மேஷம்
குறைகள் அகலக் குகனை வழிபட வேண்டிய நாள். வீடு கட்டும் முயற்சி கை கூடும். உடன் பிறப்புகள் கேட்ட உதவிகளை மறுக்காமல் செய்வர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள்.
ரிஷபம்
வளர்ச்சி கூட வள்ளிமணாளனை வழிபட வேண்டிய நாள். தொழிலில் முதலீடுகள் செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வீர் கள். கையில் காசு, பணப்புழக்கம் அதிகரிக் கும். விவாகப் பேச்சுகள் முடிவாகும்.
மிதுனம்
சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாள். பேச்சுத் திறமையால் சூழ்ச்சிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
கடகம்
ஆறுமுகன் வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும். உற்றார், உறவினர்கள் வழியில் சிறு விரயமுண்டு. தொலை பேசி வழித் தகவல் மகிழ்ச்சி தரும்.
சிம்மம்
உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும் நாள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் உருவாகும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும் சூழ்நிலை உண்டு. விலையுயர்ந்த பொருட் களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி
மகிழ்ச்சி கூடும் நாள். வருமானம் உயரும். உற்றார், உறவினர்களின் ஆதரவு உண்டு. தொழிலில் அனுபவமிக்க பங்குதாரர்கள் வந்திணைவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் வாய்ப்பு கிட்டும்.
துலாம்
சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக மாறும் நாள். பிரியமானவர்க ளோடு இருந்த பிரச்சினை அகலும். பூர்வீக சொத்துகளை விற்றுப் புதிய சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.
விருச்சிகம்
முன்னேற்றம் கூட முருகப்பெருமானை வழிபட வேண்டிய நாள். தொழில் வளர்ச்சி மேலோங்கும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள்.
தனுசு
ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது. வாயில் தேடி வந்த வரன்கள் கைநழுவிச் செல்லலாம்.
மகரம்
கவலை தீரக் கந்தனை வழிபட வேண்டிய நாள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். சந்தித்த வர்களால் சந்தோஷம் கிடைக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். கொடுக்கல்–வாங்கல்கள் ஒழுங்காகும்.
கும்பம்
கனவுகள் நனவாகும் நாள். மாற்றுக் கருத் துடையோர் மனம் மாறுவர். தொட்ட காரியம் வெற்றி பெறும். பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நல்லது. சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும்.
மீனம்
திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக் கும் நாள். வாகனப் பராமரிப்புச் செலவு குறையும். தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
