Thursday, October 19, 2023
HomeAll-Day Happy Dayகுருபெயர்ச்சி 15.11.2020 இன்று இரவு 9.48 மணிக்கு

குருபெயர்ச்சி 15.11.2020 இன்று இரவு 9.48 மணிக்கு

எத்தனை பெயர்ச்சி வந்தாலும் ,ஏதாவது ஒரு பெயர்ச்சியாவது எங்களுக்கு ஒரு வழிகாட்டதா ?என்று ஏக்கத்தோடு இருக்கின்றோம். எங்களைப் போன்றவர்களுக்கு இறைவா நீதான் உறுதுணையாக இருக்க வேண்டும்.
தொடர்ச்சியான துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்து அனுபவித்து சோர்ந்துபோய் இருக்கிறோம்.
எங்கள் துன்பங்களை உன்னிடம் செல்வதற்கு எங்கள் கண்களில் நீர் வடிய ஆரம்பித்து விடுகிறது.
ஏழைகள் அழது விடுகிறோம். யாரும் இல்லாத சமயத்தில் ஆலயத்திற்கு வந்த தரிசனம் செய்து யாரும் பார்த்து விடுவார்களோ என்று பயந்து கொண்டே துன்பத்தை சொல்லக்கூட முடியாமல் திரும்பித் திரும்பிப் பார்த்துக கொண்டே திரும்பிப் போய்விட கூடியவர்களும் இருக்கின்றார்கள்.
,வரக்கூடிய பெயர்ச்சியாவதை உன் கிரகப் பிரதிநிதிகளிடம் சொல்லி, எங்களுக்கு நல்ல வாழ்க்கையை, நல்ல உயர்வை, நல்ல திருமணத்தை, நல்ல குழந்தை பாக்கியத்தை, நல்ல கல்வியை., நல்ல வேலையை, நல்ல உடல் ஆரோக்கியத்தை, நல்ல மன ஆரோக்கியத்தையும் அமைத்து தர வேண்டும் என்று இன்றே இறைவா உன்னிடமும் உன் பிரதிநிதிகளிடம் பணிவாக விண்ணப்பம் செய்கிறோம்
.எங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு நல்வழி காட்டுங்கள். எங்களை ஆசிர்வதியுங்கள். எங்கள் மனக் குறைகளை எல்லாம் தீர்த்து வையுங்கள். என்று உலக மக்களெல்லாம் ஒன்றுகூடி உன் பாதத்தில் விண்ணப்பம் வைக்கிறோம் உன்னையே சரணாகதி என்று பணிகிறோம் நலமும் அருளும் தந்தருள்வாய்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 10 =

Most Popular