Saturday, October 14, 2023
HomeAstrological Remediesபல கோடி கடன் அடைய ஆஞ்சநேயர் பரிகாரம்!

பல கோடி கடன் அடைய ஆஞ்சநேயர் பரிகாரம்!

பல கோடி கடன் அடைய ஆஞ்சநேயர் பரிகாரம்!

ஆஞ்சநேயருக்கு கோதுமை மாவில் செய்த இந்த நெய்வேத்தியத்தை படைத்து வந்தால் உங்களுடைய பல கோடி கடனும் ஒரு ரூபாய் கூட மிச்சம் இல்லாமல் நிச்சயம் தீர்ந்து விடும்.

கடன் விடுபட மனிதன் என்னென்னவோ வழிமுறைகளை கையாளுகிறார். அதில் முக்கியமானது இரவும் பகலும் சம்பாதித்த பணத்தை சேர்த்து அதை கொண்டு கடனை அடைப்பது. அப்படியே ஆனாலும் கூட எல்லோராலும் இந்த கடனை உடனடியாக அடைக்க முடிய வில்லை. இதற்கு காரணம் ஒரு புறம் வருமானத்திற்கு மீதியை செலவு இருந்தாலும், இன்னொரு புறம் ஒரு சிலரிடம் இருந்து வாங்கிய கடன் வளர்ந்து கொண்டே இருக்குமே அன்றி குறையாது.

இப்படி வாங்கிய கடனை அடைக்க முடியாமல் துன்பப்படுபவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்யும் போது ஒரு ரூபாய் கூட மிச்சம் இல்லாமல் கடனை அடைக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இந்த கடனை அடைக்க நாம் ஆஞ்சநேயரை வழிபட்டு அவருக்கு ஒரு நெய்வேத்தியத்தை தொடர்ந்து படைப்பதன் மூலம் கடன் அடைப்பதற்கான வாய்ப்புகள் பெருகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடன் அடைய ஆஞ்சநேயர் வழிபாடு:

கடனடைய செய்யப்படும் இந்த வழிபாட்டை நாம் வீட்டிலும் செய்யலாம் அல்லது ஆலயங்களிலும் செய்யலாம். வீட்டில் இந்த வழிபாடை செய்வதாக இருந்தால் நிச்சயம் ஆஞ்சநேயர் படம் இருக்க வேண்டும். அது இல்லாத பட்சத்தில் இது ஆலயத்தில் செய்வது நல்லது. அதே போல் இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த கிழமையில் வேண்டுமானாலும் தொடங்கலாம் தொடங்கிய நாளிலிருந்து தொடர்ந்து கடன் அடையும் வரை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைதான முக்கியமாக உணவுப் பொருள் கோதுமை மாவு. இந்த கோதுமை மாவில் கொஞ்சமாக வெள்ளத்தை துருவி சேர்ந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பூரிகளாக சுட வேண்டும். இந்த பூரி நம்முடைய உள்ளங்கையை விட சற்று பெரியதாக இருக்க வேண்டும். இந்த பூரியை நாம் நெய்வேதியமாக ஆஞ்சநேயருக்கு வைத்து படைக்க வேண்டும். வீட்டில் வைத்து வணங்கும் பொழுது வீட்டில் உள்ளவர்களை இதை பிரசாதமாக சாப்பிடலாம். ஆலயத்திற்கு சென்று படைத்து வணங்கும் போது அங்கு வருபவர்களுக்கு யாரேனும் ஒருவருக்காவது இதை தானமாக கொடுப்பது சிறந்தது.

இந்த பரிகாரமானது மிக மிக எளிமையான ஒன்று தான் ஆனால் இந்த பரிகாரத்திற்காக பல மடங்கு என்று சொல்லப்படுகிறது. கோதுமை தானியம், வெல்லம் இவை இரண்டும் கலந்து செய்யப்படும் இந்த நெய்வேத்தியத்தை இவருக்கு படைக்கும் போது நம்முடைய எப்பேர்பட்ட கடன் தொல்லை தீர்ந்து விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வரும்போது நீங்கள் எவ்வளவு பெரிய கடன் பிரச்சனையில் இருந்தாலும் ஒரு ரூபாய் என்று சொல்லப்படுகிறது.

இந்த பரிகாரத்தை செய்வதால் மட்டும் கடன் அடைந்து விடுமா? என்றால் நிச்சயம் பரிகாரம் மட்டுமே கடனை அடைத்து விடாது. கடனை அடைக்க மேற் கொள்ளும் முயற்சியோடும், உழைப்போடும் இந்த பரிகாரங்களை செய்யும் போது கடன் அடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். அதுவும் இது போன்ற கடன் பிரச்சனைகள் விரைவில் அடைத்து வெளி வரும் உதவி செய்யும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகார முறையை செய்து பலன் அடையலாம்.

RELATED ARTICLES

Most Popular