நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா’
மாடும் மனிதனும் – ஒரு குட்டிக் கதை!
பணத்திற்காகப் பாசத்தை மறக்கும் மனித இனத்தின் பலவீனம் அந்தக் கதையில் சுட்டிக் காட்டப் படுகிறது. ‘ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகத் தன்னை விற்றவனைத் தேடிக்கொண்டு வந்தது மாடு. விற்றவனுக்கு ஆத்திரம்; “இனி மேல் இங்கு வருவாயா, இங்கு வருவாயா?” என்று அதை ‘வாங்கு, வாங்கு’ என்று வாங்கிவிட்டான். அலறிய மாட்டை நோக்கி அதனுடன் வசித்த ஆடு கேட்டது:
“விற்றவன் உன்னை அன்றே மறந்து விட்டான். நீயும் அவனை மறக்க வேண்டியது தானே?”
மாடு சொல்லிற்று: “என்ன செய்ய? நான் மனிதனாகப் பிறக்காமல் மாடாக அல்லவா பிறந்துவிட்டேன்!” தன்னிடம் பாசம் செலுத்தும் உயிரை விடப் பணமே மனிதனுக்குப் பெரிதாகத் தெரிகிறது. மாட்டுக்கோ எத்தனை அடி வாங்கினாலும் பாசமே பெரிதாகத் தெரிகிறது. விதியால் நமக்கு உரியது என்றுள்ளவை, எவ்வளவு தள்ளிவிட்டாலும் நம்மை விட்டுப் போகாது என்ற வள்ளுவர் கருத்தின் உளவியல் ரீதியிலான விளக்கம்தானே விந்தன் கதை?
நான் விரும்பியவாறெல்லாம் வாழ்வேன்!’ எனக் கோடிகோடியாகப் பொருள் சேர்க்கிறான் ஒருவன். ஆனால், உடல் நலம் கெட்டதால் அவனால் எதையும் அனுபவிக்க முடியாமலே போய்விடுகிறது. அதுவும் விதிதான். இறைவன் வகுத்த விதிப்படித் தான் எதையும் அனுபவிக்க இயலும். `வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் தெப்பம்போல் நம் வாழ்க்கை விதிவழியே நடக்கிறது என்கிற தத்துவத்தை உணர்ந்துகொண்டால், எதுபற்றியும் மகிழ்ச்சி ஏன், எரிச்சல் ஏன்? பெரியோரை வியப்பானேன்? சிறியோரை இகழ்வானேன்?இதை உணர்ந்த ராமபிரான், கானகம் செல்லும் தருணத்தில் கைகேயியைக் கடிந்து பேசிய லட்சுமணனிடம் அமைதியாக விதி என்கிற தத்துவத்தை அறிவுறுத்துகிறான். `மெய்த்திருப் பதம் மேவென்ற போதினும் இத்திருத் துறந்து ஏகென்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை’ போன்ற முகத்தோடு மலர்ச்சியாக இரு நிலைகளையும் ஏற்றவன் அல்லவா ராமன்?`லட்சுமணா! நதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் பிழையா? மலையில் மழை பெய்யவில்லை என்றல்லவா அறிய வேண்டும்?
நமக்கு நேர்ந்துள்ளவை கைகேயியால் வந்தவை அல்ல. பரதனாலும் வந்தவை அல்ல. விதியால் வந்ததென்று!’
`நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை அற்றே
பதியின் பிழையன்று பயந்து நமைப்புரந்தாள்
மதியின் பிழையன்று மகன் பிழையன்று
விதியின் பிழை இதற்கு என்னை நீ வெகுண்டதென்றான்!’
கம்பர் ராமபிரான் மூலம் சொன்ன விதித் தத்துவத்தை அதற்கும் முன்பாகவே சிலம்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சொல்லிவிட்டார்.
