Thursday, October 19, 2023
HomePurana Kathaigalகருட புராணம் - பகுதி 9 பிரேத ஜன்மம் நீங்க வழி

கருட புராணம் – பகுதி 9 பிரேத ஜன்மம் நீங்க வழி

அடுத்து, பகவான் கருடனை நோக்கி பிரேத ஜன்மம் தொலைய என்ன செய்ய வேண்டும் என்று விளக்கலானார்.

பிரேத ஜன்மம் நீங்க விரும்பும் ஒவ்வொருவரும் தான் இறப்பதற்கு முன்பே தனது கையாலேயே விருஷோற் சர்க்கம் செய்யவேண்டும்.

உயிருடன் இருக்கும்போதோ, இறந்த பிறகோ இது செய்யப்பட்டால் அவனுக்குப் பிரேத ஜன்மம் வருவதில்லை. இதைத் தவிர வேறு எந்த கர்மாவினாலும் இதைத் தடுக்க முடியாது.

இதனை ஒருவன் இறந்த பதினொன்றாம் நாளன்று செய்ய வேண்டும்.

அப்படிச் செய்யப்படின் அவன் பெரியோர்கள் அடையும் உலகை அடைவான்.

முக்தி தரும் நகரம் ஏழினுள் ஒன்றில் இறந்தவனும் நல்லுலகை அடைவான்.

இந்தக் கர்மாவைப் புத்திரன், மனைவி, பெண் வயிற்றுப் பிள்ளை, (அ) பெண் செய்யலாம்.

புத்திரன் இருந்தால் அவன் மட்டுமே செய்ய வேண்டும்.

பிள்ளை இல்லாமல் இறந்தவன் நரகத்தையே அடைவான்.

எனவே எத்தகைய அரிய கர்மாவைச் செய்தாகிலும் ஆண்மகன் ஒருவனைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நல்வினை செய்யாதவன், புத்திரன் இருந்தும் கிருத்தியங்கள் செய்யாமல் விட்டால், இரவு பகலாக, பசி, தாகத்தோடு அலைந்து திரிந்து பின்னர் பலவகைப் பிறவிகள் எடுத்து மீண்டும் மனிதரில் கடை ஜாதியில் பிறப்பான்.

எனவே, ஒருவன் நல்லுலகை அடைவதற்குரிய நல்வினைகளைச் செய்யத் தெரிந்தவன் நற்கர்மங்களைச் செய்யக் கடவன் என்று பகவான் கருடனுக்குக் கூறினார்.

தொடரும்…

விஷ்ணு வல்லபாய த்ரிலோக்ய பரிபூஜிதா!!!!

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =

Most Popular