சிவபுராணம் பாகம் 31

567

நாரதர், தேவியிடம் வந்திருப்பவரை புதிய நபராக கருதாமல் தங்களின் உடன்பிறப்பாக எண்ணி தங்களின் மனதில் எண்ணிய சிலை யை முடித்து தருமாறு கூறினார்.

இருப்பினும் தேவி அவர்கள் எவ்வழியாயினும் அதை நானே நிறைவு செய்வேன் என்று கூறினார். பின்பு நாரதர் தேவியிடம் எடுத்து ரைக்க தன் மனதில் விருப்பம் இல்லை என்றாலும் நாரத ரிஷியின் அறிவுரைகளை ஏற்று அருகில் இருந்த மங்களகரமான மஞ்சள் நிற கயிற்றை எடுத்து சிற்பியின் கைகளில் அவரின் மனைவி அருகில் அமர்ந்து இருக்க தேவி பார்வதி அணிவித்தார்.

இக்காட்சியானது நாரதர் பார்வையில் மாற்று உருவத்தில் இக்குடிலை அடைந்த சிற்பியாக வும் அவரின் மனைவியின் உண்மை உருவமா ன வைகுண்டத்தில் வீற்றிருக்கும் லட்சுமி தேவியுடன் உள்ள நாராயணனின் கைகளில் தேவி பார்வதி தங்களை தன்னுடைய தமைய னாக ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் வகையில் கயிற்றை கட்டினார்.

இக்காட்சியை காண தான் என்ன தவம் செய் தேனோ என தன் மனதில் அகம் மகிழ்ந்தார் நாரதர். பார்வதி தேவி செய்த பல லிங்கத்தை எம்பெருமானான சிவபெருமான் பூர்த்தியாகா மல் தடுத்தார்.

ஆனால், நாராயணன் கையால் உருவாகும் சிவலிங்கத்தை என்னால் மட்டுமின்றி எவரா லும் எப்படி நிறைவேறாமல் தடுக்க இயலும் என சிவபெருமான் எண்ணி எவ்விதமான இடையூறுகளையும் ஏற்படுத்தாமல் அமைதி காத்தார்.

பின்பு சிற்பியான நாராயணன் தனது சகோ தரியான பார்வதி தேவியின் விருப்பமான சிவலிங்கத்தை பூர்த்தி செய்தார். ஆனால், பார்வதி தேவி சிற்பியை கண்டு தாங்கள் யார்? என்று கூறுமாறு கேட்டார்.

மாற்று உருவத்தில் வந்த நாராயணன் நான் பல வருட சிற்பக் கலையில் அனுபவம் கொ ண்ட சாதாரண சிற்பியாவேன் என கூறினார். ஆனால் தேவிபார்வதிக்கு சிற்பியின் கூற்றில் நம்பிக்கை ஏற்படவில்லை.

ஏனெனில், சிவபெருமானின் சிலையை செய்வதில் பல்வேறு விதமான இன்னல்கள் உண்டாகியது. ஆனால், இவரோ எவ்விதமான சிரமங்களுக்கும் ஆளாகாமல் சிலையை நிறைவு செய்தார் எனில் இவர் சாதாரணமான சிற்பி இல்லை என்பதை உணர்ந்தார்.

மேலும், தேவி பார்வதி தாங்கள் யார்? என்பத னை நான் அறிய விரும்புகிறேன். தாங்கள் யார்? என்று கூறுமாறு பணிந்து நின்றார். இனி எவ்விதம் உரைத்தாலும் பயனில்லை என உணர்ந்த நாராயணன் தன்னுடைய மாற்று உருவத்தை விடுத்து உண்மையான நாராயணனின் வடிவத்தை தேவி லட்சுமியு டன் இணைந்து காட்சியளித்தார்.

பார்வதி தேவியும், நாரதரும் அந்த காட்சியை கண்டு மகிழ்ந்தனர். இருப்பினும் தேவி பார்வ தி நாராயணனிடம் ஒரு உபயம் வேண்டும் என கூறி நின்றார். தன்னுடைய சகோதரியின் கோரிக்கையை நிறைவேற்றுவது ஒரு தமையனின் கடமையாகும் எனக் கூறினார் நாராயணன்.

பார்வதி தேவி இனி மேற்கொண்டு தாங்கள் எனக்கு எவ்விதமான உதவியையும் செய்ய வேண்டாம் என்று கூறினார். ஏனெனில், இனி வரும் செயல்கள் யாவும் நானே செய்து முடித்தல் என்பதே என் விருப்பமாகும். இனி தாங்கள் மேற்கொண்டு எவ்விதமான உதவி யையும் செய்ய வேண்டாம் என்று பணிந்து நின்றார்.

தேவியின் வேண்டுகோளுக்கு இணங்கி நாராயணனும் அவ்விதமே அருள் பாவித்து மறைந்தார். இவ்விடத்தில் நிகழ்ந்தவை யாவையும் தன் ஞான பார்வையால் உணர்ந்த எம்பெருமானான சிவபெருமான் தோல்வி அடைந்தாலும் நீரே வெற்றி கொண்டாய் பார்வதி தேவி எனக் கூறினார்.

எம்பெருமானான சிவபெருமானுக்கு பார்வதி தேவியின் ஒவ்வொரு செயலாலும் அவர் மீது கொண்ட சினம் குறைந்து கொண்டே இருந்தது. ஏனெனில், பார்வதி தேவியின் ஒவ்வொரு செயல்களும் சதியின் செயல்க ளில் இருந்து முற்றிலும் மாறுபட்டவையாக இருந்தன.

நாராயணன் சிவபெருமான் முன் தோன்றி வணங்கி பார்வதி தேவிக்கு தான் உதவியதை பற்றி கூறினார். ஆனால், தேவியோ இனி மேற்கொண்டு தனக்கு உதவ வேண்டாம் என்று தன்னிடம் கூறிவிட்டார். அதனால், இனி தேவிக்கு எவ்விதமான இன்னல்களையும் தோற்றுவிக்க வேண்டாம் எனக் கூறினார் நாராயணன். ஏனெனில், பார்வதி தேவி என் சகோதரி என்று கூறினார்.

சுக்கிராச்சாரியார் தனது சீடர்களில் சிறந்தவ ரான தாரகாசுரனின் கோரிக்கையை ஏற்று அசுரர்களில் ஒருவரை தேவராக மாற்றி தேவர்கள் உள்ள சிறைக்கு சென்று அங்கு நிகழ்வனவற்றை அறிந்து வருவாயாக எனக் கூறினார்.

பின்பு குருவிடமும், தனது குலவேந்தரான தாரகாசுரனிடமும் ஆசி பெற்று ஒற்றர் பணியை செவ்வனே செய்ய சென்றான் தேவ உருவத்தில் இருந்த அசுரன்.

எம்பெருமானான சிவபெருமான் நாராயணனி டம் யாம் அளிக்கும் இன்னல்கள் யாவும் பார்வதி தேவிக்கு முந்தைய பிறவிகளில் இளைத்த தவறில் இருந்து எது சரியானது? எது அனர்த்தம்? என புரியும் வண்ணம் அமையும்.

ஏனெனில், பார்வதி தேவி என்னில் சரிபாதி. பார்வதி தேவி தான் யாரென்று அறியும் பொருட்டு என் சோதனைகள் யாவும் தொடரும் என கூறினார்.

பார்வதி தேவி, இன்னல்களுக்கு ஆட்படும் போது தன்னுள் இருக்கும் சக்தியை அவரால் உணர இயலும். ஏனெனில், என்னில் பாதியா ன பார்வதி தேவி தான் யார் என்று அவர்கள் உணர்தல் மிகவும் அவசியமாகும் என சிவபெருமான் நாராயணணிடம் கூறினார்.

நாராயணன் புன்முறுவலுடன் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் மகாதேவரே எனக் கூறினார். ஏனெனில் என் சகோதரியான பார்வதி தேவியை என்னில் பாதி என தாங்கள் கூறியமைக்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றார்.

மேலும், தாங்கள் யோகி வடிவம் விடுத்து தம்பதியாவீர்கள் என கூறினார். இனி இந்த பிரபஞ்சம் புதியதொரு மையலை கண்டு புத்துணர்ச்சி அடைந்து செழுமை பெறும் என்று கூறினார்.

எம்பெருமானான சிவபெருமான் இவையாவும் கேட்டு அமைதி கொண்டு இருந்தார். தேவி பார்வதி தன்னை உணரும் பட்சத்தில் எடுத்த எண்ணத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே என்னை அடைய இயலும் நாராயணா, இதை என்றும் தாங்கள் நினைவிற் கொள்ள வேண்டும் என்றார்.

ஆனால், நாராயணனோ எவ்விதமான ஐயமி ன்றி என் சகோதரி தங்களின் பதியாவார் என்று கூறி தான் விடைபெற அனுமதி பெற்று அவ்விடத்தை விட்டு மறைந்துச் சென்றார்.

மாறுவேடத்தில் இருந்த அசுரன், அடைத்து வைக்கப்பட்ட தேவர்கள் இருந்த சிறைக்கு சென்று அங்குள்ள தேவர்களின் ஒருவராக நின்று, அவர்களின் பேச்சை கவனித்தான்.

இருப்பினும் தேவர்கள் யாவரும் பேசாமல் அமைதிக் கொண்டு இருந்தனர். அவர்களிடம் பேச்சை தொடர்வதற்காக சர்வம் படைத்த சர்வேஸ்வரா, நாங்கள் அடையும் இன்னல்க ளை தாங்கள் இன்னும் அறியவில்லையா? எப்பொழுது நாங்கள் இந்த சிறையில் இருந்து வெளியேறுவோம் என தேவ ரூபத்தில் இருந்த அசுரன் கூறினார்.

ஆனால், அசுரன் எதிர்பார்த்த எவ்விதமான தகவல்களும் அவருக்கு கிடைக்கவில்லை. மாறாக அமைதி மட்டுமே அவருக்கு பதிலாக கிடைத்தது. சிறையில் இருந்த தேவர்களுக்கு தாரகாசுரனால் ஏற்பட்ட இன்னல்கள் எண்ணி லடங்கா வகையில் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன. தேவர்களோ, மகாதேவரை வேண்டி நின்றனர். மகாதேவரோ யாவும் உணர்ந்தவராக அமைதி காத்தார். ஏனெனில், பார்வதி தன்னை உணராமல் இருப்பதாக அறிந்தார்.

குடில் கொண்டுள்ள இடத்தின் அருகில் தான் வைத்துள்ள எம்பெருமானான சிவபெருமானி ன் சிலைகளை கையில் ஏந்திய வண்ணம் தவம் புரிவதற்காக மலையில் யாவரின் நடமாட்டமும் இல்லாத அமைதியான ஓர் இடத்தை தேடி சென்றார்.

அவ்விதம் செல்லும் வகையில் தேவி பார்வதி அலங்கார திருமேனியுடன் காணப்பட்டார். கைகளில் லிங்கம் இருக்கும் பட்சத்தில் சிவ பெருமானுக்கு பூஜை செய்வதற்கான பூக்களை பறிக்க இயலவில்லை. எனவே, லிங்கத்தை ஒரு பாறையின் மீது வைத்து மலர்களை பறிக்க சென்றார்.

எம்பெருமானான சிவபெருமானுக்கு பூஜை செய்வதற்கான மலர்களை பறித்த மகிழ்ச்சி யில் தான் வைத்திருந்த சிவலிங்கத்தை எடுக்க முற்படுகையில் முனிவர்கள் சிலர் எம் பெருமானை வழிபட்டு கொண்டு இருந்தனர். அதனால், அவர்களின் பிரார்த்தனைகள் முடியும் வரை பார்வதி தேவி அமைதி காத்தார்.

பார்வதி தேவியை கண்டு வழிபட்டு கொண்டி ருந்த முனிவர்களில் ஒருவர் தாங்கள் யார் தேவி? யாரேனும் வரவேண்டி காத்து உள்ளீர்க ளா? என வினவினார். முனிவர் பெருமக்களு க்கு எனது கனிவான வணக்கங்கள், நான் எனது லிங்கத்தை எடுத்து செல்வதற்காகவே இங்கு காத்துள்ளேன் என்று பார்வதி தேவி கூறினார்.

மேலும், தங்களின் பிரார்த்தனைகள் நிறை வேற எவ்வளவு காலமாகும் என வினவினார் தேவி பார்வதி. வழிபட்டு கொண்டிருந்த முனி வர்களில் ஒருவர், முனிவர்கள் இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்ய கால நேரம் என்பது இல்லை தேவி.

எங்களின் பிரார்த்தனைகள் நிறைவு பெறத் தான் கால நேரங்கள் ஆகும் என மூத்த வயோதிக முனிவர் கூறினார். ஆனால், தேவி தான் கொண்டு வந்த லிங்கத்தை எடுத்து செல்ல அனுமதி வேண்டினார்.

ஆனால், அந்த வயோதிக முனிவர் எம்பெருமா னான சிவபெருமானை வழிபட்டு எண்ணியவ ற்றை நாம் அடைய வேண்டுமாயின் உயிர்கள் இந்த கலாதியுடைய இந்த பூவுலகில் நாம் பலவற்றை விட்டுச் சென்றால் மட்டுமே நாம் இறைவனின் திருவடிகளை நம்மால் காண இயலும்.

அதில் மிக முக்கியமானது ‘நான்” என்னும் அகந்தையாகும். ஏனென்றால், இந்த பிரப ஞ்சம், நான் தான் எல்லாம் என்று எண்ணி தன்னிடத்தில் உள்ள சக்திகளை தன்னகத்தே வைத்துக் கொண்டால் இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய உயிர்களின் நிலைகள் என்னவெ ன்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

எனவேதான், இந்த பிரபஞ்சம், நான் என்றும் இருமாப்பை விடுத்து அனைவருக்கும் பொது வானவன் என உணர்ந்த காரணத்தாலே இன்றளவும் அளவிட முடியாத சக்திகளை கொண்டுள்ளது.

இந்த பிரபஞ்சத்தை சிருஷ்டித்து இங்கு எங்கும் நிறைந்திருக்கும் எம்பெருமானான சிவபெருமானை அடைவது நான் என்ற குறுகிய வட்டத்தை விடுத்து அனைவருக்கும் பொதுவானவர் என்று உணரும் பட்சத்தில் எம்பெருமான் திருவடியை நம்மால் அடைய இயலும் தேவி என்று முனிவர் கூறினார்.

முனிவரின் கூற்றுகளை ஏற்றுக்கொண்ட தேவி என்னுடைய பிழையை சுட்டிக்காட்டி என்னை திருத்தி செம்மைப்படுத்தியமைக்கு மிக்க நன்றி எனக் கூறினார். தங்களுடைய பிரார்த்தனைகள் யாவும் நிறைவு பெறும் பொருட்டு நான் அமைதிக்கொண்டு காத்திரு க்கின்றேன் என கூறினார்.

மேலும், தங்களின் வழிபடும் முறையை காண அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறி பணி ந்து நின்றார். முனிவர்களும் வழிபாட்டினை காண அனுமதி அளித்தனர். பின் தேவியான வர் தனிமையில் நின்று எவருக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அவர்களின் வழிபாட்டை கண்டு கொண்டு இருந்தார்.

ஆனால், இவர்களின் வழிபாடுகள் சாமானிய மக்களின் வழிபாடு முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. இதுவரை அமைதி காத்து பொறுமையுடன் இருந்து வந்த தேவி, இவர்கள் இறுதியாக இறைவனான எம்பெருமானுக்கு படைக்க மாமிசத்தை எடுத்து லிங்கத்தின் அருகில் வைக்க முற்படு கையில் தேவியானவர் சினம் கொண்டு அந்த செயலை தடுக்க முற்பட்டார்.

முனிவர்களே, சர்வங்களை படைத்த சர்வேஸ் வரராக இருக்கும் சிவபெருமானுக்கு மாமிசம் வைத்து படைத்தல் என்பது உசிதமான செயல் அன்று. ஏனெனில், அவர் மலர்களால் மட்டும் மகிழ்ச்சி அடையக்கூடியவர் என்று பார்வதி தேவி கூறினார்.

முனிவர்களில் இருந்த வயோதிக முனிவர், தேவி தாங்கள் இன்னும் சிவபெருமானை உணரவில்லை என்றே தோன்றுகிறது என்றார். இதை கேட்டதும் கோபம் கொண்டா லும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவ்விதம் இல்லையே என்று கூறினார்.

மேலும் தாங்கள் உணர்ந்த சிவபெருமானை என்னாலும் அறிய இயலும் என்று கூறினார். அதற்கு அந்த வயோதிக முதியவர் எம்பெருமா னான சிவபெருமான் இவ்வுலகை படைத்தவர். இவ்வுலக உயிர்களில் யாவற்றிலும் சிவபெரு மானின் அருளும் வாழ்த்தும் பரிபூரணமாக நிறைந்துள்ளது. அது நீங்கள் படைக்கும் மல ராக இருந்தாலும் எங்கள் சக்திக்கு கிடைத்த எங்களால் படைக்கும் இந்த மாமிசத்திலும் இறைவன் பரிபு+ரணமாக பரவசம் அடையக் கூடியவர் என்றனர்.

ஓம் நமசிவாய…
தென்னாடுடைய சிவனே போற்றி…
சிவபுராணம் நாளை தொடரும்…