Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் - 30.10.2020

இன்றைய ராசிப்பலன் – 30.10.2020

மேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் வருமானம் பெருகும்.

ரிஷபம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை, பிள்ளைகளால் மன உளைச்சல் உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உங்கள் பிரச்சினைகள் குறைய உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.

மிதுனம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் குறையும்.

கடகம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். உங்கள் ராசிக்கு பகல் 02.57 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது. மதியத்திற்கு பிறகு பிரச்சினைகள் குறைந்து மனஅமைதி ஏற்படும்.

கன்னி

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு பகல் 02.57 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. பயணங்களை தவிர்ப்பது உத்தமம்.

துலாம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வருமானம் பெருகும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.

தனுசு

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதால் பிரச்சினைகள் குறையும்.

மகரம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒரு சில அனுகூலங்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கும்பம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.

மீனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதங்கள் ஏற்படலாம். வீண் பிரச்சினைகளை தவிர்க்க உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 3 =

Most Popular