Sunday, October 15, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

நினைத்தது நிறைவேறும் நாள். முன்னேற் றத்திற்கு மாற்றினத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் வளர்ச்சி கூடும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள்.

ரிஷபம்

கவலைகள் அகலும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். புத்திசாலித்தனமான செயல் பாடுகள் மூலம் உங்கள் புகழ் கூடும். கொடுக்கல்– வாங்கல்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள முன்வருவீர்கள்.

மிதுனம்

நினைத்தது நிறைவேறும் நாள். நீண்ட தூரத்திற்கு இடமாற்றம் வரலாம். அரசு வழியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற கொள்கைப்பிடிப்பைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீர்கள்.

கடகம்

மகிழ்ச்சி பெருகும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். போன் மூலம் பொன்னான தகவல் வந்து சேரும். இல்லத் தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ் வீர்கள். வரவு போதுமானதாக இருக்கும்.

சிம்மம்

தடைகள் அகலும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். நண்பர்கள் உங்களின் மன மாற்றத்தைக் கண்டு வியப்படைவர். திட்ட மிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும்.

கன்னி

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி காணும் நாள். விரயத்திற்கேற்ற வரவு உண்டு. குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். இடம் வாங்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

துலாம்

வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். விரயங்கள் கூடும். சிரித்துப் பேசும் நண் பர்களால் சில சிக்கல்கள் ஏற்படலாம். மறதியால் சில பணிகளைச் செய்யாமல் விட்டுவிடுவீர்கள். உடல் நலனில் கவனம் தேவை.

விருச்சிகம்

வெற்றிகள் வீடு தேடி வரும் நாள். வி.ஐ.பி.க்கள் வீடு தேடி வருவர். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டுவந்து சேர்ப்பர்.

தனுசு

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்துசேரும். பழைய பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். அடுத்தவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு.

மகரம்

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைத்து மகிழும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.

கும்பம்

பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி யாகும் நாள். அஞ்சல் வழியில் அனுகூலச் செய்தி வந்து சேரும். உறவில் ஏற்பட்ட தகராறுகள் அகலும். தொழில் வளர்ச்சிக்கு அனுபவ மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

மீனம்

தன்னம்பிக்கை கூடும் நாள். அக்கம் பக்கத்து வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியாக புதிய திட்டமொன்றைத் தீட்டுவீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டு. ஆலய வழிபாடு அமைதியை வழங்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − ten =

Most Popular