சிவபுராணம் பாகம் 33

186

பூவுலகில் வாழும் மானிடர்களுக்கும் விண்ணு லகில் வாழும் தேவர்களுக்கும் பல விதமான இன்னல்களை ஏற்படுத்தும் தாரகாசுரன் என க்கு பிறக்கும் என் மகனாலே தனக்கு அழிவு வேண்டும் என்னும் வரத்தினை பெற்றான்.

பெற்ற வரத்தினை தவறாக உபயோகித்து தன்னுடைய அழிவிற்கான வழியை அவனே தேடிக் கொண்டான். தாரகாசுரனை அழித்துத் தேவர்கள் மற்றும் மானுடர்கள் அடைந்துள்ள இன்னல்களை போக்க சிவபெருமானின் குமாரன் அவதரிக்க வேண்டிய காலம் உண்டா யிற்று.

ஆகையால் யான் பார்வதி தேவியை திருமண ம் செய்து கொள்ள விரும்புகிறேன். இமவான் புத்திரியான பார்வதி தேவி என்னை மணம் முடிக்க வேண்டி முனிவர்களாலும் செய்ய இயலாத கடுமையான தவம் செய்துள்ளாள். அவள் செய்த தவத்தின் பலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும்.

எனவே தாங்கள் அனைவரும் பார்வதி தேவி யின் பெற்றோர்களை சந்தித்து சுபச் செயல் இனிதே நடைபெறும் வண்ணம் எங்கள் இருவ ருக்கும் மணம் பேசும் படி எண்ணுகிறேன்.

சிவபெருமானின் கூற்றுகளை கேட்ட ரிஷிகள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில், உலகைப் படைத்த பரம்பொருளான எம்பெரு மானுக்கு திருமணம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் இக்கணம் சென்று தங்களின் திருமணத்தை நிச்சயம் செய்கின்றோம் எனக் கூறி சிவபெருமானிடம் உத்தரவு பெற்று சென்றனர்.

ரிஷிகள் அனைவரும் இமவான் மன்னனின் அரண்மனைக்குச் சென்றனர். அரியணையில் வீற்றிருந்த இமவான் மன்னன், ரிஷிகள் மற்று ம் அவர்களது மனைவிகளையும் ஒன்றாக கண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைந்தார். தன் மனைவி மேனையை அழைத்துக் கொண்டு சப்த ரிஷிகள் மற்றும் அவர்களது மனைவிக ளையும் வரவேற்று அவர்களிடம் இமவான் மன்னர் ஆசி பெற்றார்.

என்னுடைய வாழ்வில் செய்தற்கரிய புண்ணி யங்கள் என்ன செய்தேனோ அறியவில்லை இல்வாழ்க்கை மற்றும் தவ வாழ்க்கை மட்டும் அல்லாமல் ஞானத்திலும் சிறந்து விளங்கும் தங்கள் அனைவரையும் ஒரே இடத்தில் கண்ட தில் நான் தன்யன் ஆனேன் என்று கூறினார் இமவான் மன்னர்.

இமவான் மன்னனிடம் ரிஷிகள் யான் கூறும் செய்திகளால் நீங்கள் எண்ணிலடங்கா மகிழ் ச்சியில் ஆழ்வீர்கள் என்று கூறினர். ரிஷிகளி ன் பேச்சுகளில் உள்ள பொருளை உணராமல் தாங்கள் யாது உரைக்க இருக்கின்றீர்கள் என இமவான் மன்னன் கேட்டார்.

பரம்பொருளான எம்பெருமான் தங்கள் மகளி ன் மீது மையல் கொண்டு அவர்களை மணக்க விரும்புவதாகவும், அதை பொருட்டு தங்களின் மகளை சிவபெருமானுக்கு மனம் பேசவே இங்கு வந்துள்ளோம் என்றும் கூறினார்.

ரிஷிகள் கூறிய கூற்றை கேட்ட இமவான் மன்னன் இவ்வுலகில் நிலைக் கொள்ளாமல் விண்ணுலகிற்கும், மண்ணுலகிற்கும் உள்ள உயிர்களிடத்தில் பெருமகிழ்ச்சி கொண்டார். பரம்பொருளான எம்பெருமானுக்கு தம் மகளான பார்வதி தேவியை மணம் முடித்து கொடுப்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை ரிஷிகளே.

இவ்வேளையில் என் மகளான பார்வதி தேவி யை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஆனால், பார்வதி தேவியின் அன்னையான மேனைக்கு இதில் விருப்பமில்லை என்றாலும் தம் மகளின் மகிழ்ச்சிக்காவே புன்முறுவல் பூத்த முகத்துடன் காட்சியளித்தார்.

மேனைதேவியின் எண்ண ஓட்டத்தை அறிந்த சப்த ரிஷிகள் மேனை தேவியே! நீங்கள் ஏதும் ஐயம் கொள்ள வேண்டியதில்லை. இந்த உல கத்தில் யாருக்கும் கிடைக்காத அதி உன்னத மான பாக்கியம் நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று கூறினார்.

ரிஷிகளின் மனைவிமார்கள், மேனைதேவி க்கு இவர்கள் கூறியவற்றில் இருந்து மனம் அமைதி கொள்ளவில்லை என்பதை அறிந்த னர். பின்னர் மேனை தேவியை தனியாக அழைத்து சென்று தங்களுக்கு வரப்போகும் மருமகனின் பெருமைகளை எடுத்துக் கூறி புரிய வைத்தனர்.

ரிஷிகளின் மனைவிமார்கள் உரைத்த கூற்று களில் இருந்து தம் மகளை மணக்க இருப்பவ ரின் பெருமைகளை உணர்ந்து தன் மகளை சர்வேஸ்வரனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதம் அளித்தார். திருமணம் என்பது மணம க்களின் விருப்பம் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களின் விருப்பத்துடனும், ஆசியுட னும் நடைபெற வேண்டும்.

தாய், தந்தையின் ஆசிகளே பிள்ளைகளை எப்போதும் அரணாக இருந்து பேணி காக்கும் என ரிஷி மக்கள் பர்வதங்களை ஆளும் இமவான் மன்னன் அவரின் துணைவியான மேனை தேவியிடம் கூறினார்கள்.

தன் துணைவியின் விருப்பங்களை அறிந்து கொண்ட இமவான் மன்னன் தங்களின் மகளா கிய தேவி பார்வதியை சர்வேஸ்வரருக்கு திரு மணம் செய்து வைப்பதில் எங்களுக்கு பரிபூ ரணமான சம்மதம் என்று கூறினார்.

பின்பு தம் மகளாகிய பார்வதி தேவியை அழைத்து ரிஷிகளிடம் ஆசி பெறச் செய்தார். ரிஷிகளும் அவர்களது துணைவியுடன் இணைந்து நிற்க பார்வதி தேவி அவர்களை பணிந்து நின்று ஆசி பெற்றார். தேவி பார்வதி உம் மனதில் ஏற்பட்ட எண்ணம் போல் விரை வில் சர்வேஸ்வரரான சிவபெருமானை உற்றார், உறவினர் முன்னிலையில் மனம் முடிப்பாயாக என ஆசி வழங்கினர்.

இமவான் மன்னன் விகலைப் பொழுதில் அனைவரும் அமர்ந்து சுப செயலை பேசுவதற் கான மேடையை ஆடம்பரமின்றி அழகான விரிப்பான்களுடன் மலர்களும், பழங்களும் தாம்பூலங்களுடன் ஏற்பாடு செய்தார்.

பின்னர் ரிஷிகள் அவர்களது துணைவியுடன் அமர்ந்து தேவி பார்வதியின் பெற்றோர்களு டன் கூடி திருமணத்திற்கு உரிய ஒரு சுபதின த்தை குறித்தனர். சிறிது காலத்திற்கு பின்பு சர்வேஸ்வரனின் திருமண முகூர்த்தத்தை குறித்த ரிஷிகள் தேவியின் பெற்றோர்களிடம் இருந்து விடைபெற்று வரும் போது அவர்க ளை அனுப்ப மனமில்லாமல் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார் இமவான் மன்னர்.

இமவான் மன்னரின் தயக்கத்தை உணர்ந்த ரிஷிகள், தங்களை விட்டு பிரிவதற்கு எங்க ளுக்கும் மனமில்லை. இருப்பினும் திருமண வேலைகள் உள்ளதை எண்ணி நாம் பிரிய வேண்டியுள்ளது எனக் கூறி அவர் மனம் இன்னல் கொள்ளாமல் பிரியாவிடையுடன் அவ்விடத்தை விட்டு எம்பெருமான் இருக்கும் காசி நகரை அடைந்தனர்.

பின்பு சர்வேஸ்வரனை வணங்கி இமவான் மன்னன் அரண்மனையில் நிகழ்ந்த நிகழ்வுக ள் யாவற்றையும் கூறி தங்களுக்கும் பார்வதி தேவிக்குமான திருமண நாளை குறித்து வந்துள்ளதையும் கூறினர்.

மிகவும் மகிழ்ச்சியான செய்தியை கொண்டு வந்துள்ளீர்கள் என சிவபெருமான் கூறினார். சப்த ரிஷிகளே! என்னுடைய விவாகத்தில் முக்கிய பணிகளை மேற்கொண்டு இத்திரும ணத்தை பிரசித்தி பெரும் வகையில் நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதற்கு சப்த ரிஷிகளும் தங்களின் விருப்பத் தை நிறைவேற்றுவது எங்களின் கடமையா கும் எனக் கூறி நாங்கள் எங்களின் இருப்பிடம் செல்ல தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்றனர்.

பின்னர் எம்பெருமான் நீங்கள் அனைவரும் உங்களின் சீடர்களோடு என் திருமண நிகழ்ச் சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறி அவர்கள் புறப்படுவதற்கு அனுமதி அளித்தார். ரிஷிகளும் புறப்பட்டு சென்றனர்.

சப்த ரிஷிகளும் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் எம்பெருமானும் காசி மாநகரை விடுத்து தான் என்றும் குடியிருக்கும் கைலாய மலைக்கு சென்றார். எம்பெருமானின் வருகை க்காக காத்துக்கொண்டு இருந்த நந்தியும், கணங்களும் சிவபெருமானை கண்டதும் தங்களது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினார்.

நந்தி தேவரோ மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம் உலகை ஆளும் சர்வேஸ்வரரே என்று கூறி இனி கைலாயம் மீண்டும் உயிர் பெற்று எங்க ளின் அன்னைக்கான வருகையை எதிர்நோக் கியுள்ளது என்று கூறி ஆடலும், பாடலுடனும் கைலாயமே மகிழ்ச்சி கொண்டது.

ஆடலும், பாடலும் என கைலாயமே மகிழ்ச்சி கொண்ட நிலையில், எம்பெருமானும் அவர்க ளின் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு அவர்களு க்கு மேலும் மகிழ்ச்சியை உருவாக்கினார். சிறிது நேரத்திற்கு பின்பு நாரத முனிவரை மனதில் நினைக்க நாரதரும் அங்கு வருகைத் தந்தார்.

நாரதருக்கு நாம் வந்துள்ள இடம் தான் கைலா யமோ அல்லது வேறு இடமோ என்று என்னும் அளவிற்கு பு+த கணங்களின் ஆடலும், பாடலு ம், மிருதங்க ஒலியும் மிகுந்து காணப்பட்டது. பின்பு தாம் சரியான இடமான கைலாயத்திற் கு தான் வந்துள்ளோம் என்பதை நாரதர் உறுதிப்படுத்திக் கொண்டார்.

பின்பு நாரத முனிவரை கண்ட நந்தி தேவரும் பூத கணங்களை அமைதிப்படுத்தி நாரதரை எம்பெருமானிடம் அழைத்துச் சென்றார். பின்பு இவர்களின் உரையாடல்களுக்கு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் அங்கு இருந்த கணங்கள் அனைவரையும் நந்தி தேவர் அழைத்துச் சென்றார்.

எம்பெருமானை கண்ட நாரதர் அவரை வணங் கி பின்பு தங்களின் மகிழ்ச்சியான இந்த தருணங்களில் அடியேனை நினைக்க என்ன காரணம்? என்று புன்முறுவலுடன் எதையும் அறியாதவாறு கேட்டார்.

நாரதரே! நிகழ்ந்த நிகழ்வுகள் தாம் அறியாது போல் கேட்கின்றீர்களே! என சிவபெருமான் கேட்டார். இல்லை மகாதேவரே அடியேன் ஏதும் அறியாதவன் என்று கூறினார் நாரதர்.

பின்பு நிகழ்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் எம்பெருமான் கூறினார். எம்பெருமான் கூற அந்த நிகழ்வுகளை எண்ணி மனம் மகிழ்ந்தார் நாரதர். இறுதியில் சிவபெருமான், பார்வதி தேவி என்னை மனம் முடிப்பதற்காக பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து மனம் தளரா மல், தான் மேற்கொண்ட முயற்சியில் வெற்றி கண்டு என்னையும் தன் வசப்படுத்தியதாக சிவபெருமான் கூறினார்.

நாரதர் சிவபெருமானிடம் நீங்கள் பக்தர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அவர்களின் வசம் செல்வது என்பது புதிதான செயலுமன்று. பார் வதி தேவியின் தவத்தின் வலிமை அறிந்து தாங்கள் அவர்களுக்கு வரமாக தங்களை அளி த்ததும் அவரின் மனவிருப்பத்தினை நிறை வேற்றும் பொருட்டு நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

மகாதேவரே! இனி நான் தங்களுக்கு ஏதாவது செயல் செய்ய வேண்டியுள்ளதா? உடனே ஆணையிடுங்கள். எந்த செயலாக இருப்பினு ம் எவ்விதமான தடையுமின்றி அதை உடனே நிறைவேற்றுகிறேன் என்று கூறினார். நாரதரே, இவ்வுலக நன்மையை கருதி நான் பார்வதி தேவியை அடைவேன்.

இதில் எவ்விதமான ஐயமும் கொள்ள வேண்டி யதில்லை. இனி நான் சொல்லும் செயலை பிரம்மபுத்திரரே அதை நீரே செய்ய வேண்டும். நாரதரே சத்தியலோகத்தில் இருக்கும் பிரம்ம தேவருக்கும், பாற்கடலில் வீற்றிருக்கும் திரு மாலையும் மற்றும் தேவர்கள், முனிவர்கள், சப்த மாதர்கள் என அனைவரையும் என் திருமண விழாவிற்கு அழைக்க வேண்டும்.

பின் என் திருமண விழாவிற்கு வருகை தராதவர்கள் என்னுடன் அன்பு கொள்ளாமல் இருப்பவர்கள் என அனைவருக்கும் கூற வேண்டும் என்று கூறினார். அவர் உரைத்த செயலை இனிதே முடித்தருள அவரின் ஆசி பெற்று புறப்பட்டார்.

அந்த நொடிப் பொழுது முதலே சிவபெருமான் பார்வதி திருக்கல்யாணம் பற்றி அனைத்து தேவர்களுக்கும் முறையாக நேரி0ல் சென்று அழைக்க வேண்டியவர்களுக்கு, நேரில் சென் று திருமண நிகழ்வை சொல்லி அனைவரை யும் அழைத்தார்.

தகுந்த தூதுவர்கள் மூலம் ஓலை அனுப்பி திருமண செய்திகள் அனைவருக்கும் சென்று கிடைக்கும் விதத்தில் அனுப்பினார். இவ்வாறு எவரையும் மறக்காமல் அனைவருக்கும் பார்வ தி பரமேஸ்வரனின் திருமண நிகழ்வு பற்றிய செய்தி அனைவருக்கும் சென்றடைந்தன.

நாரதர் திருமண நிகழ்ச்சி பற்றிய தகவலை அனைவருக்கும் சென்று சேருமாறு அனுப்பி னார். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் எம்பெ ருமானின் திருமண செய்திகள் சென்றடைந்த ன. இந்த தகவலை அறிந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர்.

ஆனால், தாரகாசுரன் இத்திருமணத்தை நிறுத்தியாக வேண்டும் என எண்ணினான். சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திரு மணம் நடைபெற்றால் சிவபுத்திரன் உருவாகி விடுவான். அவன் தோற்றம் என் அழிவை உறுதி செய்யும் என எண்ணி தன் அசுர படைகளை அழைத்தான்.

தயார் நிலையில் இருந்த அசுர படையும் அவர் தம் சேனாதிபதியும் அசுர குல வேந்தனின் ஆணைக்காக காத்துக்கொண்டு இருந்தன. அவ்வேளையில் அசுர குல குரு சுக்கிராச்சா ரியார் அசுர வேந்தனின் அரண்மனைக்கு வரு கைத் தர, அங்கு கண்ட காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தம் மனதில் தோன்றிய எண்ணம் சரியென யூகிக்கும் வகையில் அங்கு நடந்த நிகழ்வுகள் யாவும் இருந்தன. பார்வதி தேவிக்கும், சிவபெ ருமானுக்கும் திருமணம் நடைபெறப் போகும் செய்தி அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டன.

இச்செய்தியை கேட்ட மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். அரண்மனை யில் திருமண ஏற்பாடுகளில் விருப்பத்துடன் கலந்து கொண்டனர். திருமணம் நடைபெறும் இடங்கள் மட்டும் அலங்கரிக்கப்படாமல் ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளும் அலங்கரிக்கப்பட்டன.

சாலைகள் தோறும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டன. எழில்மிகு வண்ணங்கள் கொண்ட கோலங்களால் சாலைகள் நிரம்பி காணப்பட்டன. விருந்தினர் வந்து தங்குவத ற்காக பெரிய பெரிய அழகிய வேலைப்பாடுக ளுடன் நிரம்பிய பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

பார்வதி தேவியின் திருமணச் செய்தியை கேட்டதும் ஒவ்வொரு நாளும் பண்டிகையை போன்று கொண்டாடினர். எங்கும் எத்திசையி லும் ஆடல் பாடல்கள் நிறைந்த மகிழ்ச்சியான தருணங்களாகவே இருந்தன.

இமவான் மன்னன் தனது நட்பு அரசாட்சிக்கு உட்பட்ட மன்னர்களுக்கும் அழைப்பு கொடுத் திருந்தார். அவர்களும் அவர்கள் நாட்டு மக்க ளும் இமவான் மன்னனின் மகளான பார்வதி தேவியின் திருமண விழாவிற்கு வருகை தந்தனர்.

பர்வதங்கள் நிரம்பி வழிந்த இமவான் மன்ன னின் அரசாட்சியில் மேலும் மேலும் பல பர்வதங்கள் வந்து நிறைவது போன்று மக்களி ன் வருகையும் அதிகரித்துக் கொண்டே இருந் தன. வருகின்ற மக்களுக்கும் எந்த விதமான இன்னலுக்கும் ஆளாகாமல் இருக்கவும், எதிரி நாட்டு படைகளால் துன்பம் நேராமல் இருக்க மிகுந்த பாதுகாப்பும், ஒழுங்கும் காக்கப்பட்டன.

எழில்மிகு வண்ணப் பட்டாடைகள் மற்றும் ஆபரணங்கள் அணிந்து கொண்டு பெண்க ளை காண தேவலோக கன்னிகள் போன்று காட்சியளித்தன. ராஜ்ஜியத்தில் உள்ள ஒவ்வொருவரும் இத்திருமணம் தம் வீட்டில் நடைபெற போவதாக எண்ணி மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒவ்வொரு ஏற்பாடுகளிலும் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்கான வருகைத் தந்த நண்பர்க ளையும், உறவினர்களையும் கண்டு அவர்களி டம் நலம் விசாரித்துக் கொண்டு மணமகனா ன சிவபெருமானின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தார் இமவான் மன்னன்.

இமவான் மன்னன் அரசாட்சியில் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக ஒவ்வொரு நபரின் முகத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமுமாக இருக்க, கைலாயத்தில் திருமண ஏற்பாடுகள் வெகு விமர்சையாக இருந்தன.

பாற்கடலில் வீற்றிருந்த திருமாலும், லட்சுமி தேவியும் சத்தியலோகத்தில் வீற்றிருக்கும் பிரம்மதேவரும், சரஸ்வதியும் கைலாயத்திற்கு வருகைத் தந்தனர். தேவர்கள், முனிவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்களும் வந்து சேர்ந்தனர்.

அஸ்டவசுக்கள் மற்றும் திக் பாலகர்கள் ஆகியோர் தங்கள் பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தனர். திருமண நிகழ்விற்கு வருகைத் தந்த அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார் வதி பரமேஸ்வரன் திருமண தருணங்களை காண ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர்.

எம்பெருமான் அணிவதற்கென குபேரன் பல அதிநுட்பமான வேலைப்பாடுகள் நிறைந்த அணிகலன்களையும், ஆடைகளையும் கொண்டு வந்தார். ஆனால், இவை யாவும் உடுத்தாமலும், அணியாமலும் பரம்பொருளா ன சிவபெருமான் இந்த பிரபஞ்சத்தில் மிகுந்த அழகு கொண்டவராக திகழ்ந்தார்.

அசுர குல வேந்தன் தாரகாசுரன் திருமணச் சடங்கில் பாதிப்பை ஏற்படுத்தவும், பார்வதி தேவியை கொல்லவும் தனது படை வீரர்களை அனுப்ப தயாரான நிலையில் அவர்களுக்கான ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தான்.

இதைக் கண்டதும் இது என்ன அனர்த்தமான செயல் என்று அசுர வேந்தனிடம் அசுர குல குரு கூறினார். அதற்கு தாரகாசுரன் இதில் என்ன அனர்த்தம் உள்ளது குருவே, சிவபெரு மானின் திருமணம் நடைபெற்று அவர்களுக்கு புத்திரன் உருவானால் என்னுடைய அழிவு என்பது உறுதியானதாகும்.

அதைத்தான் எங்களின் குல குருவாகிய தாங்கள் விருப்பப்படுகிறீர்களோ எனக் கேட்டார். வேந்தனாக இருக்கும் தாரகாசுரனே அசுர குலத்தோரின் நம்பிக்கையாக திகழும் நீ இது போன்றதொரு எண்ணங்களை கைவிடு தல் என்பது அவசியமாகும்.

தன்னுடைய மாணவனின் அழிவிற்கு ஒரு குருவாகிய நானே காரணமாக இருப்பேனா என்று கூறினார். உன்னுடைய அழிவானது சிவபுத்திரன் கைகளில் மட்டுமே உள்ளது. ஆனால், இப்பொழுது நடைபெறும் சிவ பார்வ தி திருமணத்தால் உன்னுடைய அழிவு இன்னு ம் உறுதியாக வில்லை.

ஏனெனில், இப்போது நடைபெறும் திருமண த்தால் சிவ புத்திரன் உருவாகுவதற்கான சாத்தியம் என்பது மிகவும் குறைவு என்று அசுர குருவான சுக்கிராச்சாரியார் கூறினார். அதற்கு தாரகாசுரன் தாங்கள் உரைப்பதில் உள்ள பொருள் என்னவென்று என்னால் அறிந்துக்கொள்ள முடியவில்லை என்றான்.

சிவபெருமானின் சிரசில் உள்ள மகுடத்தில் சந்திரன் அமர்ந்திருக்க நெற்றிக்கண்ணானது திலகமாகவும், காதுகளிலும், மார்புகளிலும் இருந்த சர்ப்பங்கள் பொற் குண்டலங்களாயி ன. வாசனை மலரும் சந்தனங்களாயின சாம் பல், யானைத் தோல் பட்டாடைகளாக மாற்றம் பெற்றன.

இதுநாள் வரை எளிமையான உருவத்தில் காணப்பட்டவர் இந்த திருமணத் தோற்றத்தில் எம்பெருமானின் அழகு மிகவும் மிகையுற்றது. சிவபெருமானின் அருளாலே அவரின் உடலில் இருந்த இயற்கையே அவருக்கு சிறந்த ஆபார ணமாக விளங்கியது. இவருடைய இயற்கை யான ஆபரணங்கள் முன்னர் குபேரன் எடுத்து வந்த ஆபரணங்கள் யாவும் முக்கிய பொருட் டாக தெரியவில்லை.

மணமகன் தோற்றத்தில் எவராலும் எக்காலத் திலும் எவ்விதத்திலும் எடுத்து சொல்வதற்கு சொற்கள் இல்லாமல் மிகுந்த கலாதியுடன் காணப்பட்டார் எம்பெருமான். அசுரலோகத்தி ல் இருக்கும் தாரகாசுரனுக்கு புரியும் விதத்தி ல் அதாவது, எம்பெருமானும் பார்வதி தேவி யும் மணம் செய்து கொண்டாலும் அவர்களு க்கு புத்திர பாக்கியம் என்பது இல்லை என சுக்கிராச்சாரியார் கூறினார்..

ஓம் நமசிவாய…
தென்னாடுடைய சிவனே போற்றி…
சிவபுராணம் நாளை தொடரும்…