Saturday, November 4, 2023
HomePurana Kathaigalஷிர்டி சாய் பாபா பகுதி -24

ஷிர்டி சாய் பாபா பகுதி -24

நேற்றைய தொடர்ச்சி….
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத் சர்யம் ஆகிய ஆறு கெட்ட குணங்களையே பாபா தட்சிணையாகக் கேட்கிறார். பணத்தை அல்ல! உன்னிடம் பணம் இல்லையே என்று கவலைப்படாதே.
இந்த ஆறு குணங்களை தட்சிணையாக பாபா வுக்குக் கொடுத்துவிடு. பின் அந்த கெட்ட குண ங்கள் நிரந்தரமாக உன்னை விட்டுப் போய் விடும். இந்த விளக்கத்தை கேட்ட பாபா, தட்கட் டின் கணவர் சொன்னதே சரி எனத் தலையாட்டினார்.
தட்கட்டின் விழிகளில் கண்ணீர்! பாபாவின் பாதங்களில் தனது ஆறு கெட்ட குணங்களை யும் சமர்ப்பித்துவிட்டதாக அவள் நெகிழ்ச்சியு டன் அறிவித்தாள். பாபாவைப் பூரண நம்பிக்கையுடன் நமஸ்கரித்து எழுந்தாள்.
பின் அவள் வாழ்க்கை ஆனந்தமயமாக அமை ந்தது என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன? பேராசையே பெரும்பாலானவர்களின் வாழ்வி ல் நிம்மதியைக் கெடுக்கிறது என்பதை பாபா அறிந்து வைத்திருந்தார்.
பேராசையை இயன்றவரை குறைப்பதன் பொ ருட்டே பக்தர்களிடம் பணத்தைக் காணிக்கை யாக அதட்டிப் பெற்றார். ஆனால், பல நல்ல மனிதர்களிடம் பணமல்லாததைக் காணிக்கை யாகக் கேட்டுப் பெற்று அவர்களை மேலும் நல்லவர்களாக்கும் வித்தையும் பாபாவுக்குத் தெரியும். தமது அடியவரான பேராசிரியர் நார்கேயிடம் பதினைந்து ரூபாய் தட்சிணை கேட்டார் பாபா.
மறுகணம் நார்கேயின் கண்களில் கண்ணீர் வழியத்தொடங்கியது. அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. பாபா கேட்டுவிட்டார். ஆனால் தன்னால் கொடுக்க முடியவில்லையே?.
உன்னிடம் பணம் இல்லையென்று எனக்குத் தெரியாதா? அப்படியிருக்க உன்னிடம் பணத் தை தட்சிணையாகக் கேட்பேனா? பணத்தை விட உயர்ந்த ஒன்றை தட்சிணையாகப் பெற விரும்புகிறேன். நீ நாள்தோறும் படிக்கும் யோக வாசிஷ்டத்திலிருந்து தட்சிணை கொடு! என்று அதட்டினார் பாபா.
அதாவது யோக வாசிஷ்டம் என்ற தத்துவ நூலிலிருந்து பதினைந்து நீதிபோதனைகளை எடுத்துக்கொண்டு அந்த அடியவர் தமது வாழ்வில் அவற்றைத் தவறாமல் அனுசரித்து வரவேண்டும் என்பதே பாபா கேட்ட காணிக்கை.
நார்கே நெகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். தன்னை மேலும் மேலும் நல்லவனாக்க பாபா எத்தகைய யுக்திகளையெல்லாம் கையாள்கி றார் என்றெண்ணி அவர் மனம் தழுதழுத்தது. பாபாவை முன்னிட்டுப் பலர் பல விதமான வேண்டுதல்களை மேற்கொள்வார்கள். பாபா வின் புகழ் எங்கும் பரவியிருந்ததால் வேண்டு தல்களை மேற்கொள்ளும் அன்பர்கள் எண்ணிக்கையும் வளரத் தொடங்கியிருந்தது.
ஷிர்டியில் பாபாவை தரிசிக்க வரும் அன்பர்க ளின் கூட்டமும் அதிகமாகத் தொடங்கியது. மும்பை பகுதியில் அமைந்த தானே என்ற பிர தேசத்தில் சோல்கர் என்றோர் அன்பர் வசித்து வந்தார். பாபாவின் பெருமைகளைக் கேள்விப் பட்ட அவர் மிகுந்த பரவசம் கொண்டார்.
அவர் சிவில் கோர்ட்டில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வந்தார். அதிக வசதியில்லா தவர். உறவினர்கள் பலர் உள்ள பெரிய குடும் பத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை. அவர் ஒருநாள் மனத்தில் திடீரென ஓர் உறுதி ஏற்ப டுத்திக் கொண்டார். தற்காலிக ஊழியராக இருந்தவர், இலாகா தேர்வொன்றில் வெற்றி பெற்றால் நிரந்தர ஊழியராக்கப் படுவார்.
அப்போது அவரது சம்பளம் உயர்ந்து வறுமை நீங்கும். பாபா! நான் மட்டும் தேர்வில் வெற்றி பெற்று நிரந்தர ஊழியன் ஆகிவிட்டால் உங்களை மறக்க மாட்டேன். உங்களைத் தேடி ஷிர்டி வருவேன். உங்கள் நாமத்தை சொல்லி, உங்கள் முன்னிலையில் பக்தர்களுக்கு ஷிர்டி யில் கல்கண்டு வினியோகம் செய்வேன்.
பாபாவைப் பூரணமாக நம்பிப் பிரார்த்தித்த வாறு தேர்வுக்குப் படிக்கலானார் சோல்கர். தே ர்வு நாள் வந்தது. தேர்வு எழுதுவதற்கு முன்பும் தன் வேண்டுதலை ஒருமுறை மனத்தில் உறு தி படுத்திக்கொண்டார். பின் நம்பிக்கையோடு தேர்வை எழுதி முடித்தார். அவரது நம்பிக்கை வீண்போகவில்லை.
பாபாவை நம்பியவர்களை பாபா கைவிட்டதா கச் சரித்திரம் இல்லையே? தேர்வில் வெற்றி பெற்றார். அவரது பணி நிரந்தரமாக்கப்பட்டது. புதிய சம்பள விகிதம் அமல்படுத்தப்பட்டு அவர் கைக்கு வரச் சில மாதங்கள் ஆகலாம்.
ஆனால், அதுவரை வேண்டுதலை நிறைவேற் றக் காத்திருப்பது சரியல்ல என்று சோல்கருக் குத் தோன்றியது. ஷிர்டி செல்லப் பணம் வே ண்டுமே? அவ்வளவு பணம் எப்படி கிடைக்கும்? யோசித்து ஒரு முடிவுசெய்தார்.
செலவைக் குறைத்துச் சிக்கனத்தின் மூலம் பணம் சேகரிக்க எண்ணினார். எனவே, தேநீரி ல் சர்க்கரை சேர்ப்பதில்லை என முடிவெடுத் தார். அதனால் சர்க்கரைக்கு ஆகும் செலவு மட்டுப்பட்டு அவரால் ஷிர்டிபயணத்திற்கான பணத்தைச் சிறிதுநாளில் சேகரிக்க முடிந்தது.
தான் சேமித்த பணத்தின் மூலம் ஷிர்டி வந்த அவர், பாபாவை பார்த்தது பார்த்தபடி நின்றார். அவ்வளவு பரவசம் அவரைத் தொற்றிக் கொ ண்டது. மனித வடிவெடுத்த கடவுள் முன்னி லையில் நின்று கொண்டிருக்கிறோம் என்ப தை அவர் உள்மனம் உணர்ந்து கொண்டது.
பாபாவின் பாதங்களில் நெடுஞ்சாண் கிடை யாக விழுந்து வணங்கினார். பாபா அவரையே கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். எதுவு ம் பேசவில்லை. பின் பாபாவின் அடியவர்கள் அனைவருக்கும் கல்கண்டு வினியோகம் செய்யலானார் சோல்கர்.
பாபா, திடீரென்று தம் அடியவர் ஒருவரை அழைத்தார். அதோ அங்கே என் அன்பர்களு க்குக் கல்கண்டு வினியோகம் செய்துகொண் டிருக்கிறாரே, அவருக்கு நிறையச் சர்க்கரை போட்டு ஒரு கோப்பை தேநீர் கொடுங்கள், என்றார் பாபா.
கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அந்த சொற்களின் முழுப்பொருள் புரியவில்லை.
ஆனால், புரிய வேண்டியவருக்கு அதன் உள்ள ர்த்தம் முழுவதும் புரிந்தது. தாம் ஷிர்டி வருவத ற்காக சர்க்கரை கலவாத தேநீர் சாப்பிட்டு மிச் சப்படுத்தியது பற்றி பாபா அறிந்திருக்கிறார் என்பதை சோல்கர் உணர்ந்துகொண்டார். ஓடோடி வந்து பாபாவைப் பணிந்தார்.
அவரை கைகளால் தூக்கிய பாபா பரிவோடு அவர் தலையை வருடிக் கொடுத்தார். இரவும் பகலும் எப்போதும் உன் இதயத்தில் தானே நான் இருக்கிறேன். நீ செய்யும் ஒவ்வொரு செயலையும் நான் கண்காணித்து கொண்டிரு க்கிறேனே அப்பா! நீ என்னை நாடி வருவதற் காக இனிப்பைத் தியாகம் செய்தது எனக்குத் தெரியாதா என்ன? என்று அவரது பார்வை சொல்லாமல் சொல்லிற்று.
ஒருமுறை பாபா மசூதியில் அமர்ந்திருந்த போது மசூதிச் சுவரில் ஒரு பல்லி டிக்டிக் என்றது. இதென்ன? கெட்ட சகுனமா நல்ல சகுனமா? என்று கேட்டார் அவர்முன் அமர்ந்தி ருந்தபக்தர். இரண்டுமில்லை. இந்த பல்லியை ப் பார்க்க இதன் சகோதரி அவுரங்காபாத்திலி ருந்து வந்து கொண்டிருப்பதை இது உணர்ந்து விட்டது.
அதுதான் மகிழ்ச்சியுடன் குரல் கொடுக்கிறது! என்றார் பாபா,என்னது, பல்லிக்கு சகோதரியா கேட்டவரின் தலை சுற்றியது. ஆனால், பாபா சொன்னபடி அந்த சகோதரிப் பல்லி ஷிர்டி வந்து சேர்ந்ததே, அது ஒரு சுவாரஸ்யமான சம்பவம்..
ஓம் ஸ்ரீ சாய் ராம்…
நாளை பாகம் 25 தொடரும்…

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =

Most Popular