கருட புராணம் – பகுதி 2 பாம்பு கடிக்கு ப்ராணேச்வர மந்திரம்

349

இது பாம்பு கடிக்குப் பயன்படும் மந்திரம். பாம்பு கடித்த இடத்தை அனுசரித்து அதன் கொடுமையை அறியலாம். ஆற்றில் பாம்பு கடி நிகழ்ந்தால் பிழைப்பது கடினம். மயான பூமியில், பாம்புப் புற்றில், மலைமீதில், கிணற்றில், மரப்பொந்தில் பாம்புகடி ஏற்பட்டால், கடியில் மூன்று பல் அடையாளம் இருந்தால் கடிபட்டவன் இறந்து விடுவான். அக்குள், இடுப்பு, தொண்டை, நெற்றி, காது, வயிறு, வாய், புஜம், முதுகு ஆகியவற்றில் கடித்தால் காப்பாற்றுவது கடினம். படைவீரனும் பிச்சைக்காரனும் பாம்பு கடிக்கப்பட்டால் இறப்பதற்கு அறிகுறி. மற்ற பாம்பு கடிகளுக்கு நிவாரணம் பெற பிராணேஸ்வர மந்திரம் உதவும். அஷ்ட தள தாமரை மலரில் மந்திரத்தின் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சொல்லை எழுத வேண்டும். அதைப் பாம்பு கடித்த ஆள் மீது வைத்து நீராட்ட வேண்டும். சிறிது நெய்யைக் குடிக்க வைக்கவும். உண்மையில் மந்திரத்தைச் செபித்து, அதேசமயம் சர்க்கரைப் கட்டிகளை வீட்டில் சிதறச் செய்யின் பாம்புகள் அந்த வீட்டை விட்டகலும்.

தொடரும்…

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!

கருட மந்திரம்:

கருட மந்திரம் மிகவும் முக்கியமானது. ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் கருட மந்திரத்தை உபதேசமாகப் பெற்றே பல சித்திகளைப் பெற்றார்.

கருடாய நமஸ்துப்யம் ஸர்வ சர்பேந்திர சத்ரவே
வாஹனாய மஹாவிஷ்ணோ தார்க்ஷயாய அமித தேஜயே
ஓம் நமோ பகவதே, கருடாய; காலாக்னி வர்ணாய
ஏஹ்யேஹி கால நல லோல ஜிக்வாய
பாதய பாதய மோஹய மோஹய வித்ராவய வித்ராவய
ப்ரம ப்ரம ப்ரமய ப்ரமய ஹந ஹந
தஹ தஹ பத பத ஹும்பட் ஸ்வாஹா

🙏கருட பத்து🙏

🙏பச்சை முகில் மேனியனே யுனக்கே யிந்தப் பார்தனிலே பத்தவதாரமுண்டு, மச்சமென்றும் கூர்மமென்றும் வராக மென்றும், வாமனென்றும் ராமனென்றும் பவுத்தனென்றும், துஷ்டரையடக்க மோகினி வேடங்கொண்டவராய்த் தோன்றினாயுன்சொரூப மெல்லாம் அறிவாருண்டோ, அச்சந்தீர்த் தெனையாளக் கெருடன்மீதில் அன்புடனே யேறிவந்தருள் செய்வாயே🙏

கருட தரிசன பலன்;
**************************
1)ஞாயிறு-நோய் நீங்கும்
2)திங்கள்-துயரம் போகும்
3)செவ்வாய்-துன்பம் நீங்கி அழகு உண்டாகும்
4)புதன்,வியாழன்-பில்லி சூன்யம் வைப்பு அகலும்
5)வெள்ளி,சனி-தீர்க்காயுசும்,பொருளும் ஏற்படும் .

கருடனைத் தரிசிக்கும் பொழுது கை கூப்பலாகாது.வலதுகை மோதிர விரலால் இரு கன்னங்களையும்
மூன்று முறைகள் தொட்டு கிருஷ்ணா,கிருஷ்ணா,கிருஷ்ணா என்று கூ றி வணங்குதல் வேண்டும்.

வானில் கருடனைக் கண்டால் இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபடலாம்.
குங்குமாங்கித வர்ணாய குந்கேந்து தவளாயச!
விஷ்ணுவாஹ!நமஸ்துப்யம் பக்ஷிராஜாய தே நம;!