சிவபுராணம் பாகம் 32 -அந்தணரின் கூற்று பார்வதி தேவியின் பதில்

211

அழகான அரண்மனை போன்ற வீடு வாசல்க ளை விடுத்து யாவரும் இல்லாத மிருகங்களு டன் கானகத்தில் வாசம் செய்பவருடன் வாழ நீ தவம் செய்கிறாய். இது உன் எதிர்கால வாழ் க்கைக்கு உசிதமானதாக தோன்றவில்லை.

ஆடலும், பாடலும் நிறைந்த சபையை புறக்க ணித்து விட்டு அழுகையும், சாம்பலுமாக உள்ள சபையை விரும்புகிறாய். செல்வம் உடைய பல செல்வந்தர்களும் ஏன் இந்திரன் முதலான தேவர்கள் அனைவரையும் விடுத்து எதுவும் இல்லாத சிவபெருமானை உன் கணவராக எண்ணுகிறாயே இது உசிதமா? எதையும் அறியா சிறு குழந்தை எடுக்கும் முடிவு போல் உள்ளது உனது விருப்பம்.

மீன்களை போன்ற அழகான கருவிழிகளை யும் கலாதியுடைய உடல் அமைப்பும் கொண்ட நீ எங்கே? பார்ப்பதற்கு நயமில்லாம் விசித்தி ரமாக நெற்றியிலோ மூன்றாவது கண் கொண்ட சிவன் எங்கே? வாசனை கமலும் திரவங்களை பூசாமல் சாம்பலை பூசி திரியும் அந்த ஆண்டி பித்தன் எங்கே?

அழகான உடைகள் அணிந்த நீ எங்கே? விலங் கின் தோலை உடையாக அணிந்த சிவன் எங்கே? இதமான ஒலியை எழுப்பும் உன் வளையல்கள் எங்கே? பாம்பை அணிகலன் போல் அணிந்துள்ள சிவன் எங்கே? உனக்கு பணிவிடை செய்யும் பணிப் பெண்கள் எங்கே? சிவனிடம் இருக்கும் பூத கணங்கள் எங்கே?

இவ்விதம் கூறிக்கொண்ட போகலாம். உடல் தோற்றம் என்ற பொருத்தம் அல்லாத நீங்கள் இருவரும் திருமணம் புரிவதா என்று கூறி புன்னகைக்க தொடங்கினார் முதிய அந்தணர்.

அந்தணர் கூற தொடங்கிய பொழுதில் அமைதி காத்த பார்வதி தேவி இறுதியாக சினத்தின் உச்சத்திற்கே சென்றார். அழகான கருவிழியானது எரிமலை குழம்பை போல் சிவக்க தொடங்கியது. போதும் நிறுத்துங்கள் அந்தணரே என்று பொறுமை கடந்து கோபத் துடன் கூறினார் பார்வதி தேவி.

அந்தணராக வந்த சிவபெருமானிடம் பார்வதி தேவி, தாங்கள் யார் என்று அறியாமல் நான் உங்களை அழைத்து உபசரித்துவிட்டேன். நீங்களோ சிவபெருமானை பற்றி எதுவும் அறியாதவர். அவருடைய பெருமைகளை உணராதவர். இக்கணம் வரை உங்களை தன்யர் என்று எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது தான் புலப்படுகிறது நீங்கள் தன்யர் அன்று ஆபத்தானவர் என்று தெரிகிறது.

அதற்கு அவர் இல்லை பார்வதி தேவி நான் ஒன்றும் சிவபெருமானுக்கு சத்துரு இல்லை. தேவலோகத்தில் எவ்வளவு தேவர்கள் இருக் கையில் அவர்களை வேண்டி தவம் செய்யாது எதுவும் இல்லாமல் பித்தனாக இருக்கும் சிவபெருமானை விரும்பி தவம் செய்து உன் வாழ்க்கையில் பொன்னான நாட்களை வீணடிக்கிறாயே என்று தான் கூறினேன் என்றார்.

நீர் உரைத்த பித்தனை பற்றி யாதும் அறியாம ல் அவர் மீது வசை பாடத் தொடங்கிய பெரிய வரே அவர் யார் என்று தெரிந்திருந்தால் நீங்கள் இவ்விதம் உரைத்திருப்பீர்களா? நீர் சொன்ன தேவர்கள் எல்லாம் இவரிடமிருந்து அல்லவா உருவானவர்கள். வேதங்கள் அனைத்தையும் படைத்தவர். பரமாத்மாவாக விளங்கும் சிவபெருமானுக்குள் அனைத்தும் அடங்கும்.

சகல சௌபாக்கியத்தையும் படைத்தவராக இருக்கும் போது நினைத்த மாத்திரத்தில் அவருக்கு வேண்டியனயாவும் வந்து சேரும். பித்தன் என்று நீர் உரைத்த சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாத மரணத்தை வென்ற மிருத்யுஞ்ஜயர்.

சர்வலோகங்களுக்கு அதிபதியான எம்பெரு மானிடமிருந்து பரப்பிரம்மா உருவானது. நீர் உரைத்த பொன் பொருள்கள் கொண்ட தேவர்கள் யாவரும் சிவனிடம் அடிப்பணிந்து நடந்து கொள்கின்றனர். சிவபெருமான் யாராலும் தோற்றுவிக்கப்படாத சுயம்பு ஆவார்

எளிய மக்களுக்கு எப்போதும் சிவபெருமான் சாதாரணமானவராக காட்சி அளிக்கக்கூடிய வர். எவர் ஒருவர் தம் மனதால் சிவம் என்ற சுப சொற்களை தங்கள் மனதில் எண்ணுகிறாரோ அவரை காணுகின்ற அந்நியர்களும் தன்யர்கள் ஆவார்.

நீர் கூறும் சாம்பலை பு+சிக்கொண்டு பித்தனா க ஆடும் சிவபெருமான் எல்லா உலகத்திற்கும் ஆரம்பமாகவும் உலகில் உள்ள உயிர்கள் தோ ன்றவும் அவைகளை காத்து அழிக்கும் மூன்று தொழிலை புரியும் எண்ணிலடங்கா திருவி ளையாடல்களுக்கு உரியவராக விளங்கும் அந்த சர்வேஸ்வரனை உன் போன்ற அறிவு குறைந்தவர்கள் எவ்விதம் அறிய இயலும் என்று கூறினார்.

செவி கொடுத்து கேளும் முதிய அந்தணரே! அஞ்ஞான எண்ணங்களால் நிறைந்த மனதால் பரம்பொருளின் உருவத்தை அறிய இயலுமா? எவன் ஒருவன் சிவபெருமானின் பெருமைகளையும், கருணையும் உணராமல் நித்திக்கின்றாரோ அவன் பல ஜென்மங்களில் சேர்த்த புண்ணியங்கள் யாவும் எம்பெருமான் பு+சும் சாம்பலாகி விடும்.

பிரபஞ்சத்திற்கே ஒளி அளிக்கக்கூடிய உடலை கொண்ட சர்வேஸ்வரரான சிவபெருமானை வசைச் சொற்களால் இழித்து பேசி வீட்டீர்கள். தங்களை அகவையில் உயர்ந்தவர் ஞானத்தா ல் நிரம்பியவர்கள் என்று எண்ணினேன்.

ஆனால், நீரோ குறைந்த ஞானத்தை கொண்ட வராக இருக்கின்றீர்கள். இதை அறியாது நான் உங்களை அழைத்து மதித்து தங்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து நானே என்னு டைய புண்ணியத்தை குறைத்து கொண்டேன்.

துஷ்ட முதிய அந்தணரே! உன்னுடைய கண்க ளுக்கு எம்பெருமானான சிவபெருமான் எவ்விதம் தோன்றினாலும் அவரே என்னுடை ய மனதிற்கு பிரியவரும் என் விருப்பத்திற்கும் உரியவர் ஆவார். எவ்வேளையிலும் நீர் வந்து கேட்டாலும் என்னுடைய பதில் என்றும் ஒன்றே என்றார் பார்வதி தேவி.

இவ்விதம் உரைத்த பின்பு தன் தோழிகளை கண்ட பார்வதி தேவி கெட்ட மனமும் புத்தியும் கொண்ட இந்த அந்தணரை இங்கிருந்து உடனே புறப்படச் சொல். சிவபெருமானை தவறாக நினைப்பவன் தானும் பாவத்தை அடைகின்றான்.

அவர்களின் சொற்களை கேட்பவரும் அவர்க ளுடைய பாவத்தில் பங்கு கொள்கிறார்கள். எனவே, இவர் போகாது இவ்விடத்தில் இருந்து எனக்கு மேலும் சிவநிந்தையே செய்வராயின் இவ்விடத்தை விட்டு வேறு இடம் செல்வோம் என்று கூறி தான் தங்கியிருந்த குடிலை விட்டு வெளியே செல்ல முற்படுகையில் ஒரு ஆனந்த காட்சியானது அங்கு உருவானது.

பார்வதி தேவி முன் தோன்றும் சிவபெருமான்

பார்வதி தேவியும், அவரது தோழியும் குடிலின் வாயிலை அடைவதற்குள் அமர்ந்து இருந்த முதிய வயதான அந்தணர் எழுந்து நின்றார். பின்பு முதிய அந்தணர் உருவத்தில் இருந்த எம்பெருமான் சுயரூபமான சிவபெருமான் உருவத்திற்கு மாறினார்.

தேவி நான் உதிர்த்த சொல்களுக்கு நான் மட்டுமே காரணம் ஆவேன். என்னால் மேற் க்கொண்டு இனி யாவரும் இக்குடிலை விட்டு செல்ல வேண்டாம். நானே செல்கிறேன் தேவி என்றார் பரம்பொருளான சிவபெருமான்.

சிவனை பற்றிய தவறான புரிதல்களையும், எண்ணங்களையும் கொண்ட உன்னை போன்ற மதியிழந்தவர்களை காண்பது என்பது நான் மேற்கொண்ட என்னுடைய விரதத்திற்கு அது கலங்கமாகும். விரைந்து இவ்விடம் விட்டு செல்வீர்களாக என்று பார்வதி தேவி கூறினார்.

அதற்கு எம்பெருமான் பார்வதி தேவியிடம் நீர் உரைத்த யாவற்றையும் என்னைக் கண்ட பின் உரைக்க நான் விரும்புகிறேன் என்றார். ஆனால், பார்வதி தேவி தாங்களை காண்பது என்பது எனக்கு பிடிக்கவில்லை என்றும், தன்னுடைய கோபத்தை தன் தோழிகளிடம் செய்கையின் மூலம் எடுத்து கூறி அவரை இங்கிருந்து புறப்பட செய்யுமாறு கூறினாள்.

தோழிகளோ, அந்தணரே என்று கூறிய வண் ணம் திரும்பியவர்களுக்கு அங்கு அந்தணர் இல்லாமல் எம்பெருமானான சிவபெருமான் அங்கு நிற்பதைக் கண்ட அவர்கள் என்ன செய்வது என்று அறியாமல் ஓம் நமச்சிவாய என்று கூறி அலறினார்கள்.

தோழிகளின் அலறல்களை கேட்டு திடுக்கிட்டு திரும்பிய பார்வதி தேவி அந்தணர் இருந்த இடத்தில் தாம் யார் வரவேண்டி யாருடன் உரையாட விரும்பி தவம் செய்தோமோ, அந்த பரம்பொருளான சிவபெருமான் அங்கு நிற்ப தை கண்ட பார்வதி தன் இருகைகள் கூப்பி என் மனதில் நீங்காமல் நிலை கொண்டிருக்கு ம் தாங்களா என்று கூறி சிவபெருமானை வணங்கி அவர் திருவடியை காண சென்றார்.

சிவபெருமானை பார்த்த பார்வதி தேவி தம்முடைய மனதில் எழுந்த எண்ணங்கள் யாவற்றையும் சொல்ல இயலாமல் மனம் தவித்தார். தேவியின் மனதில் கொண்டுள்ள எண்ண ஓட்டங்களை அறிந்த எம்பெருமான் நானே முதிய அந்தணராக வந்தோம் என்றார்.

நான் மேற்கொண்டு நீர் புரியும் தவத்தையும், உன்னுடைய மன உறுதியையும் சோதிக்கவே அந்தணராக வந்து இந்த திருவிளையாடலை அரங்கேற்றினோம் என்று சிவபெருமான் கூறினார்.

சிவபெருமான் கூறியவற்றை அறிந்த பார்வதி தேவி அந்தணர் உருவத்தில் இருந்த சிவபெரு மானை தவறாக நினைத்து அவரை வசைச் சொற்களால் கடிந்தமைக்கு மிகவும் கவலை கொண்டாள். அதைப் பார்த்த சிவபெருமான் அறியாமல் செய்யும் பிழையை நினைத்து மனம் வருந்த வேண்டாம் தேவி. நாம் இப்போ தே கைலாயம் செல்வோம் என்று கூறினார்.

இனி ஒரு நாழி கூட உன்னை விட்டு என்னால் பிரிந்து இருக்க இயலாது என்றும், நீ இல்லாத ஒரு கணம் கூட ஒரு யுகமாக தோன்றுகிறது, இனி நீ என்னால் ஏற்பட்ட நாணத்தை விடுத்து என்னுடன் வீட்டிற்கு வருவாயாக என்று சிவ பெருமான் தேவியிடம் உரைத்தார்.

எம்பெருமான் கூறிய வார்த்தைகளை கேட்ட பார்வதி தேவிக்கு அந்த கணத்தில் உயிர்கள் வாழும் இப்பூவுலகில் அவர் அடைந்த இன்பம் எல்லையற்றது. இதுநாள் வரை பல இன்னல் களையும், பல விதமான கசப்புகளையும் அனுபவித்த தேவிக்கு, எம்பெருமான் அருளிய வார்த்தைகளால் யாவும் சூரிய ஒளியால் புத்துணர்ச்சி பெற்று மலரும் சூரியகாந்தி மலரை போல ஆனந்தம் கொண்டார் பார்வதி தேவி.

அப்போது மாய உலகத்தில் இருந்த பார்வதி தேவியை தனது தொடுகையால் நிகழ்கால உலகிற்கு அழைத்து வந்தார் எம்பெருமான்.

சிவபெருமானை கண்ட பார்வதி தேவி தாம் காண்பதும், கேட்டதும் கனவாக இருத்தல் கூடாது என்று எண்ணிய மாத்திரத்தில் எம்பெ ருமானே புன்னகைத்தபடி இது கனவன்றி உண்மையே என்று உரைத்தார். அக்கணத்தில் எம்பெருமானை பார்வதி தேவி அரவணைத்து கொண்டார்.

சிவபெருமானும், பார்வதி தேவியும் ஒன்றி ணைந்த அந்த வினாடி, அனைத்தும் அறிந்து உணர்ந்த எம்பெருமானும், மானிட பிறவியில் பிறந்த பார்வதி தேவியின் உயிரும் ஒன்றாக சங்கமித்தன.

இதுநாள் வரை சதியின் பிரிவால் பல இன்னல் களையும், சம்சார வாழ்க்கையையும் வெறுத்து இருந்த சிவபெருமானும் சதி தேவி யின் அம்சமான பார்வதி தேவியை மனதார ஏற்று அரவணைத்துக் கொண்டார்.

விண்ணுலகத்தில் பல இன்னல்களுக்கு ஆளான நிலையில் இருந்த தேவர்களும் தம் மனக்கண்ணால் எம்பெருமான் பார்வதி இணைவை கண்டு ஆனந்தம் கொண்டனர்.

திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டுள்ள திருமாலும், சத்யலோகத்தில் தாமரை இதழ்கள் மேல் வாசம் கொண்டுள்ள பிரம்மாவும் இக்காட்சியை கண்டு அகம் மகிழ்ந்தனர். படைப்பவரான பிரம்மாவோ இனி இந்த பிரபஞ்சம் புத்துயிர் பெற்று புதிய பரிணாமத்தை நோக்கி பயணிக்க போகிறது என தனது துணைவியான சரஸ்வதி தேவியி டம் உரைத்தார்.

ஆனால், மகாதல லோகத்தில் வாழ்ந்து வந்த தாரகாசுரனுக்கு ஏதோ அதர்மமான நிகழ்வு நிகழ்ந்தாற் போல் எண்ணங்கள் உண்டானது.

சிவபெருமானுடன் இருந்த பிணைப்பில் இருந்து மனம் இல்லாமல் விடுபட்ட பார்வதி தேவியிடம் எம்பெருமான் நாம் வாழும் இருப்பிடம் செல்வோம் வா எனக் கூறினார்.

சிவபெருமானின் கூற்றுகளை கேட்ட தேவி, தேவர்களின் அதிபதியே என் மனதில் என்றும் நீங்காமல் குடியிருக்கும் சிவபெருமானே அடியாளின் எண்ணத்தை கருணைக் காட்டி நிறைவேற்ற வேண்டுகிறேன் என்றார் தேவி.

ஆனால், சிவபெருமானோ பார்வதி தேவியிட ம் இனிமேல் நீ என் இல்லாள் ஆவாள். உன்னு டைய எண்ணங்களையும், விருப்பங்களையும் நிறைவேற்றுவது என் கடமையாகும். உன் விருப்பங்களை கூறுவாயாக என்று கூறினார் எம்பெருமான்.

பார்வதி தேவி சிவபெருமானிடம் தாங்கள் என் மீது கொண்டுள்ள அன்பிற்கு நான் எத்தனை காலம் தவம் செய்தேனோ என்று தன் மகிழ்ச்சி யை வெளிப்படுத்தினார். பிரபுவே இப்போது என்னை என் பெற்றோர் இருக்கும் வீட்டிற்கு செல்ல தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்.

பிறகு பிரம்ம ரிஷிகள் மற்றும் சித்த புருஷர்க ளால் சுபமான ஒரு நன்னாளில் என்னை பெண் கேட்டு வந்து என் பெற்றோர் வாழ்த்து க்களுடன் நம் இருவரின் திருமணமானது உற்றார், உறவினர் முன்னிலையில் பலருடை ய வாழ்த்துக்களுடன் நடைபெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று தேவி எம்பெருமானிடம் வேண்டினார்.

தேவியின் விருப்பத்தை கேட்டதும் எம்பெரு மான் தன் மனம் குளிர தேவியை பார்த்து தேவி இதுவே உன் விருப்பம் என்றால் எல்லாம் அவ்விதம் நடைபெறட்டும் என்று கூறினார். பின் நீ உன் வீட்டிற்கு செல்வாயாக. நான் விரைவில் நம் திருமணம் பற்றி பேச உன் தந்தையை சந்திக்கின்றேன் என்று கூறினார்.

பின் தேவியிடம் உன் தவம் இன்றுடன் நிறை வடையட்டும் என்று கூறி அவ்விடத்தை விட்டு மறைந்தார். சிவபெருமான் கூற்றுகளால் பார்வதி தேவி அடைந்த மகிழ்ச்சி எண்ணில் அடங்கா வண்ணம் விவரிக்க இயலாது செயலாக தோன்றியது.

பின் குடிலில் இருந்த இசைக் கருவிகளை தோ ழிகள் வாசிக்க, தம் பிறப்பு முதல் இக்கணம் வரை நடந்த தாம் அறிந்த நிகழ்வுகள் யாவற் றையும் இணைத்து தன் தோழிகளுடன் பாடி ஆனந்தக் கூத்தாடினார். இவருடைய பாடல்க ளுக்கு இசை சேர்க்க வனத்தில் இருந்த பறவைகள் யாவும் பங்கு கொண்டன.

மகாதல லோகத்தில் விண்ணுலக தேவர்கள் வாழும் சொர்க்கத்தை கைப்பற்றியும் தம் மனதில் திடீரென நடைபெறக் கூடாத செயல் கள், அதாவது தனது அழிவிற்கான காலம் உண்டாகப்போகிறதோ என்னும் எண்ணம் அதிகரிக்க, காரணம் புரியாமல் மிகவும் குழம் பியநிலையில் தாரகாசுரன் தன் இருக்கையில் இருந்தான்.

அவ்வேளையில் அசுர ஒற்றர் ஒருவர் வருகை தந்து பூலோகத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்க ளையும், தேவர்கள் கொண்டுள்ள எண்ணங்க ள் விரைவில் நிறைவேறப் போகும் என்பதை பற்றியும் கூறினான்.

அசுர ஒற்றர் ஒருவர் பு+லோகத்தில் பரம்பொ ருளான சிவபெருமான் பர்வதராஜன் என்னும் இமவானின் மன்னருடைய மகளான பார்வதி யை சிவபெருமான் மணம் முடிப்பதாக வரம் அளித்துள்ளார் என்று தாரகாசுரனிடம் கூறினான்.

ஒற்றரின் மூலம் தம் மனதில் குடிக்கொண்டு ள்ள ஒரு விதமான சஞ்சலத்திற்கான பதில்க ள் கிடைக்கப்பெற்று தாரகாசுரன் தெளிவடை ந்தான். இந்நிலையில் தன்னுடைய வீரர்களா ல் சிறை பிடிக்கப்படாத தேவர்கள் அனைவரும் இத்திருமணத்தில் பங்கேற்க வருவார்கள்.

அவ்வேளையில் அவர்களை நாம் பிடித்துக் கொள்வோம். பின் பார்வதி தேவியை கொல்ல சரியான காலம் பார்த்து அவரை கொன்று விட வேண்டும் என எண்ணினான். உடனே தம் அசுர படையின் சேனாதிபதியை அழைத்தார். எண்ணிய கணத்தில் அசுர படையின் சேனா திபதியும் அங்கு வந்தார்.

குடிலில் இருந்த பார்வதி தேவி தம்முடன் வந்த தோழிகளுடன் தன்னுடைய இருப்பிடமான, பெற்றோர் வாழும் அரண்மனையை நோக்கி தம் மனதில் பல்வேறு கனவுகளுடன் சென்றார். தன் மகளின் வருகையை அறிந்த இமயவான் மன்னன் அரண்மனை எங்கும் தோரணங்கள் மற்றும் அலங்காரம் செய்து தனது மகளின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தார்.

பல நாட்கள் கடந்து சென்றன, தம் மகளை காணாமல் தம் அகம் முழுவதும் எழுந்த எண்ணங்களை களைத்தெரிய தன் மகள் இன்று முதல் தன்னோடு இருக்கப் போகிறாள் என்று மனம் நெகிழ்ந்தார். தேவியின் வருகை யை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த அவருடைய தாயான மேனை தேவி விரும்பி உண்ணும் உணவுகளையும், இனிப்புகளையும் சமைத்து அவரின் வருகையை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருந்தனர்.

பார்வதி தேவியும் அவளுடன் சென்ற தோழிக ளும் அரண்மனைக்கு வருகை தர மலர்களால் அவர்களை வரவேற்றனர். மேனை தேவி தன் மகளை அரவணைத்து உன்னை ஈன்ற போது அடைந்த மகிழ்ச்சியை விட நான் இக்கணம் நான் மகிழ்ந்தேன் மகளே, என்று கூறி வாழ்த் துக்களையும், ஆசிகளையும் வழங்கினார்.

இமவான் தன் மகளை கண்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டார். அரண்மனை முழுவதும் மங்களகரமான ஒலியாலும் அழகான அலங் காரங்களாலும் நிறைந்து விண்ணுலகத்தில் இருக்கும் சொர்க்கமே இம்மண்ணுலகிற்கு வாழ்வை தேடிவந்தது போல் காட்சி அளித்தன. ஆடலும், பாடலுடனும் ஒரே ஆனந்த சங்கமமா க மகிழ்ச்சியாக காட்சியளித்தன.

பார்வதி தேவியின் எண்ணங்கள் சித்தமாக ட்டும் என்னும் வாக்கினை அளித்து மறைந்த சிவபெருமான் புண்ணிய ஸ்தலமான காசி யை அடைந்தார். தம் மனதில் சப்த ரிஷிகளை எண்ணினார். அவர் எண்ணிய மாத்திரத்தில் அதை உணர்ந்த ரிஷிகள் அனைவரும் தம்மு டைய இல்லாலுடன் சிவபெருமான் இருக்கும் காசி நகரை சிவனை எண்ணிக் கொண்டே வந்தடைந்தனர்.

எம்பெருமானை கண்ட சப்தரிஷிகளும் அறி யாமை என்னும் இருளை போக்கி வெளிச்சம் அளிக்கும் எம்பெருமானுக்கு எங்களது வணக்கங்கள் என்று கூறி அவரை பலவாராக துதித்து போற்றினர்.

பரம்பொருளை எண்ணி உயிர்கள் வாழும் இந்த பூவுலகில் பரம பொருள் எங்களை எண்ணியத்திற்கு நாங்கள் எத்தனை பிறவிக ளில் என்ன புண்ணியம் செய்தோமோ நாங்க ள் தன்யர்கள் ஆனோம் என்று கூறி தங்களின் மகிழ்ச்சியை ஒரு சேர பரம் பொருளான சிவ பெருமானிடம் கூறினார்கள்.

ஐயனே, எங்களை எண்ணி வரவழைத்த காரணம் யாது என்று கூறினால் அதை நாங்க ள் இந்நொடியே செய்து முடிக்கின்றோம். கட்டையிடுங்கள் சர்வேஸ்வரரே என்று கூறி ரிஷிகள் யாவரும் அவரின் ஆணைக்காக காத்துக்கொண்டு இருந்தனர்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களாலும் மதி த்து வணங்கத்தக்க ஞானம் உடைய முனிவர்க ளே, உங்களை எண்ணி இங்கு வரவழைக்க காரணம் யாதெனில் உங்களால் ஒரு செயலா னது இனிதே நடைபெற வேண்டியுள்ளது.

ஓம் நமசிவாய…
தென்னாடுடைய சிவனே போற்றி…
சிவபுராணம் நாளை தொடரும்…