியமொன்றில் திடீரென செலவுகள் அதிகரிக்கலாம். மருத்துவச் செலவு கூடும்.

மிதுனம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நண்பர்களின் உதவி தக்கசமயத்தில் கிடைக்காது. வாங்கல்–கொடுக்கல்களை ஒழுங்குபடுத்திக்கொள்ள முன்வருவீர்கள். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டு.

கடகம்

நேரில் சந்திக்கும் நபர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்கமான வாழ்க்கை மாறவும், எதிர்கால வளர்ச்சிக்கும் திட்டங் களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பணவரவுகள் வந்துசேரும்.

சிம்மம்

புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். ஆதாயம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். நல்ல மனிதர்களின் நட்புகூடும். மதியத்திற்குமேல் மனக்குழப்பம் ஏற்படும். மாற்றுக் கருத்துடை யோரை அனுசரித்துச் செல்வது நல்லது.

கன்னி

பாக்கிகள் வசூலிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் நாள். உறவினர் வழிப் பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். தேக நலன் கருதி ஒரு சிறு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உண்டு.

துலாம்

வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். வீடுகட்டும் முயற்சியில் இருந்த தடை அகலும். பிள்ளைகள் குடும்பப் பொறுப் புணர்ந்து நடந்து கொள்வர். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்

பாராட்டும், புகழும் கூடும் நாள். பயணத் தால் பலன் கிடைக்கும். நிலையான வரு மானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர் கள். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுப்பர்.

தனுசு
விடாமுயற்சிக்கு வெற்றிகிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணை வர். வாங்கல்– கொடுக்கல்களில் கவனம் தேவை. சகோதர ஒற்றுமை பலப்படும். இடம், பூமி வாங்குவதில் இருந்த தடைகள் அகலும்.

மகரம்

சான்றோர்களின் சந்திப்பு கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். பாதியில் நின்ற பணியை மீதியும் தொடருவீர்கள். நண்பர்கள் நல்ல செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பர். அயல்நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம்.

கும்பம்

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். தொழில் ரீதியாக அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கேற்ற ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தினர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.

மீனம்

புதிய முயற்சிகளில் வெற்றி ஏற்படும் நாள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. கல்வித் தடை அகலும். பொதுவாழ்வில் புகழ்கூடும். பெற்றோர்களின் பாசமழையில் நனைவீர்கள். வளர்ச்சிக்கு நண்பர்கள் துணைபுரிவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + nineteen =

Most Popular