Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 17.06.2020

இன்றைய ராசிப்பலன் – 17.06.2020

மேஷம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.

ரிஷபம்
இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களிடம் மாற்று கருத்துக்கள் தோன்றும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் சாதகமான பலன் உண்டாகும். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்
இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.

கடகம்
இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த கடன் தொல்லைகள் நீங்கும்.

சிம்மம்
இன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமத நிலை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும்.

கன்னி
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை.

துலாம்
இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி கூடும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை எதிர்பாராத வகையில் கிடைக்கும். கூட்டாளிகளின் ஆலோசனையால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும்.

விருச்சிகம்
இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறும். சுபகாரியங்கள் கைகூடும்.

தனுசு
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உடன்பிறந்தவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதவும் ஒத்துழைப்பும் கிட்டும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும்.

மகரம்
இன்று குடும்ப உறவுகளிடம் நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளால் பெருமை சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள்.

கும்பம்
இன்று குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

மீனம்
இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + seventeen =

Most Popular