Sunday, October 22, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

நட்பால் நன்மை ஏற்படும் நாள். வரவு திருப்தி தரும். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வாகனம் வாங்கும் யோகம் உண்டு. உத்யோகத்தில் மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்

ரிஷபம்

கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். சகோதர வழியில் எதிர்பார்த்த தகவல் அலைபேசி மூலம் வந்து சேரலாம். தொழில் ரீதியாக புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும்.

மிதுனம்

உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழும் நாள். மதிய நேரத்திற்கு மேல் மனக்கலக்கம் அகலும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்

கடகம்

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வளர்ச் சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும். தொழில் ரீதியாக பயணமொன்றை மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்டும் எண்ணம் மேலோங்கும்.

சிம்மம்

வருமானம் அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்யும் எண்ணம் உருவாகும். பயணத்தால் அனுகூலம் உண்டு. மாற்றுக் கருத்துடையோரை அனு சரித்துச் செல்வது நல்லது.

கன்னி

நூதனப் பொருட்களின் சேர்க்கை ஏற்படும் நாள். பணப்புழக்கம் அதிகரித் தாலும் அடுத்தடுத்த செலவுகளால் திணறுவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிய சிந்தனை உருவாகும்.

துலாம்

வளர்ச்சிப் பாதையை நோக்கி அடி யெடுத்து வைக்கும் நாள். தொழில் ரீதியாகச் செய்த புது முயற்சிகள் வெற்றி பெறும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். வீடு வாங்கும் யோகம் உண்டு.

விருச்சிகம்

மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும் நாள். கடல் பயண வாய்ப்பு கைகூடும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக் கும். வருமானம் திருப்தி தரும்
தனுசு

ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காண வேண்டிய நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைப்பது அரிது. தொழிலில் இருந்த தேக்க நிலைகள் அதிகரிக்கும். எதிரிகள் மூலம் ஏதேனும் தொல்லை வரலாம்.

மகரம்

நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள். எந்தச் செயலையும் விழிப்புணர்ச்சியோடு செய்வது நல்லது. பணப்பற்றாக்குறையை சமாளிப்பது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

கும்பம்

முயற்சி கைகூடும் நாள். பழைய கடன்களை வசூலிக்க எடுத்த முயற்சி வெற்றி தரும். பகலிரவாகப் பாடுபட்டதற்கு ஏற்ற பலன் கிடைக்கும். மாற்று மருத்து வத்தால் உடல் நலம் சீராகும்.

மீனம்

பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகும் நாள். உடல் நலம் சீராகி உற்சாகப் படுத்தும். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட வில்லங்கங்கள் அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழ்வீர்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − thirteen =

Most Popular