இளயான்குடிமாற நாயனார்

570

பரமகுடியின் அருகிலுள் இளயான்குடி சிற்றூரில்
பரமனின் பரம பக்தனாய் மாறனார்
பரமனடி போற்றி பரமனுக்காய் பிறந்தார்
பற்றெல்லாம் சிவனின் பதமே இருக்க

வேளாண்மரபில் பெருமதிப்பில் வேள்வித் தீப்போல்
வேலவன் தந்தை வேதமூர்த்தியை தலைவனாக
வேண்டியேற்று கண்ணில் படுமெ வராகினும்
வேண்டி வணங்கி மாகேசர் பூசையால்

வழிப்பட்டு வந்தாராம் மாறனெனும் விவசாயி
வழிப்பாட்டில் சிவவழிப் பாட்டில் சிறப்பானது
வழிவழியான மரபு விதி மாறாது
வழிப்பாட்டார் சிவனடியாக எவ்வர்ணத் தினராகினும்

மாகேசுவர வழிபாடாம் மாதவமென பூசித்தான்
மாமலையானை வணங்கும் சிவபக்தர்கள் எவராகினும்
வாசலில் நின்று காணும் போதே
வாயார வாழ்த்தி வணங்கி அழைத்திடுவார்

வந்தோரை கரகநீரால் திருவடிகளைக் கழுவித்
தொழுது துடைத்துக் கண்ணி லொற்றி
தவறாது மலரால் அர்ச்சித் துஅமுதிட்டார்
தொடர்ந்து செய்தார் தொண்டாக நாளும்

குபேரனாக வாழும் மாறனாரின் சேவை
கணங்களின் தலைவன் சிவனும் தடுமாறாது
தொண்டைத் தொடருவா னோ?யென யறிய
தொடுத்தார் வறுமை அம்புகளை இளயான்குடிமீது

சொத்துகள் இழந்து செல்வமும் இழந்து
சோதனைகள் பெருகிட சாதனையாக தன்தொண்டைத்
தவறாது தவிப்போடு கடன்பெற்றும் புரிந்தார்
தன்னலம் கருதாது நிறபேதம் பாராது

குலபேதம் போற்றாது தன்சிவமே சித்தமாக
திருநீறு பூசியத் திருத்தொண்டர்கள் எவராகிலும்
எதிர்படும் முதல்வரை முனைந்து அழைத்து
எதிர்பார்ப்பு இல்லாது மாகேசர் வழிபாட்டை

மனமகிழ்ந்து செய்திட்டார் இளயான் குடியார்
மன்மதனை எரித்த பரமசிவனும் மனமகிழ்வில்
மயங்கா மாறனின் தொண்டைச் சிறப்பிக்க
மாசற்ற சிவத்தொண்டராக வந்தார் ஓரிரவில்

பெருமழை எங்கும் பேய்காற்று பேரழகன்
பெருமானான் இளயான்குடி வாயிலில் நிற்க
நெடுநேரம் சிவனடியார் காணாது தாளிட்டு
கொடும்பசியில் தூங்கிட சென்றார் மாறனார்

அந்நேரம் வாயிற் கதவொலியில் வந்துக்
கண்ட நேரம் பெருமகிழ்வில் அடியாரை
வரவேற்று பாதம் கழுவிப் பூசித்து
அமுதப் படைக்கக் கோரி நின்றார்

“ஆம் ” அப்படியே ஆகட்டும் தயாரிக்க
ஆணைப் பெற்று ஆய்ந்துப் பார்த்தார்
அடுப்படியில் ஒன்றும் இல்லை கடனளிப்பாரும்
கடந்த நேரத்தில் இயலாதக் காரியம்

கனத்த இதயத்தில் கைப்பிசைந் துநிற்க
கணவரிடம் குறிப்பாக உணர்த்தினார் மனைவியார்
காலையில் நட்ட விதைநெல் இருக்குமேயென
விரைத்தெடுத்து வந்தார் வயலிலிருந்து மிதந்ததனைத்தும்

நெல்மணிக் கிடைத்தது ஆனால் விறகில்லையே
நோகாது மேல்கூரை கம்பை உடைத்து
நோன்பான சேவைக்கு துணைப் புரிந்தார்
நோன்பாகவே பணிந்து பெற்ற மனையாளும்

பக்குவமாய் அதைதூய்மை செய்துப் பொங்கினாள்
பதியிக் கேற்ற பத்தினியாக கறிக்கு
உகந்தது செய்ய ஏதுமில்லை என்றிட
பின்புறம் நட்டக் கீரை தண்டுகளை

கொண்டுவர எத்தணிக்க உடன் பறித்துத்தர
கொண்ட கீரையினை தரமான கறியாக
கணநேரத்தில் சமைத்து அழையுங்கள் அடியாரை
அமுது படைப்போம் மனமகிழ்ந்து என்றாள்

தம்பதியர் உறங்கிய சிவனடியை எழுப்பச்
சென்றுப் பார்க்க பெருஞ்சோதி கண்விரிப்பில்
விரித்தப்படி மண்டியிட்டு வணங்கினார்கள் சிவசிவயென
சிவனைப் போற்றி சிவனாக நின்றார்கள்

மாறனே ! பேதமில்லாது எமதடியார்கள் பசிப்போக்கி
மாறாது உனது சேவையில் மகிழ்ந்தேன்
மாசில்லா பக்தி பூசையில் குளிர்ந்தேன்
மாதவமாய் பெற்றத் தொண்டால் ஒளிர்ந்தேன்

எம்மோடு சேருவீர் அமரத்துவமாய் நாளும்
எம்மோடு போற்றப்படுவீர் வாழ்க நின்தொண்டு
என்றிட பேரானந்த போராளியில் கலந்தார்கள்
இளயான்குடி மாறானாரும் அவர்தம் மனைவியாரும்

போற்றி அவன்தாள் போற்றி என்றும்
போற்றி அவன்சேவடி போற்றி என்றும்
போற்றி அவன்கழலடி போற்றி என்றும்
போற்றி அவனடி யார்களின் அடித்தாள்