Sunday, October 15, 2023
HomePurana Kathaigalபேரூர் ஆதி மூர்க்கம்மன் கோயில் வரலாறு பற்றி தெரியுமா?

பேரூர் ஆதி மூர்க்கம்மன் கோயில் வரலாறு பற்றி தெரியுமா?

பேரூர் ஆதி மூர்க்கம்மன் கோயில் வரலாறு பற்றி தெரியுமா?

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் என்ற ஊரில் ஆதி மூர்க்கம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் மூலவராகவும், உற்சவராகவும் ஆதி மூர்க்கம்மன் காட்சி தருகிறாள். இந்தக் கோயிலில் அரண்மனை விளக்கு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அரண்மனை விளக்கு திருவிழா என்றால், இருளர்களால் பராமரிக்கப்பட்டு வந்த இந்தக் கோயிலில் தீப்பந்தங்கள் ஏற்றி வைத்து விழா கொண்டாடி, பன்றியை பலியாக கொடுப்பார்கள். இந்த விழா இன்று வரை கொண்டாடப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்தக் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா, அரண்மனை விளக்கு திருவிழா, திருக்கல்யாண உற்சவம் ஆகிய விழாக்கள் இந்தக் கோயிலில் முக்கிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதில் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது தான் பட்டீஸ்வரர் கோயிலில் தேர்த்திருவிழா நடக்கும். ஆனால், மூர்க்கம்மன் கோயில் முன்பிலிருந்து இருப்பதால், இந்தக் கோயிலில் தான் முதலில் தேர்த்திருவிழா கொண்டாடப்படும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.

பண்டைய காலம் முதல் தொன்றுதொட்டு பேரூர் கோயிலில் நடக்கும் திருவிழாவின் போது இந்த ஆதி மூர்க்கம்மனுக்கு தான் முதல் நாள் உற்சவம் நடக்கும் என்பது கோயிலின் சிறப்பு ஆகும். அமைதியான பொதுமக்கள் ஆதிகம் கூடாத இடத்தில், வனம் சூழ்ந்த நிலையில் இருக்கும். கோயிலை சுற்றியும் தற்போது தோட்டங்களும், விவசாய நிலங்களும் சூழ்ந்துள்ளது. இந்த கோயில் இருக்கும் இடம் அடர்ந்த வனப்பகுதியாக இருந்துள்ளது. ஆனால், தற்போது தோட்டங்கள் மட்டுமே இருக்கிறது. இந்தக் கோயிலில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்த திருக்கல்யாண வைபவம், காலப்போக்கில் அது மறைந்து பேரூர் கோயிலுக்கு உள்ளேயே நடப்பதாக சொல்லப்படுகிறது.

செவ்வாய் தோஷம் மற்றும் நாக தோஷம் நீங்க இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர். அதுமட்டுமின்றி திருமணத் தடை நீங்கவும் கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் பலி கொடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோயிலானது வனப்பகுதியாக இருந்தது. அங்கு இருளர்கள் ஒரு பாறையை கடவுளாக வணங்கி வந்தனர். ஒரு சில விசேஷங்களின் அம்மன் மிகவும் ஆக்ரோஷமாக கட்சியளித்ததை பலரும் உணர்ந்துள்ளனர். அந்த ஆக்ரோஷமான உருவத்தை வரைந்து அதனை சிலை வடிவம் அமைத்துள்ளனர்.

இரவு நேரங்களில் காட்டுப் பூனைகள் கோயிலை சுற்றி வந்து அம்மனை வணங்குவதை பலரும் பார்த்துள்ளனர். ஆகையால் இந்தக் கோயிலானது, பேரூர் கோயிலைவிட பல ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லப்பட்டது. கரிகாற்சோழன் தனது சாபத்தீட்டைஒழிப்பதற்க்காக கொங்கு நாட்டில் உள்ள கோவில்களை புதுப்பித்து, நொய்யலில் தீர்த்தம் எடுத்து குளித்துள்ளார். அப்போது இருளர் கட்டுப்பாட்டில் இருந்த இந்த கோயிலுக்குள் சோழன் வருவதை மூர்க்கம்மன் அனுமதிக்கவில்லையாம். அதற்க்காக சோழ நாட்டை சேர்ந்த ஒருவரை பலி கொடுத்தால் மட்டுமே அனைவரும் கோயிலுக்குள் வர முடியும் என மூர்க்கம்மன் சோழனின் கனவில் தெரிவித்ததாக கூறிப்படுகிறது.

அதன்படி, சோழ நாட்டை சேர்ந்த ஒருவர் பலி கொடுத்த பின்னரே அனைவரும் கோயிலுக்குள் செல்வதாக வரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு கிராம தேவதை கோவில்கள் இருக்கும். இந்த தேவதையின் கோவில் மிகவும் சிறியதாய் இருக்கும். இதுபோன்ற கிராமங்களில் சிவன் கோயிலோ, திருமால் கோயிலோ இருக்கும். ஆனால், அவற்றுக்கு முன்னதாக கிராம தேவதைக்கே உற்சவ பூஜை நடக்கும். அந்த கிராம தேவதைகளின் வரிசையில் பேரூர் கிராம தேவதையாக மூர்க்கம்மன் திகழ்கிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven + seven =

Most Popular