Monday, October 23, 2023
HomeAll-Day Happy Dayஇன்றைய ராசிப்பலன் – 18.08.2020

இன்றைய ராசிப்பலன் – 18.08.2020

மேஷம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் வெற்றி அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் வெற்றி பெற்று மன நிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். ஆரோக்கிய பாதிப்புகள் குறையும்.

மிதுனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவி கிட்டும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

கடகம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையில்லாத வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையை தரும். நண்பர்கள் உதவி செய்வார்கள்.

கன்னி

இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். கூட்டாளிகளின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நவீன பொருட்கள் வாங்குவீர்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும்.

துலாம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். வராத பழைய கடன்கள் வசூலாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் பணி சுமை குறையும்.

தனுசு

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்ல வேண்டும். சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்

இன்று நீங்கள் கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் பெருமை படும்படி நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வேலையில் உங்கள் திறமைகேற்ப ஊதியம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.

மீனம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சினைகள் வரலாம். மற்றவர்களை நம்பி கொடுத்த வேலைகள் பாதியிலேயே தடைபடும். எந்த விஷயத்திலும் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + 1 =

Most Popular